Our Principal

Banner

Past Principals

  • Mr.K.Kanagasabai
  • Mr.A.Karunananthan
  • Mr.K.Sivaraja
  • Mr.M.Vaithiyanathan
  • Mr.K.Kailainathan
  • Mr.N.Veluppillai
  • Mr.K.K.Nadaraja
  • Mr.S.Pathmanathan
  • Mr.K.K.Senathiraja
  • Mr.N.Paramasivam
  • Mr.K.Somasekaram
பாராட்டி வாழ்த்துகின்றோம்
Thursday, 12 May 2016 14:09

 

எமது கல்லூரியின் மூத்த பழைய மாணவரான சிவஸ்ரீ ஸ்ரீனிவாச ஐயர் மேருகிரி சர்மா அவர்கள் தமிழ்மொழியில் முதுகலைமாணி(M.A) பட்டப்படிப்பினை மேற்கொள்வதற்கு யாழ்ப்பாணம் பல்கலைக்கழக உயர் பட்டப்படிப்புக்கள் பீடத்தினால் தெரிவு செய்யப்பட்டுள்ளார். இது இவரது சிறந்த தமிழ் புலமைக்கும் சமஸ்கிருத புலமைக்கும் கிடைத்த ஒரு வெற்றியாகும். இவரது இத்தெரிவினையிட்டு யாழ்ற்ரன் கல்லூரிச் சமூகம் பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் தெரிவிக்கின்றது.

இவர் தான் கற்ற யாழ்ற்ரன் கல்லூரியினையும் தனக்கு இக்கல்லூரியில் தமிழ், சமஸ்கிருதம் ஆகிய மொழிகளைக் கற்பித்த ஆசிரியர்களான வித்துவான் க.முருகேசன், மற்றும் வே.ச.வேலுப்பிள்ளை ஆகியோரையும் அக்காலத்தில் தனது அதிபரான திரு.க.சிவராஜா ஆகியோரையும் நன்றியுடன் நினைவு கூருகின்றார்.

சிவஸ்ரீ ஸ்ரீனிவாச ஐயர் மேருகிரி சர்மா அவர்கள் காரைநகர் அரசடிக்காடு கதிர்காமசுவாமி கோவில் பிரதம குருவுமாவார்.

 
தீவகக் கல்வி வலயத்தில் 2015 ஆம் ஆண்டிற்கான க.பொ.த (சாதாரணதரம்) பரீட்சையில் கல்லூரி சிறந்த பெறுபேறுகளைப் பெற்றுள்ளது
Monday, 04 April 2016 02:50

5A உம், அதற்குக் கூடிய சித்திகளைப் பெற்ற மாணவர்கள்

சுரேஸ்குமார் கஜந்தன் 7A   2C
ரொபின்சியா தேவலிங்கம் 6A   2B   1C
இரட்ணராசா பத்மலோஜன் 5A   3B   1C
பிரதீபா சத்தியமூர்த்தி 5A   2B   2C

ஏனைய சிறந்த பெறுபேறுகளைப் பெற்ற மாணவர்கள்

ரோகினி சண்முகரட்ணம் 4A  4B  1S
கிர்சிகா மோகநாதன் 3A   3B   1C   1S   1W
சிவகுமார் செந்தூரன் 3A   2B   3C   1W
சிற்சபேசன் சுகந்தன் 3A   1B   4C   1W
கேதீஸ்வரன் டிசாந்தன் 3A   1B   2C   2S   1W
சிவகுமார் நவநீதன் 2A   3B   3C   1S
ஸ்ரீஸ்குமார் சிவரஞ்சன் 2A   2B   1C   3S   1W
நிரோஜினி சோதிலிங்கம் 2A   2B   1C   3S   1W
துவாரகா பரமேஸ்வரன் 2A   1B   3C   2S   1W

