Our Principal

Banner

Past Principals

  • Mr.K.Kanagasabai
  • Mr.A.Karunananthan
  • Mr.K.Sivaraja
  • Mr.M.Vaithiyanathan
  • Mr.K.Kailainathan
  • Mr.N.Veluppillai
  • Mr.K.K.Nadaraja
  • Mr.S.Pathmanathan
  • Mr.K.K.Senathiraja
  • Mr.N.Paramasivam
  • Mr.K.Somasekaram
திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார் குருபூசை
Tuesday, 05 June 2012 23:09

திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார் குருபூசை

இன்று (05 -06 -2012) யாழ்ற்ரன் கல்லூரியில் திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார் குருபூசை கொண்டாடப்பட்டது. மாணவர்களின் பேச்சு, பண்ணிசை என்பவற்றுடன் பாண்டிய மன்னனைப் பற்றிய 7ம் வகுப்பு மாணவர்களின் நாடகமும் இடம்பெற்றது. மூளாயைச் சேர்ந்த திரு.சிவசுப்பிரமணியம் அவர்கள் (ஓய்வு பெற்ற அரச உத்தியோகத்தர்) திருஞானசம்பந்த மூர்த்தி நாயனாரைப் பற்றி சிறப்புச் சொற்பொழிவை ஆற்றினார்.

 
விசேட கணணி மற்றும் ஆங்கில வகுப்புகள்
Saturday, 02 June 2012 21:41

யாழ்ற்ரன் கல்லூரியில் விசேட கணணி மற்றும் ஆங்கில வகுப்புகள்


யாழ்ற்ரன் கல்லூரியில் தரம் 6 தொடக்கம் 10  வரையான  வகுப்புகளுக்கு பாடசாலை விட்ட பின்னர் விசேட கணணி மற்றும் ஆங்கில வகுப்புகள் நடைபெறுகின்றன. இவ்வகுப்புகளுக்கு இலண்டன் காரை நலன்புரிச் சங்கமும் கனடா கரை கலாச்சார மன்றமும்  அனுசரணை வழங்குகின்றனர். மாணவர்கள் மிகுந்த உற்சாகத்துடன் இவ்வகுப்புகளில் கலந்து கொள்கின்றனர். இலண்டன் காரை நலன்புரிச் சங்கத்தினரதும்,  கனடா காரை கலாச்சார மன்றத்தினரதும்   இக்கல்வி சார் செயற்பாடுகளுக்காக கல்லூரி அதிபர் திரு.வே.முருகமூர்த்தி அவர்கள் நன்றியைத் தெரிவிக்கிறார்.
 
மாகாண மட்டக் கணித நாடகப்போட்டி
Saturday, 02 June 2012 21:30

மாகாண மட்டக் கணித நாடகப்போட்டியில் யாழ்ற்ரன் கல்லூரி மூன்றாமிடம்


இன்று (02-06-2012) யாழ்ப்பாணம் இந்து  மகளிர் கல்லூரியில் நடைபெற்ற மாகாண மட்டத்திலான கணித நாடகப்போட்டியில் யாழ்ற்ரன் கல்லூரி மாணவர்கள் 3 ம் இடத்தைப்பெற்றுக் கொண்டனர். வட மாகாணத்திலுள்ள 12 கல்வி வலயங்களிலுமிருந்து 12 பாடசாலைகள் இப்போட்டியில் பங்குபற்றின. நாடகத்தில் பங்கு பற்றிய மாணவர்களுக்கும், நாடகத்தை நெறிப்படுத்திய கணித ஆசிரியை செல்வி.சர்மிலா பாலகிருஷ்ணன், நாடக ஆசிரியை திருமதி. கவிதா பிரதீஸ்வரன் அவர்களுக்கும் அதிபர் தனது பாராட்டுக்களைத் தெரிவிக்கிறார்.

 
Saturday, 26 May 2012 22:25

மாகாண மட்டத் தமிழ்த்தினப் போட்டியில் யாழ்ற்ரன் கல்லூரி இரண்டாமிடம்

இன்று (26 -05 -2012) வவுனியா இறம்பைக்குளம் மகளிர் மகா வித்தியாலயத்தில் நடைபெற்ற மாகாண மட்ட தமிழ்த் தினப் போட்டியில் பிரிவு IIக்கான தனி நடனத்தில் யாழ்ற்ரன் கல்லூரி மாணவன் செந்தில்நாதன் பிரசாந்தன் 2 ம் இடத்தைப் பெற்றுள்ளார்.

