Our Principal

Banner

Past Principals

  • Mr.K.Kanagasabai
  • Mr.A.Karunananthan
  • Mr.K.Sivaraja
  • Mr.M.Vaithiyanathan
  • Mr.K.Kailainathan
  • Mr.N.Veluppillai
  • Mr.K.K.Nadaraja
  • Mr.S.Pathmanathan
  • Mr.K.K.Senathiraja
  • Mr.N.Paramasivam
  • Mr.K.Somasekaram
பெறுபேற்று விபரங்கள்
Tuesday, 06 March 2012 00:00

யாழ்ற்ரன் கல்லூரியின் 2011 ம் ஆண்டுக்கான பொதுப் பரீட்சைகளில் சிறந்த பெறுபேறு பெற்றோர் விபரம்


தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை 2011

மாணவர் பெயர்                                      பெற்ற புள்ளி

செல்வி புயலிசை சுப்பிரமணியம்                   178
செல்வன் சிவநாதன் ரகுராமன்                        165
செல்வன் சக்திதாசன் லக்சன்                           158
செல்வன் கிருபால் காருண்யன்                        155 
செல்வி நாகதீபா செல்வகுமார்                        154
செல்வி திலக்க்ஷி சிவனேஸ்வரன்                  153

க.பொ.த சாதாரண தரம் 2011

செல்வன் தர்மலிங்கம் கௌரிதரன் 7A 1B 1C
க.பொ.த சாதாரண தரம் 2011 இற்கான பெறுபேறுகளில் தீவக வலயத்தில் மிகச் சிறந்த பெறுபேறுகளைப் பெற்ற மாணவனாவான். இம்மாணவன் ஆங்கில மொழி மூலம் கல்வி கற்ற மாணவன் என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஏனைய சிறந்த பெறுபேறுகளைப் பெற்ற மாணவர்

செல்வி கணேஷ்குமாரி பரமநாதன் 3A 3B 1C 1S
செல்வி கலைச்செல்வி ஞானசேகரம் 3A 3B 2C
செல்வன் நடேஷ் சோபிதன் 3A 4C 2S

க.பொ.த. உயர்தரம் 2011 இல் பல்கலைக்கழக அனுமதிக்குத்தகுதி பெற்ற மாணவர்

செல்வன் சிவசோதி ரமேஷ் - பொறியியல் பீடம் (பெறுபேறு 1A 2B)
செல்வி வித்யா யோகராசா - கலைப் பீடம் (பெறுபேறு 2A 1C)
செல்வன் ஞானசேகரம் பிருந்தாமன் - கலைப் பீடம் (பெறுபேறு 3B)
செல்வி லோகவதனி சிவசோதி - நுண்கலைப் பீடம் (பெறுபேறு 1B 2C)


 
Tuesday, 07 February 2012 14:35

பாடசாலை அபிவிருத்திச் சங்க வருடாந்தப் பொதுக்கூட்டம்- 2012

யாழ்ற்ரன் கல்லூரியின் பாடசாலை அபிவிருத்திச் சங்கத்தின் 2012 ம் ஆண்டுக்கான வருடாந்தப் பொதுக் கூட்டம் இன்று (07/03/2012) காலை 9.30 மணிக்கு கல்லூரி மண்டபத்தில் அதிபர் திரு.வே.முருகமூர்த்தி அவர்கள் தலைமையில் நடைபெற்றது. 230 பெற்றோர்(85% ஆனோர்) இக்கூட்டத்தில் சமூகமளித்திருந்தனர். அதிபர் தனது உரையில் பாடசாலையின் கற்றல் கற்பித்தல் செயற்பாடுகள், மாணவர்களின் கல்வி அடைவு மட்டம், பாடசாலை அபிவிருத்தி என்பன பற்றி தனது கருத்துக்களை எடுத்துக்கூறினார். கல்லூரி பிரிவின் கிராம சேவையாளர் திரு. இராசசேகரம் இராசதுரை அவர்கள் மாணவர்களைத் தொடர்ச்சியாகப் பாடசாலைக்கு அனுப்பாத பெற்றோருக்கு பல அறிவுரைகளை வழங்கினார். இலங்கையின் கட்டாயக் கல்வியின் முக்கியத்தைப் பற்றியும் அவர் தனது உரையில் சுட்டிக் காட்டினார். 2012ம் ஆண்டிற்கான 15 அங்கத்தவர்களைக் கொண்ட நிர்வாக சபை தெரிவு செய்யப்பட்டது.

