Our Principal

Banner

Past Principals

  • Mr.K.Kanagasabai
  • Mr.A.Karunananthan
  • Mr.K.Sivaraja
  • Mr.M.Vaithiyanathan
  • Mr.K.Kailainathan
  • Mr.N.Veluppillai
  • Mr.K.K.Nadaraja
  • Mr.S.Pathmanathan
  • Mr.K.K.Senathiraja
  • Mr.N.Paramasivam
  • Mr.K.Somasekaram
க.பொ.த (உயர் தரம்) 2016 பரீட்சையில் தீவகக் கல்வி வலயத்தில் கல்லூரி முதல்நிலைப் பெறுபேறுகளைப் பெற்றுக்கொண்டது
Saturday, 21 January 2017 08:16

கடந்த ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற க.பொ.த உயர்தரப் பரீட்சையில் வர்த்தகப் பிரிவில் யாழ்ற்ரன் கல்லூரி மாணவி செல்வி மனோகரி சுப்பிரமணியம் 3 பாடங்களிலும் A சித்திகளைப் பெற்றும், மாவட்ட மட்டத்தில் 39வது நிலையைப்பெற்றும் யாழ்ற்ரன் கல்லூரி வரலாற்றில் முதல் தடவையாக க. பொ. த உயர்தரப் பரீட்சையில் 3A பெற்ற மாணவியாகவும், தீவகக் கல்வி வலயத்தில் இவ்வாண்டு முதல்நிலை பெற்ற மாணவியாகவும் திகழ்கிறார்.

மேலும் செல்வி. கருணிதா யோகராசா வர்த்தகப்பிரிவில் 2 A 1B சித்திகளையும் பெற்று மாவட்ட மட்டத்தில் 81வது இடத்தையும் பெற்றுள்ளார். இவ்விரு மாணவிகளும் இலங்கைப் பல்கலைக்கழக முகாமைத்துவப் பீடத்துக்கு தெரிவாவர்.

வர்த்தகப்பிரிவில் ஏனைய மாணவர் பெறுபேறுகள்

1. செல்வி. சிவகௌரி மயில்வாகனம் - 2B 1C

2. செல்வன். திருஞானசம்பந்தன் ரஜீவன் - 3S

வர்த்தகப்பிரிவில் இம்முறை 4 மாணவர்கள் தோற்றி 4 மாணவர்களும்(100%) பல்கலைக்கழக அனுமதிக்குத் தகைமை பெற்றுள்ளனர்.

விஞ்ஞானப்பிரிவுப் பேறுகள்

1. செல்வி. காயத்திரி ஆனந்தராசா - 2C 1S

2. செல்வன். சிவகுமாரன் சர்வணன் - 2C 1S

3. செல்வி. ஆரணி தர்மலிங்கம் - 2C 1S

விஞ்ஞானப்பிரிவிலும் 3 மாணவர்கள் தோற்றி மூவரும்(100%) பல்கலைக்கழக அனுமதிக்குத் தகைமை பெற்றுள்ளனர். எனினும் சென்ற ஆண்டுக்கான வெட்டுப்புள்ளிகளின் பிரகாரம் விஞ்ஞானப் பிரிவில் முதல் 2 மாணவர்களும் பல்கலைக்கழகத்திற்குத் தெரிவாவர் என எதிர்பார்க்கப்படுகிறது.

