திருநாவுக்கரசு நாயனார் குருபூசை நிகழ்வுகள் |
வகுப்பு மாணவ முதல்வர்களிற்கான சின்னம் சூட்டும் வைபவம் |
தீவக வலய மட்டத்திலான 2014 ஆம் ஆண்டுக்கான விஞ்ஞான ஆய்வுகூடப் போட்டியில் யாழ்ற்ரன் கல்லூரி Best Laboratory Award விருதினைப் பெற்றுக் கொண்டது |
Monday, 20 April 2015 01:32 |
தீவக வலயத்திலுள்ள இடைநிலைப் பாடசாலைகளிலுள்ள (தரம் 6-13) விஞ்ஞான ஆய்வுகூடங்களை சிறந்த முறையில் பேணும் பாடசாலைகள் 10 இனை தீவக வலயக் கல்விப்பணிமனை தெரிவு செய்துள்ளது. அப்பாடசாலைகளில் யாழ்ற்ரன் கல்லூரியும் சிறந்த முறையில் விஞ்ஞான ஆய்வு கூடத்தினை பேணுவதற்கும் மாணவர்கள் சிறந்த முறையில் அதனைப் பயன்படுத்துவதற்குமான Best Laboratory Award விருதினை (2014 ஆம் ஆண்டுக்கான) பெற்றுக்கொண்டது.

|
க. பொ. த சாதாரண தரம் 2014 பரீட்சைப் பெறுபேறுகளில் தீவகக் கல்வி வலயத்தில் யாழ்ற்ரன் கல்லூரி ஒரு சிறப்பான இடத்தைப் பெற்றுக்கொண்டது |
Friday, 10 April 2015 00:06 |
க. பொ. த சாதாரண தரப் பரீட்சை 2014க்கான பெறுபேறுகளில் யாழ்ற்ரன் கல்லூரியில் சிறப்பான பெறுபேறுகளை (5A உம் அதற்கு மேற்பட்ட) 6 மாணவர்கள் பெற்றுக் கொண்டனர். அம்மாணவர்களின் விபரம்.
1. செந்தில்நாதன் கமலேஸ்வரி 8A 1S
2. குகநேசன் கோபிதா 7A 1S
3. தியாகராஜா சயந்தன் 6A 3B
4. விக்கினேஸ்வரன் வேதாரணி 5A 2B 2C
5. மகாதேவன் நவநிலா 5A 2B 1S
6. மோகநாதன் துர்சிகா 5A 1B 1C 1S
மேலும்
7. கருணேஸ்வரன் ஜெயமதுசன் 4A 3B 2S
8. தயாபரன் திருமகள் 4A 3B 1C 1S
9. பாலேந்திரன் கவிதா 3A 1B 3C 2S
10. கிருபானந்தன் அஜந்தன் 3A 1B 2C 2S
க. பொ. த சாதாரண தரப் பரீட்சைப் பெறுபேறுகளில் 5A உம் அதற்குக் கூடிய பெறுபேறுகளையும் 6 மாணவர்கள் பெற்று கல்லூரிக்குப் பெருமை சேர்த்துள்ளனர். மேலும் பல மாணவர்கள் சிறந்த பெறுபேறுகளைப் பெற்று 74.07% ஆன மாணவர்கள் க. பொ. த உயர்தரம் கற்பதற்குப் பூரணமான தகைமையைப் பெற்றுள்ளனர். இது சென்ற ஆண்டை விட 12% இனால் அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும். இது கல்லூரியின் நீண்ட கால இடைவெளியின் பின்னர் க. பொ. த சாதாரண தரப் பரீட்சைப் பெறுபேறுகளில் பெற்றுக் கொண்ட ஒரு வெற்றியாகும். இம்மாணவர்களுக்கும், இம்மாணவர்களுக்குக் கற்பித்த ஆசிரியர்களுக்கும் கல்லூரி அதிபர் அவர்கள் தனது பாராட்டுக்களைத் தெரிவிக்கிறார். 2014ஆம் ஆண்டுக்கான புலமைப்பரிசில் பரீட்சையிலும் தீவகக் கல்வி வலயத்தில் யாழ்ற்ரன் கல்லூரியில் அதிகூடிய மாணவர்கள் சித்தியடைந்தமையை இவ்விணையத்தளம் மூலம் பார்த்திருப்பீர்கள். |
கல்லூரியில் சாரணர் தினம் 2015 |
கல்லூரியின் வருடாந்த இல்ல மெய்வல்லுநர் போட்டி - 2015 |
Sunday, 22 February 2015 16:27 |
கல்லூரியின் வருடாந்த இல்ல மெய்வல்லுநர் போட்டி 15ம் திகதி ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 1.00 மணிக்கு கல்லூரி மைதானத்தில் அதிபர் வே.முருகமூர்த்தி அவர்கள் தலைமையில் நடைபெற்றது. பிரதம விருந்தினராக வடமாகாணக் காணி ஆணையாளர் பொ.தயானந்தா அவர்களும் சிறப்பு விருந்தினர்களாக தீவக வலயப் பிரதிக்கல்விப் பணிப்பானர் இ. ஜெனால்ட்அன்ரனி, காரைநகர் கோட்டக் கல்விப் பணிப்பாளர் பு. ஸ்ரீவிக்னேஸ்வரன் ஆகியோரும் கௌரவ விருந்தினர்களாக இலங்கை வங்கி காரைநகர் கிளை முகாமையாளர் வி.விஜயகுமார், வர்த்தகர் க. அருள்நேசன் ஆகியோரும் கலந்துகொண்டனர்.
|
Read more...
|
|
|
|
Page 9 of 26 |