Our Principal

Banner

Past Principals

  • Mr.K.Kanagasabai
  • Mr.A.Karunananthan
  • Mr.K.Sivaraja
  • Mr.M.Vaithiyanathan
  • Mr.K.Kailainathan
  • Mr.N.Veluppillai
  • Mr.K.K.Nadaraja
  • Mr.S.Pathmanathan
  • Mr.K.K.Senathiraja
  • Mr.N.Paramasivam
  • Mr.K.Somasekaram
யாழ்ற்ரன் கல்லூரியின் பல்கலைக்கழக மாணவர் அனுமதி
Friday, 23 June 2017 00:00

சென்ற ஒகஸ்ட் மாதம் நடைபெற்ற க.பொ.த உ.த பரீட்சையில் யாழ்ற்ரன் கல்லூரியில் வரலாற்றில் முதல் தடவையாக வர்த்தகப் பிரிவில் மூன்று பாடங்களிலும் A சித்தியைப் பெற்றுக்கொண்ட மாணவி செல்வி.மனோகரி சுப்பிரமணியம் பேராதனைப் பல்கலைக்கழகத்திற்கு வணிக முகாமைத்துவ பீடத்திற்கு தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

மேலும் 2A 1B சித்திகளைப் பெற்றுக்கொண்ட மாணவி செல்வி.கருணிதா யோகராசா யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வணிக முகாமைத்துவ பீடத்திற்கு தெரிவாகியுள்ளார்.

மேலும் பௌதீக விஞ்ஞானப் பிரிவிற்கு ஒரு மாணவர் தெரிவு செய்யப்படுவார் என எதிர்பார்க்கப்படுகின்றது .(Waiting list)

 
யாழ்ற்ரன் கல்லூரியின் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களுக்கான பாராட்டு விழா
Saturday, 03 June 2017 08:29

யாழ்ற்ரன் கல்லூரியில் 2016 ஆம் ஆண்டு தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தி அடைந்த மாணவர்களுக்கும் 70 புள்ளிகளுக்கு மேல் பெற்ற மாணவர்களுக்குமான கௌரவிக்கும் நிகழ்வு 29-03-2017 புதன்கிழமை முற்பகல் 8 மணிக்கு கல்லூரி அதிபர் திரு. வே. முருகமூர்த்தி அவர்கள் தலைமையில் நடைபெற்றது. பிரதம விருந்தினராக ஓய்வுநிலை அதிபர் Yarltonian திரு.க.அம்பலவாணர் அவர்களும், சிறப்பு விருந்தினராக கொழும்பு QUENCY  DISTRIBUTERS உரிமையாளர் Yarltonian திரு.S.கணநாதன் அவர்களும், கௌரவ விருந்தினர்களாக கல்லூரியின் முன்னை நாள் ஆரம்பப்பிரிவு ஆசிரியர் திருமதி. த. அகிலன் அவர்களும், மற்றும் Yarltonian திரு. க. யோகேந்திரன்(கனடா) ஆகியோரும் கலந்து சிறப்பித்தனர். சித்தியடைந்த மாணவர்களுக்கு நினைவுச்சின்னங்களும், புத்தகப்பரிசில்களும்  சான்றிதழ்களும் வழங்கி கௌரவிக்கப்பட்டதுடன் 70 புள்ளிகளுக்கு மேல் பெற்ற மாணவர்களுக்கு புத்தகப்பரிசில்களும், சான்றிதழ்களும் வழங்கி பாராட்டப்பெற்றனர். மேலும் இந்நிகழ்வில் கல்லூரிக்காக 2 பரப்புக் காணியை கொள்வனவு செய்து நன்கொடையாக வழங்கிய Yarltonian திரு. கணேசபிள்ளை விமலச்சந்திரன் அவர்கள் காணி உறுதியை அதிபரிடம் கையளிக்கும் நிகழ்வும் நடைபெற்றது.