இரண்டாமிடத்தைப் பெற்ற மாணவன் பிரசாந்தனும் அவரைப் பயிற்றுவித்த ஆசிரியை திருமதி சகிலா சுதாகரன் அவர்களும்

இரண்டாமிடத்தைப் பெற்ற மாணவன் செல்வன் செந்தில்நாதன் பிரசாந்தனுக்கும் இவரைப் பயிற்றுவித்து நெறிப் படுத்திய நடன ஆசிரியை திருமதி சகிலா சுதாகரன் அவர்களுக்கும், இவர்களுக்கு துணை நின்ற சங்கீத ஆசிரியைகளான செல்வி லீலாவதி ராசரட்ணம், திருமதி சிவகலா சிவகணபதி மற்றும் சேவைக்கால ஆலோசகர் திரு.S .அநிருத்தன் ஆகியோருக்கும் அதிபர் தனது பாராட்டுக்களையும் நன்றிகளையும் தெரிவிக்கின்றார்.

தீவக வலய பாடசாலை ஒன்று மாகாண மட்ட தமிழ்த்தினப் போட்டிகளில் பங்குபற்றி இரண்டாம் இடத்தைப் பெற்றமை இதுவே முதல் தடவை என்பது குறிப்பிடத்தக்க அம்சமாகும்.
 
மருத்துவக் கண்காட்சி
Saturday, 26 May 2012 22:19

யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மருத்துவக் கண்காட்சியில் யாழ்ற்ரன் கல்லூரி மாணவர்கள்

 

21 /05 /2012 யாழ்ற்ரன் கல்லூரி மாணவர்களும் ஆசிரியர்களும் மருத்துவக் கண்காட்சியைக் காணச்சென்றனர்.

 
Saturday, 26 May 2012 20:23

யாழ்ற்ரன் கல்லூரி மாணவர்களிடையே நூலக விழிப்புணர்வை ஏற்படுத்தல்

 

காரைநகர் யாழ்ற்ரன் கல்லூரி மாணவர்களிடையே நூலகம் தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கு காரை அபிவிருத்திச் சபையின் நூலகப் பிரிவின் ஆதரவுடன் மாணவர்கள் யாழ்ப்பாணம் பொதுசன நூலகத்தைப் பார்வையிடுவதற்காக 19 /05 /2012 காலை 7 .30 மணிக்கு கல்லூரி முன்றலிலிருந்து புறப்படுகிறார்கள். இந்நிகழ்வில் யாழ்ற்ரன் கல்லூரியின் பழைய மாணவனும் தற்போது கனடாவில் வசிப்பவருமான திரு ந. அமிர்தலிங்கம் அவர்களும் காரைநகரில் அமைய இருக்கும் நூலகத்தை நெறிப் படுத்திகொண்டிருப்பவருமான வைத்தியகலாநிதி நடராஜா அவர்களும் கலந்து சிறப்பித்தனர்.

இவ்வாரம்ப நிகழ்வில் அதிபர் உரையாற்றும் பொது நூலகத்தின் பயன்பாடுகள், முக்கியத்துவம், தேவை, கல்வியில் தேடல் ஆராய்தல், பதித்தல் என்பவற்றைப் பற்றிய தெளிவான விளக்கத்தையும் மாணவர்களுக்கு தெரியப் படுத்தினார். காரைநகரில் அமைய இருக்கின்ற நூலகம் காரைநகர் பாடசாலை மாணவர்களுக்கு கல்வியில் ஒரு கலங்கரை விளக்கமாகத் திகழ்ந்து அவர்களின் அனைத்துக் கல்விச் செயற்பாடுகளுக்கும் அது உறுதுணையாக இருக்கும் என்பதையும் சுட்டிக் காட்டினார்.

நூலகத்தைப் பார்வையிட கல்லூரி அதிபர் திரு. வே.முருகமூர்த்தி அவர்கள் தலைமையில் பழைய மாணவனான திரு. ந.அமிர்தலிங்கம் அவர்களும் 8  ஆசிரியர்களும் 70 மாணவர்களும் சென்றனர்.

 

 

 

அதே தினம் யாழ்ப்பாணம் கோட்டையையும் மாணவர்கள் பார்வையிட்டனர்.

 
« StartPrev212223242526NextEnd »

Page 24 of 26


Powered by Joomla!.