1. 6A   2B   1C

 
தீவகக்கல்வி வலயத்தின் 2015 ஆம் ஆண்டுக்கான விஞ்ஞான தினம்
Sunday, 20 March 2016 21:52

தீவகக் கல்வி வலயத்தின் 2015 ஆம் ஆண்டுக்கான விஞ்ஞான தினம் 12-03-2016 அன்று யாழ்ற்ரன் கல்லூரியில் விஞ்ஞான பாடத்துக்கான உதவிக்கல்விப்பணிப்பாளர் திரு. S. சபாநாயகம் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.  பிரதம விருந்தினராக தீவகக் கல்வி வலயத்தின் கல்விப்பணிப்பாளர் திரு. S. சுந்தரசிவம் அவர்களும் சிறப்பு விருந்தினராக யாழ்ற்ரன் கல்லூரி அதிபர் திரு. வே. முருகமூர்த்தி அவர்களும் கலந்து சிறப்பித்தனர். தீவகக் கல்விப்பணிமனையினால் நடாத்தப்பட்ட விஞ்ஞானப் புதிர்ப்போட்டி, விஞ்ஞான ஆய்வுகூடப்போட்டி என்பவற்றில் வெற்றி பெற்ற மாணவர்களும், பாடசாலைகளும் பரிசில் மற்றும் நினைவுச் சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டனர். விஞ்ஞானம் தொடர்பாக மாணவர்கள், ஆசிரியர்களின் உரைகளும் இடம்பெற்றன. இந்நிகழ்ச்சிகள் ஆரம்பமாகும் முன்னர் யாழ்ற்ரன் கல்லூரியில் அமைக்கப்பட்ட மூலிகைத்தோட்டத்தையும்(Herbal Garden) வலயக்கல்விப்பணிப்பாளர் அவர்கள் திறந்து வைத்தார்.

Read more...
 
விஞ்ஞான ஆய்வுகூடப் போட்டியில் கல்லூரி இரண்டாம் இடம்
Wednesday, 16 March 2016 17:32

தீவகக் கல்வி வலயத்தினரால் நடாத்தப்பட்ட (2015ஆம் ஆண்டிற்கான) "சிறந்த முறையில் விஞ்ஞான ஆய்வு கூடங்களைப் பேணுதலும் மாணவர்கள் அதனை உச்ச நிலையில் பயன்படுத்தலும்" என்ற போட்டியில் யாழ்ற்ரன் கல்லூரி இரண்டாம் இடத்தினைப் பெற்றுக் கொண்டுள்ளது. இதற்கான விருது 12.03.2016 இல் நடைபெற்ற தீவக வலய விஞ்ஞான தினத்தில் கல்லூரி அதிபரிடம் வழங்கப்பட்டது.

Read more...
 
வடமாகாண விவசாய அமைச்சின் விவசாயக் கண்காட்சியை கல்லூரி மாணவர்கள் பார்வையிட்டனர்
Friday, 19 February 2016 08:53

15-02-2016 வடமாகாண விவசாய அமைச்சினால் மன்னார் உயிலங்குளம் விவசாய ஆராய்ச்சி நிலையத்தில்  நடைபெற்ற விவசாயக் கண்காட்சியை கல்லூரி மாணவர்கள் பார்வையிட்டனர். அத்துடன் மன்னார் மாவட்டத்தில் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க திருக்கேதீஸ்வரம் ஆலயம், மன்னார் நகரிலுள்ள பெருக்க மரம், கட்டுக்கரைக்குளம், தொங்குபாலம் மற்றும் மடு தேவாலயம் ஆகியவற்றையும் பார்வையிட்டனர். 68 மாணவர்களும், 6 ஆசிரியர்களும், கல்லூரி அதிபரும் இவர்களுடன் கூடச் சென்றனர்.

Read more...
 