தலைவர்: அதிபர்
செயலாளர்: திரு. சு. இராசரத்தினம் (பெற்றோர்)
பொருளாளர்: திருமதி. ஜெயந்தினி சத்தியானந்தன் (ஆசிரியர்)

 

பண்ணிசைப் போட்டிகள்

காரைநகர் மணிவாசகர் சபையினரால் சிவராத்திரி தினத்தையொட்டி நடாத்தப்பட்ட பண்ணிசை மற்றும் பேச்சுப் போட்டிகளில் கல்லூரி மாணவர்கள் கூடியளவு இடங்களைப் பெற்றுக்கொண்டனர். கல்லூரியின் பஜனைக் குழுவினரால் காரைநகர் ஈழத்துச் சிதம்பரத்தில் நடாத்தப்பட்ட பஜனை பல அடியார்களால் பாராட்டப்பட்டது. மாணவர்களிடையே சிறந்த சைவப் பாரம்பரியங்களை வளர்க்கும் முகமாக இவ் பஜனைக்குழு ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இப்போட்டிகளுக்கும் பஜனைக்குழுவின் தோற்றத்துக்கும் காரணமாக இருந்த சங்கீத ஆசிரியைகளுக்கு அதிபர் தனது பாராட்டுக்களைத் தெரிவிக்கின்றார். யாழ்ற்ரன் கல்லூரி மாணவர்கள் இப்போட்டிகளில் கூடிய இடங்களைப் பெற்றமையை மணிவாசகர் சபையின் தலைவர் பண்டிதர் மு.சு.வேலாயுதபிள்ளை அவர்கள் பாராட்டிப் பேசினார்.

 

மாதாந்தப்பரீட்சைகள்

2012 ம் ஆண்டில் மாணவர்கள் கல்வி அடைவு மட்டத்தை உயர்த்தும் நோக்கில் கல்லூரி அதிபரால் மாதாந்தப்பரீட்சைகள் அறிமுகப்படுத்தப்பட்டன. இதன் பிரகாரம் ஜனவரி மாதம் மாதாந்த பரீட்சைகள் வைக்கப்பட்டு, அதற்கான தேர்ச்சி அறிக்கைகள் மாணவர்களுக்கு வழங்கப்பட்டு, விடைத்தாள்கள் file பண்ணப்பட்டு வகுப்பு ரீதியாக பெற்றோர் அழைக்கப்பட்டு, இன்றிலிருந்து(23 /02 /2012) பெற்றோர்களுக்கு விடைத்தாள்கள் காட்டப்பட்டு மாணவர்களின் கல்வி முன்னேற்றம் தொடர்பாக அதிபர், ஆசிரியர், பெற்றோர்களுக்கிடையில் கலந்துரையாடல்கள் நடந்து வருகின்றன. மாதாந்தப்பரீட்சை வைக்கும் முறைமையை பெற்றோர்கள் பெரிதும் பாராட்டியுள்ளனர். இப்பரீட்சையினால் வீட்டில் மாணவர்கள் கற்கும் வீதம் அதிகரித்துள்ளதாக கூட்டத்தில் பெற்றோர்கள் தெரிவிக்கின்றனர்.

 

சாரணர் இயக்கச் செயற்பாடுகள் ஆரம்பம்

யாழ்ற்ரன் கல்லூரியின் சாரணர் இயக்கச்செயற்பாடுகள் இன்று (20 -02 -2012 ) கல்லூரி அதிபர் திரு.வே.முருகமூர்த்தி அவர்கள் தலைமையில் ஆரம்பித்து வைக்கப்பட்டன. சாரணருக்கான வகுப்புகளை யாழ் மாவட்ட உதவிச் சாரணர் ஆணையாளர் திரு.செ. சிவகுமாரன்  அவர்கள் மிகச்சிறப்பான முறையில் நடாத்தினார். அவர் சாரணர் இயக்கத்தின் தோற்றம், வளர்ச்சி என்பன பற்றியும் இதனால் சமூகத்துக்கும் மாணவர்களுக்கும் ஏற்படும் நன்மைகள் பற்றியும் எடுத்துக்கூறினார். கல்லூரியின் சாரணர் இயக்க பொறுப்பு ஆசிரியர் திரு.ஆ.யோகலிங்கம் அவர்களும் இப்பயிற்சி வகுப்பில் கலந்து கொண்டார். மாணவர்கள் உற்சாகத்துடன் ஆர்வங் காட்டினர். 25 மாணவர்கள் சாரணர் இயக்கச் செயற்பாடுகளில் பங்கு பற்றினர்.

