Our Principal

Banner

Past Principals

  • Mr.K.Kanagasabai
  • Mr.A.Karunananthan
  • Mr.K.Sivaraja
  • Mr.M.Vaithiyanathan
  • Mr.K.Kailainathan
  • Mr.N.Veluppillai
  • Mr.K.K.Nadaraja
  • Mr.S.Pathmanathan
  • Mr.K.K.Senathiraja
  • Mr.N.Paramasivam
  • Mr.K.Somasekaram
மகாஓயா வலயக்கல்வி அலுவலகக் குழுவினர் காரைநகருக்கு விஐயம்
Tuesday, 25 September 2012 00:46

இன்று காரைநகர் யாழ்ற்ரன் கல்லூரிக்கு அம்பாறை மாவட்டத்தின் மகா ஓயா கல்வி வலயத்தின் வலயக்கல்விப் பணிப்பாளர், உதவிக் கல்விப்பணிப்பாளர்கள், சேவைக்கால ஆலோசகர்கள், அவ் வலயத்தின் சில பாடசாலை அதிபர்கள் ஆகியோர் அடங்கிய 50 பேர் கொண்ட குழு வருகை தந்தனர். அக் குழுவினரை கல்லூரி அதிபரும், ஆசிரியர்களும் அன்பாக வரவேற்று காலைக் கூட்டத்தில் மாணவர்களுக்கு அவர்களை அறிமுகம் செய்து அதிபரும் அவ் வலயக் கல்விப்பணிப்பாளர் மற்றும் உதவிக் கல்விப் பணிப்பாளர்கள், தீவகவலயத்தின் பிரதிக்கல்விப்பணிப்பாளர், காரைநகர் கோட்டக் கல்விப் பணிப்பாளர் ஆகியோரும் மாணவர்களுக்கு ஆலோசனைகளையும் கருத்துக்களையும் வழங்கினர்.

இவர்களது வருகையிட்டு யாழ்ற்ரன் கல்லூரி அதிபர்,ஆசிரியர்கள்,மாணவர்கள் தமது மகிழ்ச்சியைத் தெரிவித்தனர். தொடர்ந்து இக் குழுவினர் சுப்பிரமணிய வித்தியாசாலை, சுந்தரமூர்த்திநாயனார் வித்தியாலயம், கலாநிதி தியாகராஜா ம.ம வித்தியாலயம் ஆகியவற்றிற்கும் விஐயம் செய்தனர். இவர்களின் யாழ்ற்ரன் கல்லூரியில் நடைபெற்ற வைபவத்தின் படங்களை இங்கே காண்கிறீர்கள்.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 
வலய, மாவட்ட மட்டப் போட்டிகளில் யாழ்ற்ரன் கல்லூரி சிறப்பிடம்
Saturday, 15 September 2012 00:57

தீவக வலய மட்டத்தில் நடைபெற்ற சமூக விஞ்ஞானப் போட்டியில் யாழ்ற்ரன் கல்லூரி 19 இடங்களைப் பெற்றுக் கொண்டது.

தரம் பெயர் நிலை
6 T.சுரேஷ் 2
6 S.கஜவதணன் 3
7
T.வேணுப்பிரியா
1
7
S.கீர்த்திகா
2
7       
Y.கோபிகா
3
8
S.ரோகினி
1
8       
T.நிசாந்தன்
3
9
T.சயந்தன்
1
9
V.வேதாரணி
3
10
S .மனோகரி
1
10
M .சிவகௌரி
1
10
T.ஆரணி
2
11
K .சுஜிந்தன்
2
11
J .லோஜிகா
3
12
N .சோபிதன்
1
12
T.அம்பிகா
2
12
K .நிலோஜன்
3
13
A .பிருந்தா
1
13
R .கிரிஷா
3

 

