Our Principal

Banner

Past Principals

  • Mr.K.Kanagasabai
  • Mr.A.Karunananthan
  • Mr.K.Sivaraja
  • Mr.M.Vaithiyanathan
  • Mr.K.Kailainathan
  • Mr.N.Veluppillai
  • Mr.K.K.Nadaraja
  • Mr.S.Pathmanathan
  • Mr.K.K.Senathiraja
  • Mr.N.Paramasivam
  • Mr.K.Somasekaram
கல்லூரியில் மிகச்சிறப்பாக நடைபெற்ற நிறுவுனர் தினமும் தேசிய மட்ட, மாகாண மட்ட சாதனையாளர் கௌரவிப்பும்
Saturday, 06 February 2016 16:38

மேற்படி விழா 02.02.2016 காலை 8.30 மணிக்கு கல்லூரி அதிபர் திரு. வே.முருகமூர்த்தி அவர்கள்  தலைமையில் ஆரம்பமாகி நடைபெற்றது. பிரதம விருந்தினராக ஓய்வுநிலை மாகாணக் கல்விப் பணிப்பாளர் திரு.ப.விக்கினேஸ்வரன்(தலைவர் காரை அபிவிருத்திச்சபை) அவர்களும், கௌரவ விருந்தினர்களாக கல்லூரியின் ஓய்வுநிலை ஆசிரியர் திரு.V.ஏகாம்பரநாதன் அவர்களும், பாடசாலை அபிவிருத்திச்சபை செயலாளர் திரு.V.சிற்சபேசன் அவர்களும்,கொழும்பு Quency Distributors உரிமையாளர் திரு.S.கணநாதன் அவர்களும் கலந்து சிறப்பித்தனர். 'சைவப் பாரம்பரியமூடான ஆங்கிலக் கல்வி' என்ற நினைவுப்பேருரையை கல்வி அமைச்சின் சமய விழுமியப்பிரிவு நிபுணத்துவ ஆலோசகர் திரு.பா.தனபாலன் அவர்கள் ஆற்றினார்.

இந்நிகழ்வில் கல்லூரியை அரசு பொறுப்பேற்க முன்னர் கல்லூரியை நிர்வகித்த காரை வித்தியா பரிபாலன சபையினரின் (Kari Board Of Education) கல்லூரி முகாமையாளர்களான திரு.S.A.கணபதிப் பிள்ளை(தலைப்பா), திரு.K.S.வேலுப்பிள்ளை, திரு.K.S.சோமசுந்தரம், திரு.A.T.ஆறுமுகம் ஆகியோரின் படங்கள் திரைநீக்கம் செய்யப்பட்டன.

கல்லூரி ஆரம்பிப்பதற்கு காணியை நன்கொடையாக வழங்கியவரும், முகாமையாளருமாகிய அமரர் திரு.S.A.கணபதிப் பிள்ளை(தலைப்பா) அவர்களின் படத்தை திரு.S.கணநாதன் அவர்களும், முகாமையாளர் அமரர் திரு.K.S.வேலுப்பிள்ளை அவர்களின் படத்தை அவரின் மகன் திரு.V.சிற்சபேசன் அவர்களும், முகாமையாளர் அமரர் திரு.K.S.சோமசுந்தரம் அவர்களின் படத்தை திரு.ப.விக்கினேஸ்வரன் அவர்களும், முகாமையாளர் அமரர் திரு.A.T.ஆறுமுகம் அவர்களின் படத்தை திரு.V.ஏகாம்பரநாதன் அவர்களும் திரைநீக்கம் செய்து வைத்தனர்.

தேசியமட்டம், மாகாணமட்டங்களில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு நினைவுச் சின்னங்களும் பதக்கங்களும் வழங்கி கௌரவிக்கப்பட்டது.

