Our Principal

Banner

Past Principals

  • Mr.K.Kanagasabai
  • Mr.A.Karunananthan
  • Mr.K.Sivaraja
  • Mr.M.Vaithiyanathan
  • Mr.K.Kailainathan
  • Mr.N.Veluppillai
  • Mr.K.K.Nadaraja
  • Mr.S.Pathmanathan
  • Mr.K.K.Senathiraja
  • Mr.N.Paramasivam
  • Mr.K.Somasekaram
Saturday, 07 June 2014 23:42

Mr. A. Karunanandan

(01/10/1948 - 31/08/1949)

யாழ்ப்பாணம் நீராவியடியைச் சேர்ந்தவர். New English School என்ற பெயருடன் ஆரம்பமான இக்கல்லூரி 1947 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 1 ஆம் திகதி உதவி நன்கொடை பெறும் கல்லூரியாகத் தரம் உயரவே புதிய அதிபர் தேவைப்படவே பாடசாலை சமூகத்தினர் திரு. ஐ. கருணானந்தன் B.Sc, M.A, Phd அவர்களை அணுகியபோது இவரும் பாடசாலையை பொறுப்பேற்க இசைந்து கல்லூரிக்கு "Yarlton College" எனவும் தமிழில் "யாழ்நகர்க் கலாசாலை" எனவும் பெயர் சூட்ட வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். இதனை ஏற்ற பாடசாலைச் சமூகத்தினர் New English School என ஆரம்பிக்கப்பட்ட பாடசாலைக்கு Yarlton College (தமிழில் யாழ்நகர்க் கலாசாலை) எனப் பெயர் இட்டனர். எனவே கல்லூரிக்கு இப்பெயரைச் சூட்டிய பெருமை அதிபர் கருணானந்தன் அவர்களையே சாரும். சிறந்த கல்வியியலாளரான இவர் கல்லூரி வளர்ச்சிக்கு அரும்பாடுபட்டார். மாணவர்களுக்கு கற்பிப்பதில் ஆர்வம் காட்டிய அதிபர் அவர்கள் கற்பித்தலை புதிய முறையில் அணுகினார். பரிசோதனைகள், செயற்பாடுகள் மூலம் கற்றல், தேடல், ஆராய்தல் என்பவைகள் இவரின் கற்பிப்பதில் காணப்பட்ட சிறப்பம்சங்களாகும்.

மாணவர்களை மாலை நேரங்களில் விளையாட்டுக்கள் மற்றும் உள்ளக விளையாட்டுக்கள் (குறிப்பாக Table Tennis, Batminton) என்பவற்றில் ஈடுபட வைத்து தானும் அவர்களுடன் சேர்ந்து விளையாடினார். இவர் பதவி உயர்வு பெற்று பேராதனைப் பல்கலைக்கழகத்தில் கல்வித்துறை விரிவுரையாளராக கடமை ஏற்றார். 1980களில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்திலும் கல்வித்துறை விரிவுரையாளராகக் கடமையாற்றினார்.

 


Powered by Joomla!.