கல்லூரிக் கீதம் |
Saturday, 26 May 2012 18:45 |
பல்லவி
யாழ்ற்ரன் மணிக்கொடி பாரீர் - அதைத் தாழ்ந்து பணிந்து புகழ்ந்திட வாரீர்!
சரணங்கள் ஓங்கி வளர்ந்ததோர் கம்பம் - அதன் உச்சியின்மேல் யாழின் வடிவ மொன்றே பாங்கி னெழுதித் திகழும் செய்ய பட்டொளி வீசிப் பரந்தது பாரீர் [யாழ்ற்ரன்]
அந்தகன் கருவியு மோர்பால் - அதில் அருக்கன் உதய ஒழியு மோர்பால் நீலம் நடுவுறத் தோன்றும்- அதன் நிகரை வகுத்திட வல்லவன் யாரோ? [யாழ்ற்ரன்]
கம்பத்தின் கீழ்நிற்றல் காணீர்- எங்கும் காணரும் மாணவர் பெருந்திருக்கூட்டம் கற்றற் குரியரவ் வீரர்- தங்கள் கல்விக் கழகக் கொடியினைக் காப்பார் [யாழ்ற்ரன்]
சேர்ந்ததைக் காப்பது காணீர் - அவர் சிந்தையின் வீரம் நிரந்தரம் வாழ்க தேர்ந்தவர் போற்றும் கருவி - வாணி தேவியின் வாக்கு சிறப்புற வாழ்க [யாழ்ற்ரன்] |