 
கல்லூரியின் ஆரம்பப் பிரிவு இல்ல மெய்வல்லுனர் போட்டி 2016
Thursday, 04 February 2016 23:09

மேற்படி போட்டிகள் கல்லூரி மைதானத்தில் 01.02.2016 திங்கட்கிழமை அன்று பி.ப.1.00 மணிக்கு ஆரம்பமாகி கல்லூரி அதிபர் திரு. வே.முருகமூர்த்தி தலைமையில் சிறப்பாக நடைபெற்றது. பிரதம விருந்தினராக தீவகக்கல்வி வலயத்தின் ஓய்வுநிலை கல்விப் பணிப்பாளர்(ஆரம்பக் கல்விப் பிரிவு) திரு. வி. தனிநாயகம் அவர்களும், சிறப்பு விருந்தினராக ஓய்வுநிலை கிராமசேவகர் திரு.தி.சண்முகசுந்தரம் அவர்களும் கலந்து சிறப்பித்தனர். அதிபர் தனது உரையில் இவ்வாரம்பப் பிரிவு விளையாட்டுப்போட்டிக்கு அனுசரணையாளராக செயற்பட்டுவரும் யாழ்ப்பாணம் கே.கே.எஸ் வீதி கணேசன் புடவையக உரிமையாளர் திரு.க.சிவநேசன் அவர்களுக்கு தனது நன்றிகளையும் பாராட்டுகளையும் தெரிவித்தார்.

Read more...
 
கல்லூரி மரதன் ஓட்டப் போட்டிகள் - 2016
Monday, 25 January 2016 00:49

கல்லூரியின் 2016 ஆம் ஆண்டிற்கான வருடாந்த இல்ல மெய்வல்லுனர் போட்டிக்கான மரதன் ஓட்டப்போட்டிகள் 17.01.2016 ஞாயிற்றுக்கிழமை காலை 6.00மணிக்கு ஆரம்பமானது. கல்லூரி அதிபர் திரு.வே.முருகமூர்த்தி அவர்களால் ஆசிரியர்கள், மாணவர்கள், கல்லூரிச் சமூகத்தினரின் கரகோசத்துடன் போட்டிகள் ஆரம்பித்து வைக்கப்பட்டன. ஆண்களுக்கான மரதன் ஓட்டம் கல்லூரி முன்றலில் ஆரம்பித்து வேம்படி, வாரிவளவு, வியாவில், களபூமி ஊடாக மீண்டும் கல்லூரி முன்றலில் முடிவடைந்தது. பெண்களுக்கான மரதன் ஓட்டம் காரைநகர் துறைமுகத்திலிருந்து ஆரம்பமாகி களபூமி, வலந்தலைச்சந்தி ஊடாக மீண்டும் கல்லூரி முன்றலை வந்தடைந்தது. போட்டிகள் முடிவடைய நடுவர்களுக்காக நடைபெற்ற தேனீர் விருந்தில் நடுவர்களுக்காக வந்து ஒத்துழைப்பு வழங்கிய அனைத்து நடுவர்களுக்கும், அம்புலன்ஸ் சேவையை வழங்கிய காரைநகர் வைத்தியசாலை வைத்திய அதிகாரிக்கும் அதிபர் தனது நன்றிகளையும் பாராட்டுக்களையும் தெரிவித்தார்.

வீதியோட்டம் ஆண்கள்

1ம் இடம் செ.நிறோசன் நாவலர் இல்லம்
2ம் இடம் ம.சஞ்ஜீவன் நாவலர் இல்லம்
3ம் இடம் த.கீர்த்தனன் விபுலானந்தர் இல்லம்
4ம் இடம் இ.தயாரூபன் நாவலர் இல்லம்
5ம் இடம் க.தர்சன் விபுலானந்தர் இல்லம்

