Our Principal

Banner

Past Principals

  • Mr.K.Kanagasabai
  • Mr.A.Karunananthan
  • Mr.K.Sivaraja
  • Mr.M.Vaithiyanathan
  • Mr.K.Kailainathan
  • Mr.N.Veluppillai
  • Mr.K.K.Nadaraja
  • Mr.S.Pathmanathan
  • Mr.K.K.Senathiraja
  • Mr.N.Paramasivam
  • Mr.K.Somasekaram
Sunday, 08 June 2014 00:21

 

Mr. K. Sivaraja (1949 - 1967)

இளவாலையைப் பிறப்பிடமாகக் கொண்ட இவர் ஒரு கலைப்பட்டதாரி BA(London) ஆவார். 01.09.1949 இல் கல்லூரி அதிபராகப் பொறுப்பேற்று 18 ஆண்டுகள் 31.12.1967 இல் ஒய்வு பெறும் வரை கல்லூரி அதிபராகச் செயற்பட்டவர். கல்லூரிக்கு தன்னை அர்ப்பணித்து சேவையாற்றிய ஓர் உன்னதமான அதிபர். கல்லூரிக்கு அருகாமையிலேயே வீடு எடுத்து வசித்து வந்தவர். மிகக்குறுகிய காலத்திலேயே ஏனைய பெரிய கல்லூரிகளின் அந்தஸ்த்தைப் பெற்றுள்ளது என்றால் அதிபர் சிவராஜா அவர்களின் ஓர் உயர்த்துடிப்பான சேவை என்றே குறிப்பிட முடியும். இவர் காலத்தில் க. பொ. த (உ/த) வகுப்புக்கள் ஆரம்பிக்கப்பட்டன. மாணவர்களின் ஆங்கிலக்கல்வி உயர்வு பெற்றது. இவரிடம் ஆங்கிலம் கற்று விளங்காத மாணவர் எவரும் இல்லை என இவரின் பழைய மாணவர்கள் அடிக்கடி கூறுவர். இப்பழைய மாணவர்கள் அதிபர் சிவராஜா அவர்களை விழிக்கும் போது "அவர் ஒரு கடவுள்" என்று கூறுவர். மாணவர் ஒழுக்க விழுமியங்களைப் பேணுவதில் கண்டிப்புடன் நடந்து கொண்டவர்.

இவர் காலத்தில் விளையாட்டுத் துறை விருத்தி அடைந்தது. உதைபந்தாட்டக்குழு, கிரிக்கட் குழு என்பன ஆரம்பிக்கப்பட்டன. கல்லூரியின் மேற்குப்புறத்தில் அமைந்த இரசாயன ஆய்வு கூடம், உயிரியல் ஆய்வு கூடம் என்பன கட்டப்பட்டன. சிறந்த தரமான ஆசிரியர்களை கல்லூரிக்கு கொண்டு வருவதில் அக்கறையுடன் செயற்பட்டவர். இவரின் அர்ப்பணமான உன்னதமான சேவையை யாழ்ற்ரன் கல்லூரிச் சமூகம் என்றும் நன்றியுடன் நினைவுகூருகின்றது. ஒய்வுபெற்ற பின்னர் 2 ஆண்டுகளில் 22-11-1970 இல் சிவபதம் அடைந்தார். இவருக்கு அஞ்சலி செலுத்து முகமாக 23-11-1970 அன்று கல்லூரிக்கு விடுமுறையாகப் பிரகடனப்படுத்தப்பட்டது.

 


Powered by Joomla!.