கலைப்பிரிவுப் பெறுபேறுகள்

1. செல்வி. சசிகலா அம்பலவாணர் - 2B 1S

2. செல்வி. யுகன்யா கோணேஸ்வரன் - 1B 2C

3. செல்வி. லக்ஷிகா நவரட்ணம் - 1B 2S

4. செல்வி. சர்மினி சண்முகசுந்தரம் - 1C 2S

5. செல்வி. தர்ஜிகா விக்னேஸ்வரன் - 1C 2S

6. செல்வி. தனவதி சண்முகவடிவேல் - 2C

7. செல்வி. வனிதா ரவிக்குமார் - 1S

கலைப்பிரிவிலும் செல்வி சசிகலா அம்பலவாணர் சென்ற ஆண்டு வெட்டுப்புள்ளியின் பிரகாரம் பல்கலைக்கழகத்திற்குத் தெரிவாவார் என எதிர்பார்க்கப்படுகிறது. கலைப்பிரிவில் 7 மாணவர்களில் 5 பேர்(71.4%) பல்கலைக்கழக அனுமதிக்குத் தகைமை பெற்றுள்ளனர். யாழ்ற்ரன் கல்லூரியில் 2016 ஆம் ஆண்டுக்கான உயர்தரப்பரீட்சையில் மொத்தம் 14 மாணவர்கள் தோற்றி 12 பேர்(85.7%) பல்கலைக்கழக அனுமதிக்குத் தகைமை பெற்றுள்ளனர். இம்முறை மொத்தம் 5 மாணவர்கள் பல்கலைக்கழகத்திற்கு அனுமதி பெறுவார்கள் (வெட்டுப்புள்ளி வெளியிடப்பட்டதன் பின்னர் உறுதிப்படுத்தப்படும்). பல்கலைக்கழக அனுமதிக்குத் தகைமை பெறும் மாணவர்களையும், அவர்களுக்குக்கற்பித்த ஆசிரியர்களையும் கல்லூரி அதிபர் திரு. வே. முருகமூர்த்தி அவர்கள் பாராட்டுகிறார்.

சென்ற ஆண்டு 4 மாணவர்கள் பல்கலைக்கழகத்திற்குத் தெரிவானர்.

கலைப்பீடம் - 1 மாணவி

நுண்கலைப்பீடம் - 2 மாணவர்கள்

கைத்தொழில் தொடர்பாடல் தொழில்நுட்ப பீடம் - 1 மாணவி (ஊவா வெல்லச பல்கலைக்கழகம், பதுளை)

 
மாணவத் தலைவர்களுக்கான சின்னம் சூட்டும் விழா 2016, சுற்றாடல் முன்னோடிக்கழக மாணவர்களுக்கான சின்னம் சூட்டும் விழா
Monday, 14 November 2016 22:40

கல்லூரியின் 2016 ஆம் ஆண்டுக்கான புதிய மாணவத் தலைவர்களுக்கானதும், சிரேஷ்ட மாணவத்தலைவர்களுக்கானதுமான சின்னம் சூட்டும் விழா 2016-11-04 ஆம் திகதி மு.ப. 8.30 மணிக்கு கல்லூரி அதிபர் திரு. வே. முருகமூர்த்தி அவர்கள் தலைமையில் ஆரம்பமாகி நடைபெற்றது. இந்நிகழ்வின் பிரதம விருந்தினராக தீவகக் கல்வி வலயத்தின் முறைசாராக் கல்விப்பிரிவிற்கான உதவிக்கல்விப்பணிப்பாளர் திரு. ப. ஆரூரன் அவர்களும், சிறப்பு விருந்தினராக பிரதேச சுற்றாடல் முன்னோடிக்கழக உத்தியோகத்தர் திருமதி. S. சசிலன் அவர்களும், கௌரவ விருந்தினராக கருங்காலி வர்த்தகர் திரு. ச. குகதாசன் (yarltonian) அவர்களும் கலந்து சிறப்பித்தனர். சிரேஷ்ட மாணவத்தலைவர்கள், மற்றும் ஏனைய புதிய மாணவத்தலைவர்கள் சின்னங்கள் அணிவிக்கப்பட்டும், தொடர்ந்து சுற்றாடல் முன்னோடிக்கழக மாணவர்கள் பச்சை வர்ணப்பதக்கம் அணிவிக்கப்பட்டும் கௌரவிக்கப்பட்டனர்.

பிரதம விருந்தினரான முறைசாராக் கல்விப்பிரிவின் பிரதிக்கல்விப் பணிப்பாளர் திரு. ப.ஆரூரன் அவர்கள் 15-11-2016 இல் ஓய்வுபெற இருப்பதையிட்டு அவரது சேவையை கௌரவிக்கும் முகமாக பொன்னாடை போர்த்து, வாழ்த்துப்பா வழங்கி கௌரவிக்கப்பட்டார்.

