Our Principal

Banner

Past Principals

  • Mr.K.Kanagasabai
  • Mr.A.Karunananthan
  • Mr.K.Sivaraja
  • Mr.M.Vaithiyanathan
  • Mr.K.Kailainathan
  • Mr.N.Veluppillai
  • Mr.K.K.Nadaraja
  • Mr.S.Pathmanathan
  • Mr.K.K.Senathiraja
  • Mr.N.Paramasivam
  • Mr.K.Somasekaram
வள நிலையங்கள் (Resource Centres)
Thursday, 21 October 2010 19:52

கணினிக் கற்கை நிலையம் ( Computer Learning Centre)

கணனிக் கற்கை நிலையமானது 36 கணினிகளை உள்ளடக்கியதான தீவகக் கல்வி வலயத்திலுள்ள பாடசாலைகளில் ஒரு தலை சிறந்த கணினிக் கற்கை நிலையமாக உள்ளது. இதில் தரம் 10, 11 மாணவர்களுக்கான ICT பாடங்கள், உயர்தர மாணவர்களுக்கான ICT, GIT ஆகிய பாடங்களும் இக்கணினிக் கற்கை நிலையத்தினூடாக கற்பிக்கப்படுகின்றது. இந்நிலையம் மாணவர்களுக்கான computer theory கற்பிப்பதற்கான ஒரு theory room ஐயும் கொண்டுள்ளது.

 

பல்லூடக அறை (Multimedia Room)

இங்கு Interactive Board, Documentary Camera என்பவற்றைக் கொண்ட ஒரு சிறந்த கற்றலுக்கான வள நிலையமாகக் காணப்படுகின்றது. மாறி வரும் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்றவாறு மாணவர்கள் கற்றலை மேற்கொள்ள இவ்விரு நிலையங்களும் செயற்படுகின்றன.

 

நூலகம்

ஏறக்குறைய 5000 நூல்களைக் கொண்ட சிறந்த ஒரு நூலகமாக எமது கல்லூரி நூலகம் திகழ்கின்றது. இதில் கூடுதலாக மாணவர்களின் பொதுப் பரீட்சைக்கு தயார்ப்படுத்துவதற்கு ஏற்றதான நூல்கள் சேகரித்து வைக்கப்பட்டுள்ளன. இந்நூலகம் உசாத்துணைப் பகுதி, இரவல் கொடுக்கும் பகுதி, சஞ்சிகைப் பகுதி, அரும்பொருட்காட்சியகப் பகுதி ஆகியவற்றைக் கொண்டுள்ளது. இவ்வரும்பொருட்காட்சியகத்தில் எழுத்தாணியால் எழுதப்பட்ட ஏட்டுச் சுவடிகளும் காணப்படுவது குறிப்பிடத்தக்க அம்சமாகும். நாள்தோறும் கல்லூரி மாணவர்கள் நூலகத்தை சிறந்த முறையில் பயன்படுத்தி வருகின்றார்கள்.

 

விஞ்ஞான ஆய்வுகூடம்

நன்கு ஒழுங்குபடுத்தப்பட்ட முறையில்(5S முறையில்) உள்ள எமது கல்லூரி விஞ்ஞான ஆய்வுகூடம் மாணவர்கள் விஞ்ஞான பாடத்தினை சிறந்த முறையில் கற்பதற்கு துணை நிற்கின்றது. விஞ்ஞான பாடத்தில் வருகின்ற சகல பரிசோதனைகளும் மாணவர்கள் மூலம் ஆசிரியர்களால் செய்விக்கப்படுகின்றன. 2014 ஆம் ஆண்டு விஞ்ஞான ஆய்வுகூடங்களை சிறந்த முறையில் பேணுவதற்கான விருதினையும் எமது கல்லூரி விஞ்ஞான ஆய்வு கூடம் பெற்றுள்ளது.

 

கணித ஆய்வுகூடம்

கணித பாடத்தினை செயல் மூலம் கற்பதற்கு ஏற்றவாறு இவ்வாய்வு கூடம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. மாணவர்கள் கூடுதலாக இடர்படும் கேத்திரகணிதப் பகுதியை நன்கு விளங்கக்கூடிய வகையில் கற்பதற்கு ஏற்ற காட்சிப்படங்களும் இவ்வாய்வு கூடத்தில் காணப்படுகின்றது. மேலும் பல்வேறு கணிதவியலாலர்களினதும் படங்களையும் உள்ளடக்கியுள்ளது.

 

English Activity Room

இங்கு ஆங்கில பாடத்தினை மாணவர்கள் எளிய முறையில் கற்பதற்கு ஏற்றவாறான சாதனங்கள் Spoken English இற்கு ஏற்றவாறான தொழில்நுட்பச் சாதனங்கள் என்பவற்றையும், பல்வேறு வகையான செயலட்டைகளையும் இவ் Activity Room கொண்டுள்ளது.

 

ஏனைய பாட அலகுகள்

அழகியற்பாடங்கள், சமூக விஞ்ஞானத்திற்கான அறைகள், மற்றும் உயர்தர வகுப்பு மாணவர்களுக்கான பௌதீக மற்றும் இரசாயன ஆய்வுகூடங்களையும் கல்லூரி தன்னகத்தே கொண்டுள்ளது.

 

பாட அலகு வலயங்கள் (Subjects Zone)

மாணவர்கள் கணிதம் விஞ்ஞானம் தமிழ் ஆகிய பாடங்களில் காணப்படும் அடிப்படையான எண்ணக்கருக்களை இலகுவில் விளங்கிக்கொள்ளவும் ஞாபகத்தில் வைத்திருப்பதற்கு ஏற்றவாறு கல்லூரி வளாகத்தில் மாணவர்கள் கூடிய நேரம் பயன்படுத்தும் பகுதிகளில் மேற்படி பாடங்களுக்கான விளக்கப்படங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. இவை கணித வலயம் (Mathematics Zone), விஞ்ஞான வலயம் (Science Zone), தமிழ்ப் பூம்பொழில் (Tamil Zone) எனப்பெயரிடப்பட்டுள்ளன. மேலும் விஞ்ஞான பாடத்தில் வரும் பல்வேறு வகையான தாவரங்கள் வளர்க்கப்பட்ட ஒரு சிறு தாவரவியல் பூங்காவும்(Botanical Garden) அமைக்கப்பட்டுள்ளது.

 

Dance Room

 

Art Room

 

Social Science Room

 

Music Room

 

Special Education Unit


 


Powered by Joomla!.