Our Principal

Banner

Past Principals

  • Mr.K.Kanagasabai
  • Mr.A.Karunananthan
  • Mr.K.Sivaraja
  • Mr.M.Vaithiyanathan
  • Mr.K.Kailainathan
  • Mr.N.Veluppillai
  • Mr.K.K.Nadaraja
  • Mr.S.Pathmanathan
  • Mr.K.K.Senathiraja
  • Mr.N.Paramasivam
  • Mr.K.Somasekaram
மாணிக்கவாசக சுவாமிகள் குருபூசை
Friday, 29 June 2012 23:35

மாணிக்கவாசக சுவாமிகள்  குருபூசை

 

காரைநகர் யாழ்ற்ரன் கல்லூரியில் மாணிக்கவாசக சுவாமிகள்  குருபூசை சிறந்த முறையில் கொண்டாடப்பட்டு விசேட சொற்பொழிவாளராக  பண்டிதர் மு.சு.வேலாயுதபிள்ளை அவர்கள் (தலைவர், காரைநகர் மணிவாசகர் சபை) மணிவாசகரைப் பற்றிச் சிறப்புச் சொற்பொழிவாற்றினார்.

 
பேரீச்சம் பழம் வழங்கும் நிகழ்வு
Friday, 29 June 2012 22:13

பேரீச்சம் பழம் வழங்கும் நிகழ்வு

 

கல்வி அமைச்சின் அறிவுறுத்தலுக்கு அமைவாக பாடசாலை மாணவர்களுக்கு  பேரீச்சம் பழம் வழங்கும் நிகழ்வு  யாழ்ற்ரன் கல்லூரியில் 25 /06 /2012 இல் நடைபெற்றது.  இதனைக் கல்லூரி அதிபர் அவர்களும் கல்லூரியின் சிரேஷ்ட ஆசிரியர் திரு.பிரபாகரன் அவர்களும் வழங்கி ஆரம்பித்து வைத்தனர்.


 
பசுப்பால் வழங்கும் நிகழ்வு
Friday, 29 June 2012 22:11

பசுப்பால் வழங்கும் நிகழ்வு

 

கல்வி அமைச்சின் அறிவுறுத்தலுக்கு அமைவாக பாடசாலை மாணவர்களுக்கு பசுப்பால் வழங்கும் நிகழ்வு யாழ்ற்ரன் கல்லூரியில் 25 /06 /2012 இல் நடைபெற்றது. முதலாவது மாணவனுக்கு பசுப்பாலை காரைநகர் மணிவாசகர் சபைத் தலைவர், பண்டிதர் மு.சு.வேலாயுதபிள்ளை அவர்கள் வழங்கினார்.



 
மூக்குக் கண்ணாடி வழங்கும் நிகழ்வு
Thursday, 28 June 2012 00:42

யாழ்ற்ரன் கல்லூரியில் மூக்குக் கண்ணாடி வழங்கும் நிகழ்வு


கண் பார்வை குறைந்த காரைநகர் பாடசாலை மாணவர்களுக்கு மூளாய் கூட்டுறவு வைத்திய சாலையில் கண் பரிசோதனை செய்த பின்னர் வைத்திய அதிகாரியினால் சிபார்சு செய்யப்பட்ட மூக்குக்கண்ணாடிகள் காரைநகர் வியாவில் ஐயனார் கோவில் பரிபாலன சபைத் தலைவர் திரு.சோமசேகரம் அவர்களின் அனுசரணையுடன் இலவசமாக வழங்கப்பட்டது. மூக்குக் கண்ணாடி பெறும் யாழ்ற்ரன் கல்லூரி மாணவர்களுக்கு அதனை வழங்கும் நிகழ்வு 25/06/2012 அன்று கல்லூரி மண்டபத்தில் கல்லூரி அதிபர் திரு.வே.முருகமூர்த்தி அவர்களின் தலைமையில் நடைபெற்றது. மூக்குக் கண்ணாடிகளை வியாவில் ஐயனார் கோவில் பரிபாலன சபைத் தலைவர் திரு.சோமசேகரம் அவர்களும், காரைநகர் கோட்டக் கல்விப் பணிப்பாளர் திரு.விக்னேஸ்வரன் அவர்களும் தீவக வலய விசேட கல்விக்கான சேவைக் கால ஆலோசகர் திரு.கமலநாதன் அவர்களும் வழங்கி சிறப்பித்தனர்.