பிரதம விருந்தினர் அவர்கள் பொன்னாடை போர்த்து, வாழ்த்துப்பா வழங்கி கௌரவிக்கப்படுகிறார்

 
பாராட்டி வாழ்த்துகிறோம்
Saturday, 12 November 2016 00:34

எமது கல்லூரியின் கணித ஆசிரியர் திரு. ஆறுமுகம் யோகலிங்கம் அவர்கள் இலங்கைக் கல்வி நிர்வாக சேவைப் பரீட்சையில் (தரம் III) சித்தியடைந்துள்ளார். இவரது வெற்றிக்காக கல்லூரிச் சமூகம் தனது பாராட்டுக்களைத் தெரிவிப்பதோடு இவர் மேலும் பதவி உயர்வுகளைப்பெற  தனது வாழ்த்துக்களைத் தெரிவிக்கின்றது. ஏற்கனவே இவர் இலங்கை அதிபர் சேவைப்பரீட்சையில்(தரம் III) சித்தியடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. இவர் காரைநகர் களபூமியைச் சேர்ந்த ஓய்வுபெற்ற ஆசிரியர் ஆறுமுகம் தம்பதிகளின் கனிஷ்ட புதல்வராவார்.

 
மிகவும் கோலாகலமாக நடைபெற்ற கல்லூரியின் பரிசளிப்பு விழா -2016
Saturday, 29 October 2016 20:58

விழா ஆரம்பம்

கல்லூரியின் 2016 ஆம் ஆண்டுக்கான பரிசளிப்பு விழா 2016.10.23 ஆம் திகதி மு.ப.9.00 மணிக்கு கல்லூரி அதிபர் திரு.வே.முருகமூர்த்தி அவர்கள் தலைமையில் நடைபெற்றது. பிரதம விருந்தினராக வடமாகாணக்கல்வித் திணைக்களத்தின் மேலதிக மாகாணக்கல்விப் பணிப்பாளர் (கல்வி அபிவிருத்தி) திருமதி. பிரேமாவதி செல்வின் இரேனியஸ் அவர்களும் சிறப்பு விருந்தினராக தீவகக் கல்வி வலயத்தின் பிரதிக்கல்விப்பணிப்பாளர்(நிர்வாகம்) திரு.ச.பாஸ்கரன் அவர்களும் கௌரவ விருந்தினர்களாக சுவிஸ் பிரபல வர்த்தகர் (Yarltonian) திரு.சு.கதிர்காமநாதன் அவர்களும், காரைநகர் இ.போ.ச சாலை பொறியியல் பகுதி முகாரி திரு.தி.ஏகாம்பரநாதன்(Yarltonian) அவர்களும் கலந்து சிறப்பித்தனர்.

விழா ஆரம்பமாவதற்கு முன்னர் கல்லூரியில் புதிதாக ஆரம்பிக்கப்பட்ட இன்னிய பழம்பெரும் கலைகளான பொம்மலாட்டம், குதிரையாட்டம், மயிலாட்டம், கோலாட்டம் என்ற கல்லூரி மாணவர்களின் வரவேற்புடனும், மற்றும் மாணவத்தலைவர் அணி, பான்ட் இசைக்குழு சகிதம் விருந்தினர்கள் அழைத்து வரப்பட்ட காட்சி மிகவும் சிறப்பாக இருந்தது. கல்லூரி அதிபர், ஆசிரியர்கள், பழைய மாணவர்கள் பெற்றோர்கள் ஆகியோர் வரவேற்பு ஊர்வலத்தில் கலந்து கொண்டனர்.

தேசியக்கொடி, கல்லூரிக்கொடி ஏற்றலுடன் விழா இனிதே ஆரம்பமானது.

 

கௌரவ விருந்தினர் திரு.சு.கதிர்காமநாதன் அவர்கட்கான கௌரவிப்பு

இம்முறை இவ்விழாவில் கௌரவ விருந்தினராகக் கலந்து சிறப்பித்தவரும் கல்லூரிக்கு அளப்பெரிய சேவைகளைச் செய்தவருமான காரைமக்களால் சுவிஸ்நாதன் என அழைக்கப்படும் திரு.சுப்பிரமணியம் கதிர்காமநாதன் அவர்களுக்கு பொன்னாடை போர்த்து மாலை அணிவித்து வாழ்த்துப்பா வழங்கி கௌரவிக்கப்பட்டது.

