Our Principal

Banner

Past Principals

  • Mr.K.Kanagasabai
  • Mr.A.Karunananthan
  • Mr.K.Sivaraja
  • Mr.M.Vaithiyanathan
  • Mr.K.Kailainathan
  • Mr.N.Veluppillai
  • Mr.K.K.Nadaraja
  • Mr.S.Pathmanathan
  • Mr.K.K.Senathiraja
  • Mr.N.Paramasivam
  • Mr.K.Somasekaram
கடைசி நாள் நிகழ்வுகள் - 2014
Thursday, 01 January 2015 08:20

2014 ஆம் ஆண்டுக்கான கல்விச் செயற்பாடுகள் இறுதித்தினமான 05-12-2014 அன்று காலைக்கூட்டத்தில் கல்லூரி அதிபர் தலைமையில் முதல் 3 இடங்களைப் பெற்ற மாணவர்களுக்கான தேர்ச்சி அறிக்கைகள் , Optimi Certificate வழங்கல், Super Merit இற்கான பதக்கம் அணிவித்தல், சிறந்த மாணவனுக்கான Principal Award ஆகியவை வழங்கும் நிகழ்வுகள் இடம்பெற்றன. இந்நிகழ்வின் போது கல்லூரியின் பழைய மாணவியான திருமதி. தேவீஸ்வரி கமலச்சந்திரன் அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து சிறப்பித்தார். மேலும் திருமதி. தேவீஸ்வரி கமலச்சந்திரன் அவர்கள் கல்லூரிக்கு செய்த உதவியைப் பாராட்டும் முகமாக பொன்னாடை போர்த்து கௌரவிக்கப்பட்டார்.

பேராதனைப் பல்கலைக்கழக தமிழ் மன்றத்தினரால் நடாத்தப்பட்ட அகில இலங்கை ரீதியான கவிதை ஆக்கப் போட்டியில் முதலாமிடத்தைப் பெற்ற கல்லூரி ஆசிரியர் திரு. பா. பாலமுரளி அவர்களும் அவரது சாதனையைப் பாராட்டி பொன்னாடை போர்த்து கௌரவிக்கப்பட்டார்.

மேலும் தொடர்ந்து மாணவர்களுக்கான தேர்ச்சி அறிக்கைகள், 75 சராசரிக்கு மேல் எடுத்த மாணவர்களுக்கான Optimi Certificate, 90 சராசரி எடுத்த மாணவர்களுக்கான Super Merit பதக்கம் அணிவித்தல் என்பவைகளுடன் இவ்வாண்டு 3 தவணைகளும் Super Merit பெற்ற மாணவர்களுக்கு Yarlton College Principal Award என்ற சிறப்பு விருதும் வழங்கி கெளரவிக்கப்பட்டது.

Super Merit பெறும் மாணவர்கள்

1. செல்வி. பேபிசாமினி ஆனந்தராஜா - தரம் 7A

2. செல்வி கோபிகா யோகேஸ்வரன் - தரம் 9A

Yarlton College Principal Award பெறும் மாணவர்

செல்வி. பேபிசாமினி ஆனந்தராஜா - தரம் 7A

 

Read more...
 
2014 புலமைப்பரிசில் பரீட்சைப் பெறுபேறுகளில் தீவக வலயத்தில் யாழ்ற்ரன் கல்லூரி முன்னிலையில் திகழ்கின்றது.
Thursday, 20 November 2014 22:02

2014 புலமைப்பரிசில் பரீட்சையில் யாழ்ற்ரன் கல்லூரியில் 9 மாணவர்கள் சித்தியடைந்ததன் மூலம் தீவகக் கல்வி வலயத்தில் அதிகூடிய மாணவர்கள் சித்தியடைந்த பாடசாலையாகத் திகழ்ந்து சாதனை படைத்துள்ளது. இப்பரீட்சையில் சித்தியெய்திய மாணவர்களையும் அவர்களைக் கற்பித்த ஆசிரியர்களான திரு.மு.சுகந்தன், திருமதி.வி.புவேந்திரன் ஆகியோரையும் கல்லூரி அதிபர் திரு.வே.முருகமூர்த்தி அவர்கள் பாராட்டுகிறார்.
2012ஆம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையிலும் 2013 ஆம் ஆண்டு க.பொ.த(சா/த) பரீட்சையிலும் யாழ்ற்ரன் கல்லூரி தீவக வலயத்திலேயே முன்னணியில் இருந்தமையை இவ்விணையத்தளம் மூலம் அறிந்திருப்பீர்கள். 2014 புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர் விபரம்

1. 
புஸ்பராசா கஜதீபன்
176
2.
மனோகரன் சுகிர்தா
163
3. நவரத்னம் துளசி
162
4. அரிகரன் கார்த்திகா 160
5. தவராசா அருண்குமார் 156
6. சுரேஸ்குமார் கம்சிகா 156
7. சந்திரசேகரன் அமிர்தா 156
8. பாலச்சந்திரன் யுவராஜ் 151
9. பிரபாகரன் ரேந்தினி 150

