Our Principal

Banner

Past Principals

  • Mr.K.Kanagasabai
  • Mr.A.Karunananthan
  • Mr.K.Sivaraja
  • Mr.M.Vaithiyanathan
  • Mr.K.Kailainathan
  • Mr.N.Veluppillai
  • Mr.K.K.Nadaraja
  • Mr.S.Pathmanathan
  • Mr.K.K.Senathiraja
  • Mr.N.Paramasivam
  • Mr.K.Somasekaram
விசேட கல்விப் பிரிவு
Saturday, 26 May 2012 00:49

யாழ்ற்ரன் கல்லூரியின் விசேட கல்விப் பிரிவில் நடைபெற்ற செயலமர்வு

யாழ்ற்ரன் கல்லூரியில் அமைந்துள்ள விசேட கல்விப் பிரிவில் தீவக வலயக் கல்வித் திணைக்களத்தினரால் நடாத்தப்பட்ட செயலமர்வின் பொது எடுக்கப்பட்ட படங்கள். இச்செயலமர்வில் கல்லூரியில் கற்கும் மாற்று வலுவுடைய மாணவர்களும், மெல்லக் கற்கும் மாணவர்களும் ஈடுபட்டனர். இச்செயலமர்வினை காரைநகர் கோட்டக்கல்விப் பணிப்பாளர் திரு.பு.ஸ்ரீவிக்னேஸ்வரன் அவர்கள் ஆரம்பித்து வைத்தார். வளவாளர்களாக தீவக வலயத்தின் விசேட கல்விக்கான சேவைக் கால ஆலோசகர் திரு.S .கமலநாதன், முன்னாள் தியாகராஜா மத்திய மகா வித்தியாலய அதிபர் பண்டிதர் மு.சு.வேலாயுதபிள்ளை ஆகியோருடன் கல்வியியற்கல்லூரி விரிவுரையாளர்களும் செயலமர்வினை நடாத்தி வைத்தனர். இவ்வமர்வினை ஒழுங்கு செய்த கல்லூரியின் விசேட கல்விக்குப் பொறுப்பான ஆசிரியர் திரு.த.மணிவண்ணன் அவர்களுக்கு அதிபர் தனது நன்றிகளைத் தெரிவிக்கின்றார்.




 
Tuesday, 22 May 2012 21:13

தீவக வலய கணித வினாடி வினாப் போட்டி

தீவகக் கல்வி வலயத்தினால் நடாத்தப்பட்ட 2012 ம் ஆண்டிற்கான தமிழ் மொழி மூலமான கணித வினாடி வினாப் போட்டியில் யாழ்ற்ரன் கல்லூரி மாணவர்களின் பெறுபேறுகள்

தரம்        மாணவர் பெயர்             நிலை
6               ச.லக்க்ஷன்                          1
9               மோ.துர்ஷிகா                    3
10             யோ. கருணிதா                  2

ஆங்கில மொழி மூலமான கணித வினாடி வினாப் போட்டியில் யாழ்ற்ரன் கல்லூரி மாணவர்களின் பெறுபேறுகள்
தரம்           மாணவர் பெயர்          நிலை
8                 S. நவநீதன்                        1
8                 S. ரோகினி                         2
9                  T. சயந்தன்                         1
9                 S.சசிதரன்                           2
9                 S.கமலேஸ்வரி                 3
10                S.மனோகரி                       1
10                T.ஆரணி                            2
11                S.சரவணன்                       1
11                K.சுஜிந்தன்                        2

ஆங்கில மொழி மூலமான போட்டியில் யாழ்ற்ரன் கல்லூரி மாணவர்கள் அதிக எண்ணிக்கையான பெறுபேறுகளைப் பெற்றமை குறிப்பிடத்தக்கது. இப்போட்டியில் பங்கு பற்றிய மாணவர்களுக்கும் இம் மாணவர்களைப் பயிற்றுவித்த ஆசிரியர் திரு. ஆ. யோகலிங்கம் அவர்களுக்கும் அதிபர் தனது பாராட்டுக்களைத் தெரிவிக்கிறார். மேலும் இம் மாணவர்கள் மாகாண மட்டப் போட்டிகளில் பங்கு பற்றி முதலாம் இடத்தைப் பெற வேண்டுமெனவும் அதிபர் வாழ்த்துகிறார்.