கல்லூரியின் சங்கீதத்துறை ஆசிரியை செல்வி. லீலாவதி இராஜரட்ணம் அவர்களின் தனித்துவம் மிக்க குரலினால் வாழ்த்துப்பா பாடப்பட்டு விழாவின் பிரதம விருந்தினரால் வழங்கி கௌரவிக்கப்பட்டது.

அதிபர் தனது பரிசுத்தின அறிக்கையில் திரு.சுப்பிரமணியம் கதிர்காமநாதன் அவர்கள் கல்லூரிக்குச் செய்த சேவைகளைப் பாராட்டி தனது உளங்கனிந்த நன்றிகளைத் தெரிவித்தார்.

பரிசளிப்பு விழாவின் நிதி அனுசரணையாளர்

வைத்திய கலாநிதி (திருமதி) ஸ்ரீதாரணி விமலன் (கனடா) குடும்பத்தினர் அமரர் வை.காசிப்பிள்ளை ஞாபகார்த்தமாக பரிசுத்தினத்திற்கான நிதி அனுசரணையாளராக 12 ஆண்டுகாலம் செயற்பட்டுக்கொண்டு வருகின்றனர். இதன்மூலம் நடைபெறும் பரிசளிப்பு விழாவினால் மாணவர்கள் கல்வியில் ஊக்குவிக்கப்படுகின்றமை மட்டுமன்றி பல்கலைக்கழகம் செல்லும் மாணவர்களும் பரிசில்கள் வழங்கி கௌரவிக்கப்படுகின்றனர். அதிபர் தனதுஅறிக்கையில் திருமதி ஸ்ரீதாரணி விமலன் குடும்பத்தினருக்கு நன்றிகளையும் பாராட்டுக்களையும் தெரிவித்துள்ளார்.

ஞாபகார்த்தப் பரிசில்கள்

  1. இப்பரிசுத்தின அறிக்கையில் ஞாபகார்த்தப்பரிசில்களை வழங்கிவரும் கனடாவில் வசிக்கும் அமரர் கந்தையா கணேசன் (தேர்க்காரர்) அவர்களின் பிள்ளைகள் (கனடா) தமது தந்தையார் அமரர் கணேசன் ஞாபகார்த்தமாக தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடையும் மாணவர்களுக்கான பரிசில்களையும்
  2. Colombo Quiency Distibuters உரிமையாளர்  திரு.S.கணநாதன் அவர்கள் தனது பேரனார் அமரர் கணபதிப்பிள்ளை (தலைப்பா) அவர்கள் ஞாபகார்த்தமாக க.பொ.த சாதாரணதரப் பரீட்சையில் சிறப்புத்தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கான பரிசில்களையும்
  3. கல்லூரியின் முன்னாள் ஆசிரியர் திரு.வெ. ஏகாம்பரநாதன் அவர்கள் கல்லூரியின் முகாமையாளர் A.T. ஆறுமுகம் ஞாபகார்த்தமாக அதிகூடிய புள்ளிகளைப்பெற்று பல்கலைக்கழக அனுமதிபெறும் மாணவர்களுக்கான  ஞாபகார்த்தப் பரிசில்களையும்

வழங்கி வருகின்றனர். இஞ்ஞாபகார்த்தப் பரிசில்களை வழங்கி வருபவர்களுக்கு அதிபர் தனது நன்றிகளைத் தெரிவித்தார்.

நிறைவுரை

அதிபர் தனது நிறைவுரையில் கல்லூரியின் அரசு சார்பான செயற்றிட்டங்களுக்கு பூரணமான ஒத்துழைப்பினை வழங்கிவரும் சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சர் கௌரவ திருமதி. விஜயகலா மகேஸ்வரன் அவர்களுக்கும் தனது நன்றி பாராட்டினைத் தெரிவித்தார்.

ஆறு மாதத்திற்கு ஒரு தடவை ரூ30000 பணத்தினை ஆரம்பக்கல்வியின் கற்றல் செயற்பாட்டிற்காக வழங்கி வரும் கனடா காரை கலாச்சார மன்றத்தினருக்கும் அதிபர் தனது மனமார்ந்த நன்றியினைத் தெரிவித்தார்.