 
கண்ணீர் அஞ்சலி
Monday, 27 October 2014 01:20

காரைநகர் வாரிவளவைச் சேர்ந்த திரு. சின்னப்பு கந்தையா கணேசன் (தேர்க்கார) அவர்கள் காலமானதையிட்டு எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக்கொள்கிறோம். யாழ்ற்ரன் கல்லூரி மாணவர்களின் கல்விச் செயற்பாடுகளுக்கு உறுதுணையாகச் செயற்பட்டவரும், கல்லூரியை வளர்க்க வேண்டும் என்ற நல்ல எண்ணம் கொண்டவருமான திரு. கந்தையா கணேசன் அவர்களின் மறைவு எமது கல்லூரிக்கு ஒரு பேரிழப்பாகும். அவருடைய பிரிவால் துயருறும் குடும்பத்தினருக்கு கல்லூரிச் சமூகம் சார்பாக எமது அனுதாபங்களைத் தெரிவிப்பதோடு, அவரின் ஆத்மா சாந்தியடைய வாரிவளவு கற்பக விநாயகரைப் பிரார்த்திக்கிறோம்.

 
கல்லூரியின் 2013 ஆம் ஆண்டிற்கான பரிசுத்தினம்
Saturday, 11 October 2014 22:26

கல்லூரியின் 2013ஆம் ஆண்டிற்கான பரிசுத்தினம் 08.10.2014 புதன்கிழமை மு.ப 9.00மணிக்கு  கல்லூரி அதிபர் திரு. வே.முருகமூர்த்தி அவர்கள் தலைமையில் ஆரம்பமாகி நடைபெற்றது. பிரதம விருந்தினராக கொழும்பு நில அளவைத் திணைக்கள சிரேஷ்ட நில அளவை அத்தியட்சகர் yarltonian திரு. சு.சிவானந்தராஜா அவர்களும் கௌரவ விருந்தினராக இ.போ.ச கோண்டாவில் சாலை பொறியியல் பகுதி உதவி முகாமையாளர் yarltonian திரு. தி.ஏகாம்பரநாதன் அவர்களும் கலந்து சிறப்பித்தனர். பரிசில் பெறும் மாணவர்களின் பெற்றோர்கள், பழைய மாணவர்கள்,சமூகப் பெரியோர்கள், வர்த்தகப் பெருமக்கள் ஆகியோரும் மேலும் கலந்து சிறப்பித்தனர். 2013ற்கான அதிபர் அறிக்கை விருந்தினர் உரை மாணவர்களுக்கான பரிசில் வழங்கல், தேசிய மட்டத்தில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கான பதக்கங்கள் அணிவித்தல் ஆகியவற்றுடன் மாணவர்களின் கலைநிகழ்ச்சிகளுடனும் 2014ஆம் ஆண்டிற்குரிய சிறந்த அதிபருக்குரிய இலங்கை கல்வி அமைச்சினால் வழங்கப்படும் 'பிரதீபா பிரபா' விருது பெற்ற கல்லூரி அதிபர் திரு.வே .முருகமூர்த்தி அவர்கள், பாரியார் சகிதம் பொன்னாடை அணிவித்துக் கௌரவிக்கப்பட்டார். நன்றியுரையுடன் விழா இனிதே நிறைவேறியது.

Read more...
 
கல்லூரியின் பரிசளிப்பு விழா 2014
Sunday, 05 October 2014 13:28

 
கல்லூரி அதிபர் திரு. வே. முருகமூர்த்தி அவர்களுக்கு தீவக வலயத்தில் சிறந்த அதிபருக்கான பிரதீபா பிரபா விருது
Sunday, 05 October 2014 13:12

இலங்கை கல்வி அமைச்சு பாடசாலைகளை சிறந்த முறையில் முகாமைத்துவம் செய்யும் அதிபர்கள், சிறந்த கற்பித்தலை மேற்கொள்ளும் ஆசிரியர்களைத் தெரிவு செய்து இலங்கை ஆசிரியர் தினத்தில் கௌரவிப்பது வழக்கமாகும். இம்முறை கௌரவிப்பதில் கல்லூரி அதிபர் திரு. வேலுப்பிள்ளை முருகமூர்த்தி அவர்கள் இக் கௌரவிப்பாக தீவக வலயத்தில் சிறந்த அதிபராக தெரிவு செய்யப்பட்டுள்ளார். இக் கௌரவிப்பு விருது 06.10.2014 திங்கட்கிழமை மு.ப 10.00 மணிக்கு கொழும்பு தேசிய கல்வி நிறுவனத்தில் இலங்கைக் குடியரசின் கௌரவ பிரதமர் திரு D. M. ஜெயரட்ண அவர்கள் தலைமையில் நடைபெறவுள்ளது.

சிறந்த கணித ஆசிரியராகத் திகழ்ந்து யாழ்ற்ரன் கல்லூரியை அர்ப்பண உணர்வுடன் வழிநடத்திவரும் அதிபர் திரு. வேலுப்பிள்ளை முருகமூர்த்தி அவர்கட்கு கல்லூரி சமூகம் தனது பாராட்டுக்களைத் தெரிவிக்கின்றது.

 
« StartPrev11121314151617181920NextEnd »

Page 11 of 26


Powered by Joomla!.