அதிபர் தமது உரையில் கல்லூரிக்காக காணியை கொள்வனவு செய்து நன்கொடையாக வழங்கிய Yarltonian திரு. கணேசபிள்ளை விமலச்சந்திரன்(கனடா) அவர்களுக்கு தனது உளங்கனிந்த நன்றிகளைத் தெரிவித்தார். மேலும் இக்கௌரவிப்பு விழாவிற்கு நிதி அனுசரணையாளர்களாக வருடா வருடம் தங்கள் தந்தையார் அமரர் கந்தையா கணேசன் (தேர்க்காரர், வாரிவளவு) ஞாபகார்த்தமாக செய்துவரும் அவரது பிள்ளைகளுக்கு (கனடா) அதிபர் தனது இதயபூர்வமான நன்றிகளையும் பாராட்டுக்களையும் தெரிவித்தார்.

இம்மாணவர்களுக்கு புத்தகப்பரிசில்களை வழங்கிய கல்லூரியின் ஸ்தாபகர்களின் வழித்தோன்றலும் கொழும்பு QUENCY DISTRIBUTERS உரிமையாளருமான Yarltonian திரு.S. கணநாதன் அவர்களுக்கும் தனது நன்றி பாராட்டினைத் தெரிவித்தார்.

 
கல்லூரி மரதன் ஓட்டப்போட்டிகள் - 2017
Sunday, 26 February 2017 21:57

2017 ஆம் ஆண்டு வருடாந்த இல்ல விளையாட்டுப்போட்டிக்கான மரதன் ஓட்டப்போட்டிகள் 2017.02.03 ஆம் திகதி காலை 6.30 மணிக்கு ஆரம்பமாகி நடைபெற்றன. கல்லூரி அதிபர் திரு.வே.முருகமூர்த்தி அவர்களால் ஆரம்பித்து வைக்கப்பட்டன. ஆண்களுக்கானது காரைநகர் சுற்று வீதியூடாக முழுமையாகவும், பெண்களுக்கானவை துறைமுகத்தில் இருந்து ஆரம்பித்து களபூமி, வலந்தலைச்சந்தியூடாக கல்லூரி முன்றலை வந்தடைந்தது. போட்டியில் பங்குபற்றிய மாணவர்கள் அனைவரும் ஓட்டத்தை முழுமையாக முடித்தமை குறிப்பிடத்தக்க அம்சமாகும்.

போட்டியில் வெற்றியீட்டிய மாணவர்கள்

ஆண்கள்

மாணவர் பெயர் இல்லம்
1 செ.நிறோசன் நாவலர் இல்லம்
2 வி.மனோகரன் இராமநாதன் இல்லம்
3 பே.கஜரூபன் இராமநாதன் இல்லம்
4 கி.கனிஸ்ரன் விபுலானந்தன் இல்லம்
5 ந.கரிகரன் விபுலானந்தன் இல்லம்

பெண்கள்

மாணவர் பெயர் இல்லம்
1 ந.ரஞ்சினி நாவலர் இல்லம்
2 பு.தர்மினி நாவலர் இல்லம்
3 ம.பவித்திரா இராமநாதன் இல்லம்
4 ந.சாந்தினி நாவலர் இல்லம்
5 ந.கயல்விழி நாவலர் இல்லம்
 
கல்லூரியின் ஆரம்பப்பிரிவு மாணவர்களின் இல்ல விளையாட்டுப்போட்டி - 2017
Sunday, 19 February 2017 01:08

மேற்படி விளையாட்டுப்போட்டி யாழ்ற்ரன் கல்லூரி விளையாட்டு மைதானத்தில் 31.01.2017 பி.ப 1.00 மணிக்கு கல்லூரி அதிபர் திரு.வே.முருகமூர்த்தி அவர்கள் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது. பிரதம விருந்தினராக பாலாவோடை இந்துத்தழிழ்க்கலவன் பாடசாலை அதிபர் திரு.ஆ.யோகலிங்கம் அவர்களும் சிறப்பு விருந்தினராக யாழ்ப்பாணம் கணேசன் புடவையக உரிமையாளர் திரு.க.சிவநேசன் அவர்களும் கௌரவ விருந்தினராக ஆலடி வர்த்தகர் திரு.த.மோகனதாஸ் அவர்களும் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

