Our Principal

Banner

Past Principals

  • Mr.K.Kanagasabai
  • Mr.A.Karunananthan
  • Mr.K.Sivaraja
  • Mr.M.Vaithiyanathan
  • Mr.K.Kailainathan
  • Mr.N.Veluppillai
  • Mr.K.K.Nadaraja
  • Mr.S.Pathmanathan
  • Mr.K.K.Senathiraja
  • Mr.N.Paramasivam
  • Mr.K.Somasekaram
Sunday, 08 June 2014 00:26

 

Mr. M. Vaithiyanathan

(01/01/1968 - 11/09/1970)

இவர் காரைநகர் ஆலடியைப் பிறப்பிடமாகக் கொண்டவர். கைத்தொழில் இரசாயனத்தில் (Industrial Chemistry) B.Sc (Hons) பட்டம் பெற்றவர். உரும்பிராய் இந்துக் கல்லூரியில் ஆசிரியராகவும், பின் உப அதிபராகவும் கடமை ஆற்றினார். பின்னர் காரைநகர் இந்துக் கல்லூரியில் ஆசிரியராகவும் கடமையாற்றி யாழ்ற்ரன் கல்லூரியில் ஆசிரியராக கடமையேற்றார். 1967 டிசம்பரில் அதிபர் சிவராஜா அவர்கள் ஒய்வு பெற்ற போது 01-01-1968 முதல் அதிபராகப் பொறுப்பேற்றார். இவர் காலத்தில் விஞ்ஞானக் கல்வியை அபிவிருத்தி செய்ய உழைத்தார். மாணவர் ஒழுக்கம், கட்டுப்பாடு என்பவற்றில் மிகவும் கண்டிப்பாகக் கடமை ஆற்றினார். கல்லூரியில் மட்டுமல்ல கல்லூரிக்கு வெளியிலும் மாணவர் ஒழுங்கு, கட்டுப்பாடு என்பவற்றில் அக்கறை செலுத்தினார். கல்லூரியில் சமயக்கல்வி, சமய சம்பிரதாயங்களை மாணவர்கட்கு ஏற்படுத்துவதிலும் முன்னோடியாகச் செயற்பட்டார். இவர் காலத்தில் கல்லூரியின் திறந்தவெளி அரங்கிற்கான மேடை அமைக்கப்பட்டது(1969 இல்). ஓர் ஆன்மீகவாதியான இவர் இங்கிலாந்தில் வசித்த போது சிவபதமடைந்தார்.

 


Powered by Joomla!.