இப்போட்டியில் பங்குபற்றிய மாணவர்களையும் அவர்களை நெறிப் படுத்திய ஆசிரியர்களான திருமதி.அ.ராஜசிவம், திருமதி.சி.சுஜிதரன் ஆகியோரையும் அதிபர் பாராட்டுகிறார்.
தீவக வலய மட்டத்தில் நடைபெற்ற வணிகப் போட்டியில் யாழ்ற்ரன் கல்லூரியின் பேறுகள்
தரம் 
போட்டி வகை பெயர் நிலை
10 குழுவினாவிடை ஆ.காயத்திரி 1
அ.சசிப்பிரியா
3
கட்டுரை ம.சிவகௌரி 2
த.ஆரணி 3
பேச்சு த.ஆரணி 2
11 குழுவினாவிடை சி.சர்வணன் 1
கட்டுரை 
அ.திவ்யா 2
பேச்சு 
க.யசோதா 1
இப்போட்டியில் பங்குபற்றிய மாணவர்களையும் அவர்களை நெறிப் படுத்திய ஆசிரியை திருமதி.J.சச்சிதானந்தன் அவர்களையும் அதிபர் பாராட்டுகிறார்.
சமுர்த்தி அலுவலகத்தினால் நடாத்தப்பட்ட கலாசாரப் போட்டியில் யாழ்ப்பாண மாவட்டத்தில் யாழ்ற்ரன் கல்லூரியின் பேறுகள்
போட்டி பெயர் நிலை
நாட்டார் பாடல் ச.ஜீவதாஸ் 1
பெற்றோர் பாடல் ச.ஜீவதாஸ் 3
ச.மேனரூபி 3
கிராமிய நடன குழு கி.கஜந்தினி 1
சு.கஜந்தினி
1
அ.விவேகா 1
க.வினோதினி 1
க.சரண்யா
1
வே.விந்தியா 1
வி.லோஜனா 1
அறிவிப்பாளர் ம.கிருஷிகா 2
இப்போட்டிகளில் பங்குபற்றிய மாணவர்களையும் அவர்களை நெறிப்படுத்திய ஆசிரியர்களான செல்வி.இ.லீலாவதி, திருமதி.சு.சகிலா, திரு.பா.பாலமுரளி ஆகியோருக்கும் தனது பாராட்டுக்களை தெரிவிக்கிறார். மேற்படி போட்டிகளில் முதலிடம் பெற்ற நாட்டார் பாடல் குழு , கிராமிய நடன குழு ஆகியவை தேசிய மட்டப் போட்டிகளில் கலந்து கொள்ள இருக்கின்றன.
 
யாழ்ற்ரன் கல்லூரி மாணவர்கள் முதலாமிடம்
Saturday, 15 September 2012 00:48

யாழ்ற்ரன் கல்லூரி மாணவர்கள் முதலாமிடம்

தீவக வலய மட்டத்தில் நடைபெற்ற திருக்குறள் மனனப் போட்டி, விரைவு கணிதப் போட்டி என்பவற்றில் யாழ்ற்ரன் கல்லூரி மாணவர்கள் முதலாமிடம்.
திருக்குறள் மனனப் போட்டி
தரம் 2 - S .புவியரசன் - 1 ம்  இடம்
தரம் 3 - S . பிரேந்தினி  - 1 ம் இடம்
தரம் 1 - M . சரண்யா - 3 ம் இடம்

விரைவு கணிதம்
தரம் 5 - S .அபூர்வா - 1 ம் இடம்

முதலாமிடங்களைப் பெற்ற மாணவர்கள் மாகாண மட்டப் போட்டிகளுக்குத் தெரிவாகியுள்ளனர்.

 
சாரணர் இயக்கச் செயற்பாடுகள்
Thursday, 19 July 2012 00:15

சாரணர் இயக்கச் செயற்பாடுகள்

யாழ்ற்ரன் கல்லூரியின் சாரணர் இயக்கச் செயற்பாடுகள் வியாவில் ஐயனார் கோவில் தேர்த் திருவிழாவின் போது ஆரம்பமாகின.


 
சாரணர்களுக்குச் சின்னம் சூட்டும் நிகழ்வு
Sunday, 15 July 2012 01:58

சாரணர்களுக்குச் சின்னம் சூட்டும் நிகழ்வு

 

காரைநகர் யாழ்ற்ரன் கல்லூரியில் 10/07/2012 செவ்வாய்க்கிழமை அன்று காலைக் கூட்டத்துடன் சாரணர்களுக்குச் சின்னம் சூட்டும் நிகழ்வு கல்லூரி அதிபர் திரு.வே.முருகமூர்த்தி அவர்கள் தலைமையில் நடைபெற்றது. நீண்டகால இடைவெளியின் பின்னர் மீண்டும் இச்சாரணர் இயக்கம் திரு.ஆ.யோகலிங்கம் அவர்களைப் பொறுப்பாசிரியராகக்  கொண்டு இயங்க ஆரம்பித்துள்ளது. நிகழ்வில் யாழ்ப்பாண மாவட்ட உதவிச் சாரணர் ஆணையாளர் திரு.சி.சிவகுமாரன் அவர்கள், சாரணர்களுக்கான பொறுப்பாசிரியர் திரு.ஆ.யோகலிங்கம் அவர்களுக்கு சாரணர் இயக்கச் சின்னத்தினைச்  சூட்டினார். தொடர்ந்து திரு.சி.சிவகுமாரன் அவர்களும், சாரணர் இயக்கப் பொறுப்பாசிரியர் திரு.ஆ.யோகலிங்கம் அவர்களும் சாரணர்களுக்குச் சின்னங்களைச்சூட்டினர். கல்லூரி அதிபர் சாரணர்களுக்கு scarf இனைச் சூட்டினார். நிகழ்ச்சியில் ஆசிரியர்கள், மாணவர்கள், சாரணர்களின் பெற்றோர்கள் கலந்து சிறப்பித்தனர்.  யாழ்ப்பாண மாவட்ட உதவிச் சாரணர் இயக்கத் தலைவர் திரு.சி.சிவகுமாரன் அவர்களுக்கும், சாரணர் இயக்கச் செயற்பாடுகளை மிகத் துரிதமான முறையில் எடுத்துச் சென்ற கல்லூரி சாரணர் இயக்கப் பொறுப்பாசிரியர் திரு.ஆ.யோகலிங்கம் அவர்களுக்கும் கல்லூரி அதிபர் அவர்கள் தனது நன்றிகளையும், பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொண்டார். யாழ்ற்ரன் கல்லூரி மாணவர்களின் ஆளுமை, சமூக மயமாக்கல், தலைமைத்துவப் பண்புகள் என்பவற்றை வளர்ப்பதற்கு மாணவத் தலைவர் முறைமை, சாரணர் இயக்கச் செயற்பாடுகள் என்பன ஆரம்பிக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.



