Our Principal

Banner

Past Principals

  • Mr.K.Kanagasabai
  • Mr.A.Karunananthan
  • Mr.K.Sivaraja
  • Mr.M.Vaithiyanathan
  • Mr.K.Kailainathan
  • Mr.N.Veluppillai
  • Mr.K.K.Nadaraja
  • Mr.S.Pathmanathan
  • Mr.K.K.Senathiraja
  • Mr.N.Paramasivam
  • Mr.K.Somasekaram
யாழ்ற்ரன் கல்லூரி தேசிய மட்டத்தில் வரலாறு காணாத வெற்றிகளைப் பெற்றுக்கொண்டது
Thursday, 13 December 2012 00:53
1. சமுர்த்தி அதிகார சபையினரால் நடாத்தப்பட்ட தேசிய மட்டத்திலான கலாசாரப் போட்டியில் யாழ்ற்ன் கல்லூரி மாணவிகள் கரக நடனம் போட்டியில் 3 ம் இடத்தினைப் பெற்றுக் கொண்டனர்.
2. இதே போட்டியில் மாணவன் ச.ஜீவதாஸ் நாட்டார் பாடலில் 3 ம் இடத்தைப் பெற்றுக் கொண்டார்.
இம்மாணவர்களையும் இம்மாணவர்களைப் பயிற்றுவித்த நடன ஆசிரியை திருமதி.சகிலா சுதாகரன், சங்கீத ஆசிரியை செல்வி. லீலாவதி இராசரத்தினம் ஆகியோருக்கு கல்லூரி அதிபர் தனது பாராட்டுக்களையும் நன்றிகளையும் தெரிவிக்கிறார்.
Read more...
 
புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தி பெற்ற மாணவர்களுக்கான பாராட்டு விழா - 2012
Wednesday, 28 November 2012 01:39

காரைநகர் யாழ்ற்ரன் கல்லூரியில் புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தி அடைந்த தரம் 5 மாணவர்களுக்கான பாராட்டு விழா கல்லூரி அதிபர் திரு.வே.முருகமூர்த்தி அவர்கள் தலைமையில் 26/11/2012 காலை 8.30 மணிக்கு கல்லூரி மண்டபத்தில் மிகவும் கோலாகலமாக நடைபெற்றது. பிரதம விருந்தினராக காரைநகர் கோட்டக் கல்விப் பணிப்பாளர் திரு.பு.ஸ்ரீவிக்னேஸ்வரன் அவர்களும், சிறப்பு விருந்தினராக தீவக வலய ஆரம்பப் பிரிவு சேவைக்கால ஆலோசகர் திரு.மு.கேசவன் அவர்களும் கலந்து சிறப்பித்தனர். மேலும் தீவக வலயத்தின் அழகியற் கல்விக்குப் பொறுப்பான உதவிக் கல்விப் பணிப்பாளர்  திருமதி.ம. கனகசபை, கல்லூரியின் பழைய மாணவர் சங்கச் செயலாளர் திரு.ந.பரமசிவம் ஆகியோரும் கௌரவ விருந்தினராக கலந்து கொண்டனர். அதிபர், பிரதம விருந்தினர், சிறப்பு விருந்தினர் மற்றும் அழகியற் கல்வியின் உதவிக் கல்விப் பணிப்பாளர், பழைய மாணவர் சங்கச் செயலாளர், பெற்றோர் சார்பாக திரு.S. சோமசுந்தரக் குருக்கள் ஆகியோர் வாழ்த்துரைகளை வழங்கினர். தொடர்ந்து புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களுக்கான நினைவுச் சின்னம், சான்றிதழ்கள், புத்தகப்பரிசில்கள் ஆகியவை வழங்கி பாராட்டப் பெற்றனர். அத்துடன் பரீட்சையில் 100 புள்ளிகளுக்கு மேல் புள்ளி பெற்ற மாணவர்களுக்கும் பரிசில் வழங்கப்பட்டு பாராட்டப் பெற்றனர். வாழ்த்துரைகளை வழங்கிய அனைவரும் யாழ்ற்ரன் கல்லூரியில் 2 தசாப்தங்களுக்குப் பின் ஏற்பட்ட ஒரு பெரும் சாதனை கல்லூரியில் 12 மாணவர்கள் புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தி அடைந்தமை எனச் சுட்டிக் காட்டினர். மாணவர்களின் அடைவு மட்ட முன்னேற்றத்திற்கும் கல்லூரியின் அபிவிருத்திக்கும் கல்லூரி அதிபர் எடுத்து வரும் முயற்சிகளைப் பாராட்டிப் பேசினர். இவ்வைபவத்தில் இம்மாணவர்களைக் கற்பித்த ஆசிரியர்களான திரு.மு.சுகந்தன், செல்வி.ந.சகுந்தலாதேவி ஆகியோர் பெற்றோரால் கௌரவிக்கப்பட்டனர். அத்துடன் நினைவுச் சின்னம் மற்றும் பரிசுப் பொருள் அனுசரணையாளர்கள்

1. திரு. கந்தையா கணேசன், வாரிவளவு, காரைநகர் (கனடா) - நினைவுச் சின்னங்களுக்கான அனுசரணையாளர்
2. திரு.S. கணநாதன், தங்கோடை, காரைநகர் (கொழும்பு) - புத்தகப் பரிசில்களுக்கான அனுசரணையாளர்
3. பெற்றோர்கள் - ஆசிரியர்களுக்கான பாராட்டு
இவ்வனுசரணையாளர்களுக்கு அதிபர் தனது மனமார்ந்த நன்றிகளை நேற்றைய தினம் தெரிவித்துப் பேசினார்.
 
