Our Principal

Banner

Past Principals

  • Mr.K.Kanagasabai
  • Mr.A.Karunananthan
  • Mr.K.Sivaraja
  • Mr.M.Vaithiyanathan
  • Mr.K.Kailainathan
  • Mr.N.Veluppillai
  • Mr.K.K.Nadaraja
  • Mr.S.Pathmanathan
  • Mr.K.K.Senathiraja
  • Mr.N.Paramasivam
  • Mr.K.Somasekaram
கல்லூரியின் பரிசளிப்புவிழா 2015
Monday, 12 October 2015 02:14

கல்லூரியின் 2015ஆம் ஆண்டுக்கான பரிசளிப்பு விழா 20.09.2015 காலை 9.00 மணிக்கு கல்லூரி அதிபர் வே.முருகமூர்த்தி அவர்கள் தலைமையில் கோலாகலமாக ஆரம்பமாகியது. இந்நிகழ்வின் பிரதம விருந்தினராக வடமாகாணக் கல்வி பண்பாட்டு அமைச்சின் செயலாளர் திரு. இராசா இரவீந்திரன் அவர்கள் கலந்துகொண்டு சிறப்பித்தார்;. மேலும் சிறப்பு விருந்தினராக தீவகக் கல்விவலயத்தின் கல்விப்பணிப்பாளர் திரு. ஜோன்ஸ் குயின்ரஸ் அவர்கள் கலந்து கொண்டார். கௌரவ விருந்தினராக காரைநகர் கல்விக்கோட்ட கோட்டக்கல்விப் பணிப்பாளர் திரு.பு.விக்னேஸ்வரன் அவர்களும், யாழ்ற்ரன் கல்லூரியின் ஓய்வுநிலை ஆரம்பப்பிரிவு முதல்வர் திரு.க.தில்லையம்பலம் அவர்களும், இ.போ.ச. கோண்டாவில் சாலை பொறியியல் பகுதி உதவி முகாமையாளர் திரு. தி. ஏகாம்பரநாதன் அவர்களும் மேலும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

வருடந்தோறும் அமரர் வை.காசிப்பிள்ளை ஞாபகார்த்தமாக நடைபெறும் இவ்விழாவின் அனுசரணையாளராகச் செயற்படும் வைத்திய கலாநிதி சிறிதாரணி விமலன் குடும்பத்தினருக்கு(கனடா) அதிபர் தனது நன்றிகளையும் பாராட்டுகளையும் தெரிவித்தார்.

2014 ஆம் ஆண்டு பொதுப்பரீட்சைகளில் அதிகூடிய சித்திகளைப் பெற்ற மாணவர்களுக்கும், மாகாணமட்டம், தேசியமட்டம் ஆகியவற்றில் சாதனை படைத்த மாணவர்களுக்கும் இவ்விழாவில் பதக்கங்கள் அணிவித்தும், நினைவுச்சின்னங்கள் வழங்கியும் கௌரவிக்கப்பட்டனர்.

 


Powered by Joomla!.