Our Principal

Banner

Past Principals

  • Mr.K.Kanagasabai
  • Mr.A.Karunananthan
  • Mr.K.Sivaraja
  • Mr.M.Vaithiyanathan
  • Mr.K.Kailainathan
  • Mr.N.Veluppillai
  • Mr.K.K.Nadaraja
  • Mr.S.Pathmanathan
  • Mr.K.K.Senathiraja
  • Mr.N.Paramasivam
  • Mr.K.Somasekaram
கல்லூரியின் புலமைப்பரிசில் பரீட்சை 2015 இல் சித்தியடைந்த மாணவர்களுக்கான பாராட்டு வைபவம்
Sunday, 20 December 2015 23:44

மேற்படி விழா 05-12-2015  முற்பகல் 10 மணிக்கு யாழ்ற்ரன் கல்லூரி மண்டபத்தில் அதிபர் திரு.வே. முருகமூர்த்தி அவர்கள் தலைமையில் நடைபெற்றது. பிரதம  விருந்தினராக திரு. சு. கதிர்காமநாதன் (சுவிஸ் நாதன்) அவர்களும், சிறப்பு விருந்தினராக காரைநகர் கோட்டக் கல்விப்பணிப்பாளர் திரு. பு. ஸ்ரீவிக்னேஸ்வரன் அவர்களும், கௌரவ விருந்தினராக காரைநகர் பிரதேச சபை முன்னாள் உறுப்பினர் திரு. க. பாலச்சந்திரன் அவர்களும் கலந்து சிறப்பித்தனர். அதிபர் தனது உரையில் திரு.சு. கதிர்காமநாதன் அவர்கள் கல்லூரிக்கு ஆற்றிய பணிகளைப் பாராட்டினார். மேலும் புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தி பெற்ற மாணவர்களுக்கு நினைவுச்சின்னம்(Memento) வழங்குவதற்கான அனுசரனையாளர்களாக இருந்த அமரர். திரு. கந்தையா கணேசன் (கனடா) அவர்களின் குடும்பத்தினருக்கும் தனது நன்றிகளையும் பாராட்டுக்களையும் தெரிவித்தார். அத்துடன் புத்தகப் பரிசில்களை வழங்கி உதவிய கொழும்பு Quency Distributers உரிமையாளர் திரு. S. கணநாதன் அவர்களுக்கும் அதிபர் தனது நன்றிகளைத் தெரிவித்தார். சித்தியடைந்த மாணவர்களின் பெற்றோரும் விழாவில் கலந்து சிறப்பித்தனர்.

 

 

 


Powered by Joomla!.