நுண்ணறிவுத் திறன் போட்டியில் யாழ்ற்ரன் கல்லூரி முதலிடம்
Sunday, 04 November 2012 19:57
தீவக வலய மட்டத்தில்  நுண்ணறிவுத்திறன் போட்டியில் யாழ்ற்ரன் கல்லூரி மாணவர் குழு முதலாமிடத்தைப் பெற்று மாகாண மட்டப் போட்டிகளுக்குத் தெரிவாகியுள்ளது. பின்வரும் மாணவர்கள் போட்டியில் கலந்து கொண்டனர்.

ம.சதீஸ்வரன்
சு.கடல்வேந்தன்
மோ. நவமயூரன்
சோ.கிருபாலினி

இம்மாவர்களையும் அவர்களைப் பயிற்றுவித்த ஆசிரியர் திரு.சுகந்தன் அவர்களையும் கல்லூரி அதிபர் திரு.வே.முருகமூர்த்தி அவர்கள் பாராட்டுகிறார்.
 
வாணிவிழா- 2012
Sunday, 28 October 2012 00:00
24.10.2012 புதன்கிழமை காரைநகர் யாழ்ற்ரன் கல்லூரியில்  அதிபர் திரு.வே.முருகமூர்த்தி தலைமையில் நடைபெற்ற வாணிவிழாவில் பிரதம விருந்தினராக காரைநகர் தபாலக தபால் அதிபர் திரு.நா. ஜீவநாதன் அவர்கள் பிரதம விருந்தினராகக் கலந்து கொணடு சிறப்பித்தார். மேலும் காரைநகர் இலங்கை வங்கிக் கிளையின் உதவி முகாமையாளர் திரு.S.நவரட்ணராஜா, தேசிய சேமிப்பு வங்கிக் கிளை முகாமையாளர் திரு.S.கங்காதரன், பழைய மாணவர்சங்க அங்கத்தவர் திரு ஏ.சிற்சபேசன் ஆகியோரும் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
விழாவில் அதிபரும் மற்றும் விருந்தினரும் சிறப்புரையாற்றினார்கள். மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் விழாவில் பெரும் எடுப்புடன் நடைபெற்றன.
 
காரைநகர் யாழ்ற்ரன் கல்லூரியின் 2011ம் ஆண்டுக்கான பரிசுத்தின நிகழ்ச்சிகள்
Sunday, 30 September 2012 20:36

காரைநகர் யாழ்ற்ரன் கல்லூரியின் 2011ம் ஆண்டுக்கான பரிசுத்தின நிகழ்ச்சிகள் 29.09.2012 சனிக்கிழைமை காலை 9 மணிக்கு கல்லூரி அதிபர் திரு வே.முருகமூர்த்தி அவர்களின் தலைமையில் கோலாகலமாக ஆரம்பமாகின.

பிரதம விருந்தினராக கொழும்புப் பல்கலைக்கழக சட்டபீட விரிவுரையாளர்  திரு.அ.சர்வேஸ்வரன் அவர்களும், சிறப்பு விருந்தினராக தீவக வலயத்தின் பிரதிக் கல்விப் பணிப்பாளர் திரு.அஸ்ரனிஸ்லாஸ் அவர்களும், கௌரவ விருந்தினராக இ.போ.ச கோண்டாவில் டிப்போ பொறியியல் பகுதி உதவி முகாமையாளர் திரு.தி.ஏகாம்பரநாதன் அவர்களும்  கலந்து கொண்டனர். இந்நிகழ்வில் பெருமளவான பெற்றோர், பழைய மாணவர்கள், மற்றும் கல்வித் திணைக்கள உத்தியோகத்தர்கள் வருகை தந்தனர். நிகழ்ச்சி ஒழுங்கமைப்புக்கள் சிறப்பாக அமைந்திருந்ததாக கலந்து கொண்டோர் தெரிவித்தனர்.

Read more...
 
2012ம் ஆண்டிற்கான புலமைப் பரிசில் பரீட்சையில் தீவக வலயத்தில் யாழ்ற்ரன் கல்லூரி முதலிடம்
Thursday, 27 September 2012 21:39

நடந்து முடிந்த 2012ம் ஆண்டிற்கான புலமைப் பரீட்சையில் யாழ்ற்ரன் கல்லூரியில் 12 மாணவர்கள் சித்தியடைந்துள்ளனர். தீவக வலயத்தில் அதிகூடிய மாணவர்கள் சித்தியடைந்து யாழ்ற்ரன் கல்லூரிக்குப் பெருமை சேர்த்துள்ளனர். சித்தியடைந்த மாணவர்களையும் கற்பித்த திரு.மு.சுகந்தன்ஆசிரியர் மற்றும் செல்வி.ந.சகுந்தலா ஆசிரியை ஆகியோரையும் கல்லூரி அதிபர் திரு.வே.முருகமூர்த்தி அவர்கள் பாராட்டுகின்றார். சித்தியடைந்த மாணவர்களின் பெயர் மற்றும் விபரங்கள் வருமாறு

பெயர் புள்ளிகள்
மோ.நவமயூரன் 173
ம.சதீஸ்கரன் 173
சோ.கிருபாலினி 170
சு.கடல்வேந்தன் 170
சி.ஐஸ்வரியா 164
ச.அபூர்வா 161
செ.கயரூபன் 158
ஆ.பேபிசாமினி 156
வ.சஜீவன் 154
சி.யனுசன் 154
செ.விசாகதீபன் 153
க.தர்ஷிகா 148

 

 
« StartPrev212223242526NextEnd »

Page 21 of 26


Powered by Joomla!.