வீதியோட்டம் பெண்கள்

1ம் இடம் சௌ.நிரோஜமலர் நாவலர் இல்லம்
2ம் இடம் ம.நவநிலா நாவலர் இல்லம்
3ம் இடம் மோ.றோசி நாவலர் இல்லம்
4ம் இடம் சி.சுகிர்தா நாவலர் இல்லம்
5ம் இடம் ப.யாழினி விபுலானந்தர் இல்லம்
கல்லூரியின் 2016 ஆம் ஆண்டிற்கான வருடாந்த இல்ல மெய்வல்லுனர் போட்டிக்கான மரதன் ஓட்டப்போட்டிகள் 17.01.2016 ஞாயிற்றுக்கிழமை காலை 6.00மணிக்கு ஆரம்பமானது. கல்லூரி அதிபர் திரு.வே.முருகமூர்த்தி அவர்களால் ஆசிரியர்கள், மாணவர்கள், கல்லூரிச் சமூகத்தினரின் கரகோசத்துடன் போட்டிகள் ஆரம்பித்து வைக்கப்பட்டன. ஆண்களுக்கான மரதன் ஓட்டம் கல்லூரி முன்றலில் ஆரம்ப்பித்து வேம்படி, வாரிவளவு, வியாவில், களபூமி ஊடாக மீண்டும் கல்லூரி முன்றலில் முடிவடைந்தது. பெண்களுக்கான மரதன் ஓட்டம் காரைநகர் துறைமுகத்திலிருந்து ஆரம்பமாகி களபூமி, வலந்தலைச்சந்தி ஊடாக மீண்டும் கல்லூரி முன்றலை வந்தடைந்தது. போட்டிகள் முடிவடைய நடுவர்களுக்காக நடைபெற்ற தேனீர் விருந்தில் நடுவர்களுக்காக வந்து ஒத்துழைப்பு வழங்கிய அனைத்து நடுவர்களுக்கும், அம்புலன்ஸ் சேவையை வழங்கிய காரைநகர் வைத்தியசாலை வைத்திய அதிகாரிக்கும் அதிபர் தனது நன்றிகளையும் பாராட்டுக்களையும் தெரிவித்தார்.
வீதியோட்டம் ஆண்கள்
1ம் இடம் செ.நிறோசன் நாவலர் இல்லம்
2ம் இடம் ம.சஞ்ஜீவன் நாவலர் இல்லம்
3ம் இடம் த.கீர்த்தனன் விபுலானந்தர் இல்லம்
4ம் இடம் இ.தயாரூபன் நாவலர் இல்லம்
5ம் இடம்   க.தர்சன் விபுலானந்தர் இல்லம்
வீதியோட்டம்பெண்கள்
1ம் இடம் சௌ.நிரோஜமலர் நாவலர் இல்லம்
2ம் இடம் ம.நவநிலா நாவலர் இல்லம்
3ம் இடம் மோ.றோசி நாவலர் இல்லம்
4ம் இடம் சி.சுகிர்தா நாவலர் இல்லம்
5ம் இடம் ப.யாழினி விபுலானந்தர் இல்லம்

 

Read more...
 
க.பொ.த உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகள் - 2015
Monday, 11 January 2016 00:23

கடந்த  ஆகஸ்ட் மாதம் நடந்த உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகள் 03.01.2016 அன்று வெளியாகின. இதன் பிரகாரம் யாழ்ற்ரன் கல்லூரி தீவக வலயத்தில் முன்னிலையில் நிற்கின்றது.

சிறந்த பெறுபேறுகளைப் பெற்ற மாணவர் விபரம்

கலைப்பிரிவு

மாணவர் பெயர் பெறுபேறு
1. செல்வி.க.யசோதா 2A 1B
2. செல்வி.அ.சசிகலா 1A 2C
3. செல்வன்.தி.செந்தூரன் 1A 1B 1C
4. செல்வன்.ச.சரவணபவன் 2B 1C
5. செல்வி.தி.அம்பிகா 2B 1C
6. செல்வி.யோ.சௌமியா 2B 1C
7. செல்வி.ந.ஜெசிந்தா 1B 2C
8. செல்வி.யு.லோஜிகா 3C
9. செல்வி.த.ராகினி 2C 1S
10. செல்வி.சி.சிவதர்சினி 2C 1S
11. செல்வி.க.தர்மிலா 2C 1S
12. செல்வி.போ.துசியந்தினி 2C 1S

 

வர்த்தகப்பிரிவு

மாணவர் பெயர் பெறுபேறு
1. செல்வன்.அ.கஜன் 2B 1C
2. செல்வன்.ந.வராகன் 2C 1S
3. செல்வன்.ம.பிரதாபன் 2C 1S