 
உயர்தர மாணவர் மன்றத்தின் வருடாந்த ஒன்றுகூடலும் , மதிய போசன விருந்தும்
Sunday, 08 July 2012 23:39

யாழ்ற்ரன் கல்லூரி உயர்தர மாணவர் மன்றத்தின் வருடாந்த ஒன்றுகூடலும் , மதிய போசன விருந்தும்

காரைநகர் யாழ்ற்ரன் கல்லூரியில் உயர்தர மாணவர் மன்றத்தின் வருடாந்த ஒன்றுகூடலும் மதிய போசன விருந்தும் 07 /07 /2012 சனிக்கிழமை பி.ப 12.30 மணியளவில் உயர்தர மாணவர் மன்றத்தலைவர் செல்வன் சி.தார்மீகன் தலைமையில் நடைபெற்றது. பிரதம விருந்தினராக கல்லூரியின் பழைய மாணவியும், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை புற்றுநோய் சிகிச்சைப் பிரிவில் கடமையாற்றுபவருமான வைத்திய கலாநிதி திருமதி.நளாயினி கணேசானந்தன் அவர்களும், சிறப்பு விருந்தினராக தீவகக் கல்வி வலயத்தின் பிரதிக் கல்விப் பணிப்பாளர் (கல்வி முகாமைத்துவம்) திரு.பொ.அருணகிரிநாதன் அவர்களும், கௌரவ விருந்தினராக யாழ்ற்ரன் கல்லூரி பழைய மாணவர் சங்கத்தின் காப்பாளர் திரு.சோ.விக்னேஸ்வரன் அவர்களும் கலந்து சிறப்பித்தனர்.

பிரதம விருந்தினர் வைத்திய கலாநிதி திருமதி.ந.கணேசானந்தன் அவர்கள் தமது உரையில் தமது யாழ்ற்ரன் கல்லூரி வாழ்க்கையை எடுத்துக் கூறி தற்போதுள்ள உயர்தர மாணவர்களும் பல்கலைக் கழக அனுமதியைப் பெற்று, சிறந்த உயர் கல்வியையும் பெற்று கல்லூரிக்குப் பெருமை தேடித் தர வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார். சிறப்பு விருந்தினர் திரு.பொ.அருணகிரிநாதன் அவர்கள் உரையாற்றுகையில் கல்லூரி புதிய அதிபரின் தலைமைத்துவத்தின் கீழ் மிகச்சிறந்த முறையில் நடைபெற்று வருவதை தான் நேரடியாகவும், கல்வித் திணைக்களக் குழுவின் மேற்பார்வையின் போதும் கண்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார். உயர்தர மாணவர்கள் தமது எதிர்கால வேலைவாய்ப்புக்கு ஏற்றபடியான சிறந்த கல்வித் துறைகளை தேர்ந்தெடுக்க வேண்டுமென வலியுறுத்தினார். கௌரவ விருந்தினர் திரு.பொ.விக்னேஸ்வரன் அவர்கள் தனது பாடசாலை வாழ்க்கையில் அதிபராக இருந்த அமரர்.திரு.சிவராஜா அவர்கள் பற்றியும் அப்போதைய ஆசிரியர்களின் அர்ப்பண உணர்வு பற்றியும் எடுத்துரைத்தார். கல்லூரி அதிபர் திரு.வே.முருகமூர்த்தி அவர்கள் தனதுரையில் மாணவர்களின் கல்வி அடைவு மட்டமும் ஏனைய செயற்பாடுகளும் முன்னேற்றகரமாக செல்வதாக புள்ளி விபரங்களுடன் எடுத்துக் காட்டினார். கல்லூரி மாணவர்கள் இவ்வாண்டு இரு மாகாண மட்டப் போட்டிகளுக்குச் சென்று 2ம், 3ம்  இடங்களைப் பெற்றமை கல்லூரியின் வரலாற்றில் குறிப்பிடத்தக்க அம்சமென மகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.


 
« StartPrev212223242526NextEnd »

Page 22 of 26


Powered by Joomla!.