கோலாகலமாக நடைபெற்ற கல்லூரியின் 2016 ஆம் ஆண்டிற்கான இல்ல விளையாட்டுப்போட்டி
Friday, 12 February 2016 15:20

கல்லூரியின் வருடாந்த இல்ல விளையாட்டுப்போட்டி 06.02.2016 சனிக்கிழமை பி.ப 1.00 மணிக்கு கல்லூரி அதிபர் திரு.வே.முருகமூர்த்தி அவர்கள் தலைமையில் கோலாகலமாக ஆரம்பமாகி நடைபெற்றது. பிரதம விருந்தினராக வடக்கு மாகாண, மாகாணக்கல்வித் திணைக்களத்தின் நிர்வாகத்துக்கான உதவிக்கல்விப் பணிப்பாளர் திரு.தி.தர்மலிங்கம்(YARLTONIAN) அவர்களும் சிறப்பு விருந்தினராக காரைநகர் கோட்டக்கல்விப் பணிப்பாளர் திரு.ஆ.குமரேசமூர்த்தி(YARLTONIAN) அவர்களும், கௌரவ விருந்தினர்களாக சிவகணேசன் புடைவையக உரிமையாளர் திரு.க.அருள்நேசன்(YARLTONIAN) அவர்களும், காரைநகர் இலங்கை வங்கி முகாமையாளர் திரு.ப.செல்வகுமார் அவர்களும் மற்றும் சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சின் யாழ்மாவட்ட இணைப்பாளர் திரு.க.சிவபாலன்(YARLTONIAN) அவர்களும் கலந்து சிறப்பித்தனர்.

கல்லூரியின் பான்ட் இசைக்குழு மற்றும் இன்னியம் குழு, மாணவத்தலைவர் குழு ஆகியோர் சகிதம் விருந்தினர்கள் அழைத்து வந்த காட்சியும் மாணவர்களின் அணிநடை மரியாதையும், இடைவேளையின் போது நடைபெற்ற மாணவிகளின் இசையும் அசையும் உடற்பயிற்சிக் கண்காட்சியும் பார்வையாளர்களை பிரமிக்க வைத்தமை குறிப்பிடத்தக்கது.

அதிபர் தனது உரையில்

  • விளையாட்டுப்போட்டியின் அனுசரணையாளர் திரு.க.அருள்நேசன் (உரிமையாளர் சிவகணேசன் புடைவையகம்)
  • கல்லூரியின் முதல் அதிபர் அமரர் கருணானந்தம் ஞாபகார்த்தமான வெற்றிக்கேடயங்கள் அளித்த திரு.அ.யோகராசா(சின்னாலடி, காரைநகர்)
  • மேலும் வெற்றிக் கேடயங்களைத் தந்துதவிய கல்லூரின் ஆசிரியர்கள் திருமதி. மனோரஞ்சிதமலர் இராதாகிருஸ்ணன், திருமதி. கவிதா பிரதீஸ்வரன்
  • சைக்கிள் ஓட்டப்போட்டியில்(பெண்கள்) முதல் 5 இடங்களுக்கும் பரிசுப்பொருள் வழங்கிய திரு.சண்முகம் குகதாசன் (வர்த்தகர், கருங்காலி)
  • சைக்கிள் ஓட்டப்போட்டியில்(ஆண்கள்) முதல் 5 இடங்களுக்கும் பரிசுப் பொருள் வழங்கிய திரு.S.நிமலன் (கருங்காலி)
  • அமரர் செல்லப்பா வேலுப்பிள்ளை ஞாபகார்த்தமாக வெற்றிக்கேடயங்களை வழங்கிய திரு.வே.சிற்சபேசன் (சின்னாலடி)
  • பரிசுப்பொருட்களை வழங்கிய திரு.சி.தயாளன் (சின்னாலடி)

ஆகியோர்களுக்கு நன்றிகளையும் பாராட்டுக்களையும் தெரிவித்தார்.

Read more...
 
« StartPrev12345678910NextEnd »

Page 4 of 26


Powered by Joomla!.