Our Principal

Banner

Past Principals

  • Mr.K.Kanagasabai
  • Mr.A.Karunananthan
  • Mr.K.Sivaraja
  • Mr.M.Vaithiyanathan
  • Mr.K.Kailainathan
  • Mr.N.Veluppillai
  • Mr.K.K.Nadaraja
  • Mr.S.Pathmanathan
  • Mr.K.K.Senathiraja
  • Mr.N.Paramasivam
  • Mr.K.Somasekaram
மாகாண மட்டப்போட்டிகளில் கல்லூரி முதலாம் இடம்
Thursday, 03 December 2015 20:32

வடக்கு மாகாண கல்வித் திணைக்களத்தினரால் 29-11-2015 அன்று நடாத்தப்பட்ட மாகாணமட்ட பண்ணிசைப் போட்டியிலும், (குழு-II)மற்றும் புராணபடனம்(தனி) போட்டிகளிலும் யாழ்ற்ரன் கல்லூரி 1ஆம் இடத்தைப் பெற்றுக் கொண்டது. இப் போட்டிகளில் கோட்டமட்டம், வலயமட்டங்களில் 1ஆம் இடங்களைப் பெற்று மாகாணமட்டத்தில் பல முன்னனி தேசிய பாடசாலைகளையும் விஞ்சி கல்லூரி 1ஆம் இடத்தை பெற்றமை குறிப்பிடத்தக்க சாதனையாகும். இப்போட்டியில் பங்குபற்றிய மாணவர்களுக்கும், இப்போட்டிகளுக்கு நெறிப்படுத்திய சங்கீத ஆசிரியை செல்வி லீலாவதி இராசரத்தினம் அவர்களுக்கும் கல்லூரி அதிபர் திரு.வே.முருகமூர்த்தி அவர்கள் பாராட்டுக்களைத் தெரிவிக்கின்றார்.

பண்ணிசை போட்டியில் குழு-II இல் பங்குபற்றிய மாணவர்களும் கல்லூரி அதிபரும், சங்கீத ஆசிரியர்களும்

  1. கீர்த்தனா ஜீவாகரன்
  2. யாழினி பரமேஸ்வரன்
  3. பவித்திரா சற்குணநாதன்
  4. தர்மிகா ரவிக்குமார்
  5. கீர்த்திகா கங்காதரன்
  6. டினுயா சிவராசா
  7. கஸ்தூரி சுரேந்திரன்
  8. சங்கீதம் நடராஜா
  9. சரணியா ஜெயரமேஸ்
  10. கீர்த்திகா தர்மலிங்கம்
  11. கிருஸ்ணவேணி தர்மலிங்கம்
  12. டர்சிகா தர்மலிங்கம்

புராண படனம் போட்டியில் பங்குபற்றிய மாணவர்களும் கல்லூரி அதிபரும், சங்கீத ஆசிரியர்களும்

  1. கிருஷிகா மோகநாதன்
  2. நிறோயினி சோதிலிங்கம்
 
கல்லூரியின் வாணி விழா 2015
Sunday, 15 November 2015 16:30

கல்லூரியின் 2015 ஆம் ஆண்டுக்கான வாணி விழா 22-10-2015 அன்று முற்பகல் 10 மணியளவில் கல்லூரி அதிபரின் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது. பிரதம விருந்தினராக காரைநகர் தபாலகத்தின் முன்னாள் தபாலதிபர் திரு. ச. சண்முகரட்ணம் அவர்களும், சிறப்பு விருந்தினராக அரசடிக்காடு கதிர்காமசுவாமி கோவில் பிரதமகுரு சி. மேருகிரிசர்மா அவர்களும் கலந்து சிறப்பித்தார். மாணவர்களின் பேச்சுக்களும், கலை நிகழ்ச்சிகளும் விழாவில் இடம்பெற்றன. வாணி விழாவுக்கு முன்னதாக கல்லூரி அதிபரினால் பல குழந்தைகளுக்கு ஏடு தொடக்கப்பட்டது.

Read more...
 
2015 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் காரைநகர் கல்விக் கோட்டத்தில் கல்லூரியின் பெறுபேறுகள் முன்னணியில்
Monday, 12 October 2015 02:34

2015 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைப் பெறுபேறுகளில் கல்லூரியில் 7 மாணவர்கள் சித்தியடைந்து காரைநகர் கோட்டத்தில் முன்னணி பெறுபேறுகளைப் பெற்ற பாடசாலையாகத் திகழ்கிறது. இம் மாணவர்களையும் கற்பித்த ஆசிரியர்களான திருமதி. த. அகிலன் செல்வி. இ. சுபத்திராதேவி ஆகியோர்களையும் கல்லூரி அதிபர் பாராட்டுகிறார்.