 
2012 ம் ஆண்டு க.பொ.த சாதாரணதரப் பரீட்சையில் உயர் பெறுபேறுபெற்றோர் விபரம்
Thursday, 05 April 2012 00:00
மாணவர் முழுப்பெயர்
பெறுபேறு
செல்வன். தேவராசா டிசாந்தன் 4A 1C 3S
செல்வி. திவியா அமிர்தலிங்கம்
3A 2B 4C
செல்வி. லோஜிகா யுவராசா 3A 2B 2C 1S

 

4A 1C 3S 1W

 
Thursday, 29 March 2012 23:21

வலய மட்டக் கரப்பந்தாட்டப் போட்டிகள்

இன்று (11/03/2012) நடைபெற்ற தீவக வலய மட்டக் கரப்பந்தாட்டப் போட்டிகளில் யாழ்ற்ரன் கல்லூரியின் 15 வயதுக்குட்பட்ட ஆண்கள் அணி 2ம் இடத்தைப் பெற்று மாவட்ட மட்டப் போட்டிகளுக்குத் தெரிவாகியுள்ளது.

 

வலைப்பந்தாட்டப் போட்டிகள்

இன்று (10-03-2012) நடைபெற்ற வலய மட்ட வலைப் பந்தாட்டப் போட்டிகளில் யாழ்ற்ரன் கல்லூரி 19 வயதுக்குட்பட்ட பெண்கள் பிரிவு 2ம் இடத்தையும், 17 வயதுக்குட்பட்ட பெண்கள் பிரிவு 3ம் இடத்தையும் பெற்று மாவட்ட மட்டப் போட்டிகளிற்குத் தெரிவாகியுள்ளன.

 
Thursday, 29 March 2012 20:27

க.பொ.த சாதாரண தர பரீட்சை 2011க்கான பெறுபேறுகளில் தீவக வலயத்தில் யாழ்ற்ரன் கல்லூரிக்கு மிகச்சிறந்த பெறுபேறுகள்

 

2011 ம் ஆண்டு டிசம்பர் மாதம் நடைபெற்ற க.பொ.த சாதாரண தரப் பரீட்சையில் யாழ்ற்ரன் கல்லூரியைச்சேர்ந்த தர்மலிங்கம் கௌரிதரன் என்ற மாணவன் ஆங்கில மொழி மூலம் கற்று 7A  1B  1C  என்ற மிகச்சிறந்த பெறுபேற்றை  தீவக வலயத்தில் பெற்றுள்ளார். தீவக வலயத்தில் உள்ள சகல பாடசாலைகளிலும் இதுவே மிகச் சிறந்த பெறுபேறு ஆகும். மேலும் பாடசாலையில் கூடியளவு மாணவர்கள் க.பொ.த உயர்தரம் கற்க தகைமை பெற்றுள்ளனர். சித்தி அடைந்த மாணவர்களையும் அவர்களைக் கற்பித்த ஆசிரியர்களையும் அதிபர் பாராட்டுகிறார்.

Last Updated on Saturday, 16 February 2013 00:10
 
Monday, 19 March 2012 00:00

வீட்டுத் தோட்டப்போட்டியில் யாழ்ற்ரன் கல்லூரி முதலிடம்

யாழ்ப்பாண மாவட்டச் செயலகத்தால் நடாத்தப்பட்ட வீட்டுத் தோட்டப்போட்டியில் காரைநகர் பிரதேச செயலகர் பிரிவில் யாழ்ற்ரன் கல்லூரி முதலாமிடத்தைப் பெற்றுள்ளது. இதற்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு 21/03/2012 அன்று மு.ப 10.30 மணிக்கு காரைநகர் பிரதேச செயலகக் கேட்போர் கூடத்தில் நடைபெறும். வீட்டுத்தோட்டத்தை உண்டாக்கிய மாணவர்களையும் ஆசிரியர்களையும் அதிபர் பாராட்டுகிறார்.

 
« StartPrev212223242526NextEnd »

Page 25 of 26


Powered by Joomla!.