 
மாணவர் தலைவர் சின்னம் சூட்டல்
Saturday, 23 June 2012 22:28

மாணவத் தலைவர்களுக்கான சின்னம் சூட்டும் விழா

 

யாழ்ற்ரன் கல்லூரியில் இன்று(22 /06 /2012) மாணவத் தலைவர்களுக்கான சின்னம் சூட்டும் விழா கல்லூரி அதிபர் திரு.வே.முருகமூர்த்தி அவர்கள் தலைமையில் நடைபெற்றது. பிரதம விருந்தினராக காரைநகர் இலங்கை வங்கிக் கிளை முகாமையாளர் திரு இ. சிவகுமாரன் அவர்களும், சிறப்பு விருந்தினர்களாக காரைநகர் சுப்பிரமணிய வித்தியாசாலை அதிபர் திருமதி.அ.கௌரியாம்பாள் அவர்களும், வர்த்தகர் திரு.க.குகதாசன் அவர்களும் கலந்து சிறப்பித்தனர். கல்லூரி அதிபர் சிரேஷ்ட மாணவத் தலைவன் செல்வன் கஜேந்திரனுக்கும், உதவி சிரேஷ்ட மாணவத் தலைவன் செல்வன் குகராஜிற்கும் சின்னங்களைச் சூட்டினார். கல்லூரியின் ஆரம்பப் பிரிவு முதல்வர் திருமதி.இ.செல்வராஜா அவர்கள் சிரேஷ்ட மாணவத் தலைவி செல்வி தரங்கனிக்கும், உதவி சிரேஷ்ட மாணவத் தலைவி செல்வி கிருஷாவிற்கும் சின்னங்களைச் சூட்டினார்.

 

தேசியக் கொடியைப் பிரதம விருந்தினர் அவர்களும், பாடசாலைக் கொடியைக் கல்லூரி அதிபர் அவர்களும் ஏற்றுகின்றனர்.


பிரதம விருந்தினர் அவர்கள் வரவேற்கப்படுகின்றார்

 

கல்லூரி அதிபர் அவர்கள் உரையாற்றுகிறார்


கல்லூரி அதிபர் சிரேஷ்ட மாணவத் தலைவனுக்கு சின்னம் சூட்டுகிறார்


கல்லூரியின் ஆரம்பப் பிரிவு முதல்வர் திருமதி.இ.செல்வராஜா அவர்கள் சிரேஷ்ட மாணவத் தலைவி தரங்கனிக்கும், உதவி சிரேஷ்ட மாணவத் தலைவி கிருஷாவிற்கும் சின்னங்களைச் சூட்டுகிறார்

பிரதம விருந்தினர் அவர்கள் மாணவத் தலைவன் ஒருவருக்கு சின்னம் சூட்டுகிறார்



பிரதம விருந்தினர் அவர்கள் உரையாற்றுகிறார்.


கல்லூரி அதிபர், பொறுப்பாசிரியர்களுடன் மாணவத் தலைவர்கள்

 
மாதாந்தப் பரீட்சைகள்
Monday, 18 June 2012 22:36

மாதாந்தப் பரீட்சைகள்

யாழ்ற்ரன் கல்லூரி மாணவர்கள் மே மாதத்துக்கான மாதாந்தப் பரீட்சை எழுதிக் கொண்டிருக்கிறார்கள். கல்லூரியில் ஒவ்வொரு மாதமும் மாதாந்தப் பரீட்சைகள் நடாத்தப் பட்டு, தேர்ச்சி அறிக்கைகள் வழங்கப்பட்டு விடைத் தாள்கள் பெற்றோருக்கு காண்பிக்கப்படுகின்றன.



 
« StartPrev212223242526NextEnd »

Page 23 of 26


Powered by Joomla!.