 

சாரணர் இயக்கச்செயற்பாடுகள்

யாழ்ற்ரன் கல்லூரியின் சாரணர் இயக்கச்செயற்பாடுகள் 20/02/2012 அன்று முற்பகல் 10 மணிக்கு ஆரம்பமாக உள்ளன.


கோட்ட மட்ட விளையாட்டுப்போட்டிகள்

இன்று 16/02/2012 இல் நடைபெற்ற காரைநகர் கோட்ட மட்ட விளையாட்டுப் போட்டிகளில் Netball match இல் யாழ்ற்ரன் கல்லூரியின் 15 வயதுக்குக்கீழ்ப்பட்ட பெண்கள், 17 வயதுக்குக்கீழ்ப்பட்ட பெண்கள், 19  வயதுக்குக்கீழ்ப்பட்ட பெண்கள் ஆகிய 3 குழுக்களும் முதலாம் இடத்தைப்பெற்றுள்ளன. Volley ball match இல் 19 வயதுக்கு கீழ்ப்பட்ட ஆண்கள்  முதலாம்  இடத்தைப்பெற்றனர். Cricket போட்டிகளில் எமது கல்லூரி காரைநகர் கோட்டப்பாடசாலைகளுடன் விளையாடி எல்லாப்பாடசாலைகளையும் வெற்றி கொண்டது.

போட்டிகளில் பங்குபற்றிய அனைத்து மாணவ, மாணவிகளுக்கும், விளையாட்டுத்துறை ஆசிரியருக்கும் அதிபர் தனது பாராட்டுக்களைத் தெரிவித்துள்ளார்.

விசேட வகுப்புகள் ஆரம்பம்

ஆங்கிலக்கல்வியையும் கணினிக்கல்வியையும் மேம்படுத்தும் நோக்குடன் யாழ்ற்ரன் கல்லூரியில் விசேட ஆங்கில மற்றும் கணினி வகுப்புக்கள் 08 -02 -2012 அன்று ஆரம்பமாகி உள்ளன. மாணவர்கள் ஆர்வத்துடன் கலந்து கொள்கின்றனர்.

 

விசேட வகுப்புகள்

2012 ம் ஆண்டுக்கான தரம் 6 தொடக்கம் 10 வரையான மாணவர்களுக்கான விசேட கணணி, விசேட ஆங்கில வகுப்புகள் 08-02-2012 பிற்பகல் 2 .30 மணிக்கு ஆரம்பமாக உள்ளன.

