Our Principal

Banner

Past Principals

  • Mr.K.Kanagasabai
  • Mr.A.Karunananthan
  • Mr.K.Sivaraja
  • Mr.M.Vaithiyanathan
  • Mr.K.Kailainathan
  • Mr.N.Veluppillai
  • Mr.K.K.Nadaraja
  • Mr.S.Pathmanathan
  • Mr.K.K.Senathiraja
  • Mr.N.Paramasivam
  • Mr.K.Somasekaram
Sunday, 08 June 2014 00:55

 

Mr. K. K. Senathiraja

(16/08/1989 - 09/08/1992)

காரைநகர் தங்கோடையைப் பிறப்பிடமாகக் கொண்டவர். ஆ. சங்கரப்பிள்ளை தம்பதியினரின் மகனாக 08-06-1932 இல் பிறந்தார். பாடசாலைக் கல்வியை தங்கோடை அமெரிக்கன் மிஷன் பாடசாலையிலும் (சாமி பள்ளிக்கூடம்), யாழ்ப்பாணக் கல்லூரி, மற்றும் காரைநகர் இந்துக் கல்லூரி என்பவற்றிலும் கற்றார். உயர் கல்விக்கு இந்தியா சென்று YMCA உடற்பயிற்சிக் கல்லூரியில் உடற்பயிற்சித்துறையில் சிறப்பான தேர்ச்சி பெற்றார். கொல்க்கத்தா பல்கலைக்கழகத்திலும் பட்டம் பெற்ற பின்னர் இலங்கை மட்டக்களப்பு மாவட்டத்தில் 1959 ஆம் ஆண்டு முதல் 1968 வரை ஆசிரியராக சேவை செய்தார். 1968 இல் யாழ்ற்ரன் கல்லூரிக்கு மாற்றம் பெற்று ஓய்வுபெறும் வரை இக்கல்லூரியில் சேவை செய்தார்.

இவர் காலத்தில் கல்லூரியின் பெற்றோர் ஆசிரியர் சங்க செயலாளராக இருந்து க. பொ. த (உ/த) விஞ்ஞான வகுப்புக்கள் ஆரம்பிக்க உறுதுணையாக இருந்தார். 16-08-1989 இல் அதிபராக பொறுப்பேற்று பல்வேறு வேலைத் திட்டங்களை நடைமுறைப்படுத்தினார். இவரின் காலத்தில் விளையாட்டு மைதானப் பார்வையாளர் மண்டபம் நிறுவப்பட்டமை, தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடையும் மாணவர்களின் கல்வியைத் தொடர தெரிவுப் பாடசாலை ஆக்கியமை, ஆரம்பப் பிரிவுக்கு (கோவிந்தர் பாடசாலை) நிலம் வாங்கப் பெற்று சுற்றுமதில் அமைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. 1991 இல் காரைநகர் மக்கள் இடம்பெயர்ந்தபோது யாழ்ற்ரன் கல்லூரியை நாவலர் பாடசாலையில் மாலை நேரத்தில் இயங்க வைத்தார். 07-06-1992 இல் தனது சேவையில் இருந்து ஒய்வு பெற்ற இவர் 03-06-2007 இல் சிவபதமடைந்தார்.

 


Powered by Joomla!.