 

கணிதப்பிரிவு

மாணவர் பெயர் பெறுபேறு
1. செல்வி.செ.ஐஸ்வரியா 1C 2S
2. செல்வன்.ச.சரவணன் 3S
  • பரீட்சைக்குத் தோற்றியோர் 25 மாணவர்கள்
  • பல்கலைக்கழக அனுமதிக்கு தகைமை பெற்றோர் 22 மாணவர்கள்
  • 88% பல்கலைக்கழக அனுமதிக்கு தகைமை பெற்றுள்ளனர்
  • இவ் ஆண்டு குறைந்தது 06 மாணவர்கள் பல்கலைக்கழகத்திற்குத் தெரிவாவார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது. எனினும் வெட்டுப்புள்ளி வெளியிடப்பட்டதன் பின்னரே உறுதி செய்யப்படும்
 
கல்லூரியின் புலமைப்பரிசில் பரீட்சை 2015 இல் சித்தியடைந்த மாணவர்களுக்கான பாராட்டு வைபவம்
Sunday, 20 December 2015 23:44

மேற்படி விழா 05-12-2015  முற்பகல் 10 மணிக்கு யாழ்ற்ரன் கல்லூரி மண்டபத்தில் அதிபர் திரு.வே. முருகமூர்த்தி அவர்கள் தலைமையில் நடைபெற்றது. பிரதம  விருந்தினராக திரு. சு. கதிர்காமநாதன் (சுவிஸ் நாதன்) அவர்களும், சிறப்பு விருந்தினராக காரைநகர் கோட்டக் கல்விப்பணிப்பாளர் திரு. பு. ஸ்ரீவிக்னேஸ்வரன் அவர்களும், கௌரவ விருந்தினராக காரைநகர் பிரதேச சபை முன்னாள் உறுப்பினர் திரு. க. பாலச்சந்திரன் அவர்களும் கலந்து சிறப்பித்தனர். அதிபர் தனது உரையில் திரு.சு. கதிர்காமநாதன் அவர்கள் கல்லூரிக்கு ஆற்றிய பணிகளைப் பாராட்டினார். மேலும் புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தி பெற்ற மாணவர்களுக்கு நினைவுச்சின்னம்(Memento) வழங்குவதற்கான அனுசரனையாளர்களாக இருந்த அமரர். திரு. கந்தையா கணேசன் (கனடா) அவர்களின் குடும்பத்தினருக்கும் தனது நன்றிகளையும் பாராட்டுக்களையும் தெரிவித்தார். அத்துடன் புத்தகப் பரிசில்களை வழங்கி உதவிய கொழும்பு Quency Distributers உரிமையாளர் திரு. S. கணநாதன் அவர்களுக்கும் அதிபர் தனது நன்றிகளைத் தெரிவித்தார். சித்தியடைந்த மாணவர்களின் பெற்றோரும் விழாவில் கலந்து சிறப்பித்தனர்.

Read more...
 
மாகாணமட்ட சித்திரப்போட்டியில் கல்லூரி மாணவன் இரண்டாம் இடம்
Friday, 04 December 2015 10:53

வடக்கு மாகாணக் கல்வித்திணைக்களகத்தினரால் நடாத்தப்பட்ட சித்திரப்போட்டியில் கல்லூரி மாணவன் செல்வன் S.கஜந்தன் 2ஆம் இடத்தைப் பெற்றுள்ளார். இம் மாணவனுக்கும் இம் மாணவனை நெறிப்படுத்திய சித்திரபாட ஆசிரியர் திரு.ஊ.கஜேந்திரன் அவர்களுக்கும் கல்லூரி அதிபர் தனது பாராட்டுக்களைத் தெரிவிக்கின்றார்.

சித்திரப்போட்டியில் பங்குபற்றிய மாணவனும் கல்லூரி அதிபரும் சித்திர ஆசிரியரும்

 
« StartPrev12345678910NextEnd »

Page 5 of 26


Powered by Joomla!.