Our Principal

Banner

Past Principals

  • Mr.K.Kanagasabai
  • Mr.A.Karunananthan
  • Mr.K.Sivaraja
  • Mr.M.Vaithiyanathan
  • Mr.K.Kailainathan
  • Mr.N.Veluppillai
  • Mr.K.K.Nadaraja
  • Mr.S.Pathmanathan
  • Mr.K.K.Senathiraja
  • Mr.N.Paramasivam
  • Mr.K.Somasekaram
கல்லூரியின் உயர்தர மாணவர் ஒன்றியத்தின் வருடாந்த ஒன்றுகூடலும், மதியபோசன விருந்தும் - 2015
Wednesday, 01 July 2015 12:23

எமது கல்லூரியின் உயர்தர மாணவர் ஒன்றியத்தின் வருடாந்த ஒன்றுகூடலும், மதியபோசன விருந்தும் 28/06/2015 ஞாயிற்றுக்கிழமை பி.ப.12.30 மணிக்கு மன்றத்தின் தலைவர் செல்வன் தி.ரஜீவன் தலைமையில் நடைபெற்றது. பிரதம விருந்தினராக கொழும்பு தேசிய வைத்தியசாலை வைத்திய அதிகாரி Dr. க. கணேஸ்வரராஜா (Yarltonian) அவர்களும், சிறப்பு விருந்தினராக தீவகக் கல்வி வலயத்தின் முறைசாரா கல்விப் பிரிவு உதவிக் கல்விப் பணிப்பாளர் திரு. ப. ஆரூரன் அவர்களும், கௌரவ விருந்தினராக தொழிலதிபர் திரு. ச. சிவஞானம் அவர்களும் கலந்து சிறப்பித்தனர்.

 

Read more...
 
கனகராயன்குளம் யோகா நிறுவன திறப்பு விழாவில் கல்லூரி மாணவர்கள் கலந்து கொண்டனர்
Thursday, 25 June 2015 23:04

21/06/2015 ஞாயிற்றுக்கிழமை முற்பகல் 9 மணிக்கு சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு கனகராயன்குளத்தில் கொழும்பு ஓம் கிரியா பாபாஜி நிறுவனத்தினரால் யோகா நிறுவனம் ஒன்று அங்குரார்ப்பணம் செய்யப்பட்டது. இந்நிகழ்வில் கல்லூரி அதிபரும் யோகாப் பயிற்சியை முடித்துக்கொண்ட மாணவர்களும் பங்குபற்றினர். நிகழ்வில் கல்லூரி மாணவர்களின் "வாழ்வில் என்றும் யோகா" என்ற நாடகமும் நடித்துக் காண்பிக்கப்பட்டது. இம்மாணவர்கள் சான்றிதழ் வழங்கி பாராட்டப் பெற்றனர்.

 
மாணிக்கவாசக சுவாமிகள் குருபூசை
Thursday, 25 June 2015 22:03

கல்லூரியில் மாணிக்கவாசக சுவாமிகளின் குருபூசை 22-06-2015 அன்று காலை 8 மணிக்கு சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்வில் யாழ்ப்பாணம் நல்லூர் திரு. சிவஸ்ரீ ஈஸ்வரசர்மா அவர்கள் சிறப்புச் சொற்பொழிவாற்றினார். மாணவர்களின் பேச்சு, பண்ணிசை நிகழ்வுகளும் நடைபெற்றன.

 
கல்லூரியில் சுற்றாடல் முன்னோடிக்கழகம் அங்குரார்ப்பணம்
Tuesday, 23 June 2015 21:26

19/06/2015 வெள்ளிக்கிழமை மு.ப 8.00 மணிக்கு காலைக்கூட்டத்துடன் இந்நிகழ்வுகள் கல்லூரி அதிபர் தலைமையில் ஆரம்பமாகின. கழகத்தின் பொறுப்பாசிரியர் திரு. ந.கிருஷ்ணபவன் அவர்கள் நிகழ்வுகளை நெறிப்படுத்தினார். சிறப்பு விருந்தினராக பிரதேசத்திற்கான சுற்றாடல் உத்தியோகத்தர் திருமதி. வி. கல்யாணி அவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தார்.  மாணவர்களுக்கான சின்னங்கள் சிறப்பு விருந்தினர், கல்லூரி அதிபர், சுற்றாடல் முன்னோடிக் கழக பொறுப்பாசிரியர் ஆகியோரால்  சூட்டப்பட்டன. அதிபர் தனது உரையில் சுற்றாடல் உத்தியோகத்தர் அவர்களுக்கும்,  கழகத்தை சிறந்த முறையில் அமைப்பதற்கு பூரண ஒத்துழைப்பை வழங்கிய பொறுப்பாசிரியர் ந. கிருஷ்ணபவன் அவர்களுக்கும் நன்றிகளையும் பாராட்டுகளையும் தெரிவித்தார்.

 
அகில இலங்கைத் தமிழ்த்தினப் போட்டியில் மாகாண மட்டத்தில் கல்லூரி 2ம் இடம்
Saturday, 13 June 2015 23:07

இலங்கைக் கல்வி அமைச்சினால் நடாத்தப்பட்ட அகில இலங்கை தமிழ்த்தினப் போட்டியில் பிரிவு 4 இற்கான தனிநடனப் போட்டியில் கல்லூரி மாணவன் செல்வன் செந்தில்நாதன் பிரசாந்தன் 2ம் இடத்தைப் பெற்றுள்ளார். இம்மாணவனுக்கும், இம்மாணவனைப் பயிற்றுவித்த ஆசிரியை திருமதி. சகிலா சுதாகரன் அவர்களுக்கும் கல்லூரி அதிபர் நன்றிகளையும் பாராட்டுகளையும் தெரிவிக்கிறார்.

 
திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார் குருபூசை
Sunday, 07 June 2015 17:28

திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார் குருபூசை 04-06-2015 அன்று காலை 8 மணிக்கு கல்லூரி மண்டபத்தில், கல்லூரியின் இந்து மாணவர் மன்றத்தினரால் கொண்டாடப்பட்டது.  நிகழ்வில் மாணவர்களின் நிகழ்ச்சிகளும், பின்னர் ஆசிரியர் திரு. யோகலிங்கம் அவர்களது பேச்சும், அதனைத் தொடர்ந்து வேரப்பிட்டி கணேசா வித்தியாலய அதிபர் திரு. இளங்கோவன் அவர்களின் சிறப்புச் சொற்பொழிவும் இடம்பெற்றது.

 
« StartPrev12345678910NextEnd »

Page 8 of 26


Powered by Joomla!.