பிரதம விருந்தினர், சிறப்பு விருந்தினர், கௌரவ விருந்தினர்களின் உரைகளைத் தொடர்ந்து மாணவர்களுக்கான பரிசில்கள் வழங்கப்பட்டன. மேலும் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்கள், க.பொ.த சா.த பரீட்சையில் சிறப்புத்தேர்ச்சிகளைப் பெற்ற மாணவர்கள் ஆகியோர் நினைவுச்சின்னங்கள் வழங்கப்பட்டும் ஒவ்வொரு வகுப்பிலும் முதல் நிலைபெறும் மாணவர்கள் பதக்கங்கள் அணிவிக்கப்பட்டும் கௌரவிக்கப்பட்டனர்.

பல்கலைக்கழகம் செல்லும் மாணவர்களுக்கு பணம் வைப்புச்செய்யப்பட்டு சேமிப்புப் புத்தகம் வழங்கப்பட்டது. மாணவர்களின் கலை நிகழ்வுகளும் இடம்பெற்றன. 175 மாணவர்கள் பரசில்கள் பெற்றுக்கொண்டனர் 90% க்கு மேற்பட்ட பெற்றோர் விழாவில் கலந்து சிறப்பித்தமை குறிப்பிடத்தக்க அம்சமாகும்.

Read more...
 
தரம் 4, 5 மாணவர்களின் களப்பயணம்
Sunday, 29 May 2016 13:55

கல்லூரியின் தரம் 4, 5 மாணவர்களின் களப்பயணம் 25.05.2016 புதன்கிழமை மு.ப 6.30 மணியளவில் கல்லூரி முன்றலிலிருந்து ஆரம்பமாகியது. கல்லூரியின் அதிபர் தலைமையில் ஏனைய மூன்று ஆசிரியர்களும், பெற்றோர் சார்பாக ஆறுபேரும், மாணவர்கள் 60 பேரும் பங்குபற்றினர்.

இக்களப்பயணத்தில் பங்குபற்றியோர் மாதகல் சம்பில்துறை, கீரிமலை சிவன்கோவில், மாவிட்டபுரம் கந்தசுவாமி கோவில், திருநெல்வேலி அரச விவசாயப்பண்ணை, யாழ்ப்பாணம் சிறுவர் பூங்கா, யாழ்ப்பாணம் புகையிரத நிலையம், யாழ்ப்பாணம் ஒல்லாந்தர் கோட்டை, உடுவில் பழரசத் தொழிற்சாலை ஆகியவற்றைப் பார்வையிட்டனர்.

 
கல்லூரியில் உதைபந்தாட்டப் பயிற்சிகள் ஆரம்பமாகின
Sunday, 15 May 2016 23:39

கல்லூரியின் உதைபந்தாட்டக் குழுவை அமைக்கும் பொருட்டு 13 வயதிற்குட்பட்ட மற்றும் 15 வயதிற்குட்பட்ட மாணவர்களுக்கான உதைபந்தாட்டப் பயிற்சிகள் பயிற்றுனர் திரு. S. கருணாகரன் அவர்களால் 09-05-2016 அன்று மு. ப. 9.30 மணிக்கு ஆரம்பித்து வைக்கப்பட்டன. இதற்கான ஆரம்ப நிகழ்வுகள் கல்லூரியின் பிரதான மண்டபத்தில் கல்லூரி அதிபர் தலைமையில் நடைபெற்றன. கல்லூரி அதிபர் தனது உரையில் கல்லூரியில் ஒரு சிறந்த உதைபந்தாட்டக் குழுவை ஏற்படுத்தும் பொருட்டு இப்பயிற்சிகள் பயிற்றுனர் திரு. S. கருணாகரன் அவர்களால் இன்று ஆரம்பித்து வைக்கப்படுகின்றன எனக்குறிப்பிட்டார். இதை ஒழுங்குபடுத்தி உதவிய ஆசிரியர் திரு. த. சிவசோதி அவர்களுக்கு அதிபர் தனது நன்றிகளைத் தெரிவித்தார்.

விளையாட்டு மைதானத்தில் அதிபர் மற்றும் பயிற்றுனர் உதைபந்தாட்ட வீரர்களுடன்

 
« StartPrev12345678910NextEnd »

Page 3 of 26


Powered by Joomla!.