சித்தியடைந்த மாணவர் விபரம் வருமாறு

ஜெயக்குமார் புவியரசன் 172
வரதராசா கோபிகா 171
பாலச்சந்திரன் அனிதா 162
யோகநாதன் கிருத்திகா 158
யோகலிங்கம் கிருத்திகா 155
திருச்செல்வம் கம்சிகா 153
நந்தகுமார் கிறிஸ்ரிகா 153

 
கல்லூரியின் பரிசளிப்புவிழா 2015
Monday, 12 October 2015 02:14

கல்லூரியின் 2015ஆம் ஆண்டுக்கான பரிசளிப்பு விழா 20.09.2015 காலை 9.00 மணிக்கு கல்லூரி அதிபர் வே.முருகமூர்த்தி அவர்கள் தலைமையில் கோலாகலமாக ஆரம்பமாகியது. இந்நிகழ்வின் பிரதம விருந்தினராக வடமாகாணக் கல்வி பண்பாட்டு அமைச்சின் செயலாளர் திரு. இராசா இரவீந்திரன் அவர்கள் கலந்துகொண்டு சிறப்பித்தார்;. மேலும் சிறப்பு விருந்தினராக தீவகக் கல்விவலயத்தின் கல்விப்பணிப்பாளர் திரு. ஜோன்ஸ் குயின்ரஸ் அவர்கள் கலந்து கொண்டார். கௌரவ விருந்தினராக காரைநகர் கல்விக்கோட்ட கோட்டக்கல்விப் பணிப்பாளர் திரு.பு.விக்னேஸ்வரன் அவர்களும், யாழ்ற்ரன் கல்லூரியின் ஓய்வுநிலை ஆரம்பப்பிரிவு முதல்வர் திரு.க.தில்லையம்பலம் அவர்களும், இ.போ.ச. கோண்டாவில் சாலை பொறியியல் பகுதி உதவி முகாமையாளர் திரு. தி. ஏகாம்பரநாதன் அவர்களும் மேலும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

வருடந்தோறும் அமரர் வை.காசிப்பிள்ளை ஞாபகார்த்தமாக நடைபெறும் இவ்விழாவின் அனுசரணையாளராகச் செயற்படும் வைத்திய கலாநிதி சிறிதாரணி விமலன் குடும்பத்தினருக்கு(கனடா) அதிபர் தனது நன்றிகளையும் பாராட்டுகளையும் தெரிவித்தார்.

2014 ஆம் ஆண்டு பொதுப்பரீட்சைகளில் அதிகூடிய சித்திகளைப் பெற்ற மாணவர்களுக்கும், மாகாணமட்டம், தேசியமட்டம் ஆகியவற்றில் சாதனை படைத்த மாணவர்களுக்கும் இவ்விழாவில் பதக்கங்கள் அணிவித்தும், நினைவுச்சின்னங்கள் வழங்கியும் கௌரவிக்கப்பட்டனர்.

Read more...
 
கல்லூரி மாணவன் செந்தில்நாதன் கஜரூபன் (தரம் 8) அவர்கள் இயற்றிய கவிதைகளின் தொகுப்பு நூல் வெளியீடு
Sunday, 04 October 2015 16:29

யாழ்ற்ரன் கல்லூரி மாணவன் செந்தில்நாதன் கஜரூபன் என்ற மாணவனால் இயற்றப்பட்ட கவிதைகளின் தொகுப்பு நூல் வெளியீட்டு விழா 10-09-2015 அன்று கல்லூரி முத்தமிழ் மன்றத்தினரால் நடாத்தப்பட்டது. அன்றைய தினம் முற்பகல் 9 மணிக்கு கல்லூரி அதிபர் வே.முருகமூர்த்தி அவர்களின் தலைமையில் விழா ஆரம்பமாகியது.

பிரதம விருந்தினராக வடமாகாணக் கல்வி அமைச்சின் முன்னாள் பிரதிச்செயலாளர் திரு. ப. விக்னேஸ்வரன் அவர்கள் கலந்து சிறப்பித்தார். பல அறிஞர்களின் வாழ்த்துரைகளுடன், பண்டிதர் மு. சு. வேலாயுதபிள்ளை அவர்களினால் நூல் வெளியீடு செய்து வைக்கப்பட்டது. முதற்பிரதியை காரை அபிவிருத்திச் சபையின் முன்னாள் தலைவர் சிவா. T. மகேசன் அவர்கள் பெற்று கௌரவித்தார். கல்லூரி வரலாற்றில் மாணவர்களின் ஆக்கம் வெளியிடப்பட்டது இதுவே முதற் தடவை ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது.
Read more...
 
2015 ஆம் ஆண்டு இரண்டாம் தவணை இறுதிநாள் நிகழ்வுகள்
Sunday, 09 August 2015 14:08

2015ஆம் ஆண்டுக்கான 2ஆம் தவணைக் கல்விச் செயற்பாடுகளின் இறுதிநாளான 30-07-2015 அன்று காலை 8.30 மணிக்கு கல்லூரி அதிபர் தலைமையில் இந்நிகழ்வு நடைபெற்றது. நிகழ்வின் சிறப்பு விருந்தினராக எதியோப்பியா பல்கலைக்கழக இணைப்பேராசிரியர் திரு. விஜயரட்ணம் கென்னடி அவர்கள் கலந்து சிறப்பித்தார். அதிபர் மற்றும் சிறப்பு விருந்தினர் உரைகள் இடம்பெற்றன. மேலும் தவணைப் பரீட்சையில் 90% சராசரிக்கு மேல் பெற்றவர்களுக்கு super merit இற்கான  பதக்கமும்(medal) 85%-90% இடைப்பட்ட சராசரி பெற்ற மாணவர்களுக்கு merit இற்கான பதக்கமும்(medal) 75%-85% இடைப்பட்ட சராசரி எடுத்த மாணவர்களுக்கு optimi certificate  உம் வழங்கப்பட்டன. அத்துடன் ஒவ்வொரு வகுப்பிலும் முதல் 3 நிலைகளைப் பெற்ற மாணவர்களுக்கான தேர்ச்சி அறிக்கைகளும் வழங்கப்பட்டன.

 
« StartPrev12345678910NextEnd »

Page 6 of 26


Powered by Joomla!.