 
கல்லூரி நிறுவுனர் தினம்
Sunday, 05 February 2017 23:26

கல்லூரியின் நிறுவுனர் தினம் 02.02.2017 வியாழக்கிழமை கல்லூரி அதிபர் திரு.வே.முருகமூர்த்தி அவர்கள் தலைமையில் நடைபெற்றது. பிரதமவிருந்தினராக காரைநகர் கோட்டக்கல்வி அதிகாரி திரு.ஆ.குமரேசமூர்த்தி (YARLTONION) அவர்களும்சிறப்பு விருந்தினராக அரசடிக்காடு கதிர்காமசுவாமி கோயில் தேவஸ்தான பிரதமகுரு பிரம்மஸ்ரீ மேருகிரிசர்மா (YARLTONION) அவர்களும் , கௌரவ விருந்தினராக பாடசாலை அபிவிருத்திச் சங்கச் செயலாளர் திரு.வே.சிற்சபேசன் அவர்களும் கலந்து சிறப்பித்தனர். "நாவலரின் சைவப்பாரம்பரியம்" என்ற தலைப்பில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மருத்துவபீட உதவிப் பதிவாளர் திரு.இ.சர்வேஸ்வரா அவர்கள் நினைவுப்பேருரை நிகழ்த்தினார்.

யாழ்ற்ரன் கல்லூரியினை 1961 இல் அரசு பொறுப்பேற்க முன்னர் கல்லூரியை நிர்வகித்த சைவ வித்தியாபரிபாலன சபையின் கல்லூரி முகாமையாளராக சேவையாற்றிய அமரர்கள் S.கணபதிப்பிள்ளை (தலைப்பா), K.S.வேலுப்பிள்ளை, K.S. சோமசுந்தரம், A.T. ஆறுமுகம் ஆகியோரின் திருவுருவப் படங்களுக்கு மாலை அணிவித்து விளக்கேற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது.

 
தரம் 1 மாணவர்களுக்கான கால்கோள் விழா 2017
Saturday, 21 January 2017 16:11

புதிதாகச் சேரும் தரம் 1 மாணவர்களுக்கான கால்கோள் விழா நமது கல்லூரியின் ஆரம்பப்பிரிவின் கோவிந்தர் மண்டபத்தில் 20-01-2017 காலை 9 மணிக்கு கல்லூரி அதிபர் வே. முருகமூர்த்தி அவர்கள் தலைமையில் ஆரம்பமாகி நடைபெற்றது. பிரதம விருந்தினராக காரைநகர் தேசிய சேமிப்பு வங்கியின் முகாமையாளர் திரு. தி. மயூரன் அவர்களும், சிறப்பு விருந்தினராக காரை அபிவிருத்திச் சபையின் பொருளாளர் திரு. க. பாலச்சந்திரன் (yarltonian) அவர்களும் கலந்து சிறப்பித்தனர். மேலும் பாடசாலை அபிவிருத்திச் சங்கத்தின் செயலாளர் திரு. வே. சிற்சபேசன், கல்லூரியின் முன்னாள் ஆரம்பப்பிரிவு முதலவர் திருமதி. ரஞ்சிதா செல்வராசா ஆகியோரும் கலந்து கொண்டனர். அதிபர், பிரதம விருந்தினர், பாடசாலை அபிவிருத்திச் சங்கச் செயலாளர்  ஆகியோரது உரையைத் தொடர்ந்து மாணவர்களின் கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றன.

 
« StartPrev12345678910NextEnd »

Page 2 of 26


Powered by Joomla!.