Last Updated on Thursday, 29 March 2012 23:24
 
அறிவித்தல்கள்
Tuesday, 26 October 2010 22:43

 
அதிபரின் செய்தி
Friday, 22 October 2010 20:03

dsc_0205
painted3
painted4

அதிபரின் செய்தி

கல்லூரி மாணவர்களின் கற்றல் செயற்பாடுகளை மேலும் வினைத்திறனாக்கி மாணவர்களின் அடைவு மட்டத்தை உயர்த்துவதே எமது இன்றைய பாரிய கடமையாகும்.
பொதுப் பரீட்சைகளில் கல்லூரி மாணவர்களின் பெறுபேறுகள் மேலும் உயர்த்த புதிய திட்டங்கள் உருவாக்கப்படவுள்ளன.
சர்வதேச மட்டத்தில் எமது மாணவர்களை இணைத்துக் கொள்ளும் முகமாக பாடசாலை விட்ட பின் விசேட ஆங்கில வகுப்புக்கள், விசேட கணனி வகுப்புக்கள், ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
தரம் 6 – தரம் 10 வரையான மாணவர்களுக்கு இவ் வேலைத்திட்டம் நடைபெறுகின்றது. மாணவர்கள் ஆர்வத்துடன் மகிழ்ச்சியாகவும் கற்கிறார்கள்.
தற்போது பாடசாலையில் இருக்கின்ற வளங்களை உச்சமாகப் பயன்படுத்தி மாணவர்களின் அன்றாட கற்றல் செயற்பாடுகளை வினைத்திறனும், விளைதிறனும் மிக்கதாக நடைபெறுகின்றன.
மாணவர்களின் பாடவிதான செயற்பாடுகள், பாடசாலையின் பௌதீக வளங்கள் என்பவற்றை நன்கு விருத்தி செய்து யாழ்ற்ரன் கல்லூரியை ஓர் உன்னதமான நிலைக்குக் கொண்டு வருவதே எனது இலட்சியம் என்பதை கல்லூரிச் சமூகத்தினருக்கு நான் மகிழ்ச்சியுடன் தெரிவிக்க விரும்புகின்றேன்.


பணிக்கூற்று

சகலருக்கும் மாறும் உலகிற்கேற்ப வாழ்வியற் கல்வி வழங்கல்

 

நோக்கக்கூற்று

நவீன கல்வி மாற்றத்திற்கேற்ப மாணவர் மையத் தேர்ச்சிக் கல்வி வழங்கலும் வாழ்வியலுக்கு பயன்படும் தன்மையை உறுதிப்படுத்தலும்

 



 
Thursday, 21 October 2010 19:34

வருடாந்த  இல்ல விளையாட்டுப்போட்டி- 2012

கல்லூரியின் 2012 ம் ஆண்டுக்கான வருடாந்த இல்ல விளையாட்டுபோட்டி  28-01-2012 இல் கல்லூரி மைதானத்தில் அதிபர் திரு.வே. முருகமூர்த்தி அவர்கள் தலைமையில் நடைபெற்றது. பிரதம விருந்தினராக தீவக வலயத்தின் திட்டமிடலுக்கான பிரதிக்கல்விப்பணிப்பாளர் திரு.T.ஜோன் குயின்டஸ் அவர்களும் சிறப்பு விருந்தினராக கல்லூரியின் முன்னாள் அதிபர் திரு.ந.பரமசிவம் அவர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

கல்லூரியின் பேண்ட் இசைக்குழு மிகச்சிறந்த முறையில் புதுப்பிக்கப்பட்டு விளையாட்டுப்போட்டியில் விருந்தினர்கள் பேண்ட் வாத்தியக்குழுவினரின் வரவேற்புடன் கல்லூரி நுழைவாசலில் இருந்து மைதானத்துக்கு அழைத்து வரப்பட்டனர். மங்கள விளக்கு ஏற்றப்பட்டு தேசிய கொடியை பிரதம விருந்தினர் அவர்களும் கல்லூரி கொடியை கல்லூரி அதிபர் அவர்களும் ஏற்றி வைத்து மாணவிகளால் தேசிய கீதம், கல்லூரி கீதம், இசைக்கப்பட்டு ஒலிம்பிக் சுடர் பிரதம விருந்தினர் அவர்களால் ஏற்றப்பட்டு விளையாட்டு போட்டிகள் கோலாகலமாக ஆரம்பமாகின.

இடைவேளையின் போது வீராங்கனைகளின் உடற்பயிற்சி  காட்சிகள் சிறந்த முறையில் செய்யப்பட்டு அனைவரினதும் பாராட்டை பெற்றன. இறுதியாக கல்லூரி அதிபர், சிறப்பு விருந்தினர், பிரதம விருந்தினர் ஆகியோரின் உரைகளை தொடர்ந்து சிறப்பு விருந்தினர், பிரதம விருந்தினர் ஆகியோர் வீரர்களுக்கான வெற்றிக்கேடயங்களை வழங்கி கௌரவித்தனர். விளையாட்டுத்துறைச்செயலாளர் திருமதி.கா.கமலாகரன் அவர்களின் நன்றி உரையுடன் போட்டிகள் இனிதே நிறைவேறியது.

 
« StartPrev212223242526NextEnd »

Page 26 of 26


Powered by Joomla!.