Our Principal

Banner

Past Principals

  • Mr.K.Kanagasabai
  • Mr.A.Karunananthan
  • Mr.K.Sivaraja
  • Mr.M.Vaithiyanathan
  • Mr.K.Kailainathan
  • Mr.N.Veluppillai
  • Mr.K.K.Nadaraja
  • Mr.S.Pathmanathan
  • Mr.K.K.Senathiraja
  • Mr.N.Paramasivam
  • Mr.K.Somasekaram
வெகுவிமரிசையாக நடைபெற்ற கல்லூரியின் பரிசளிப்பு விழா
Friday, 03 November 2017 14:43

2017 ஆம் ஆண்டிற்கான யாழ்ற்ரன் கல்லூரியின் பரிசளிப்பு விழா 2017.10.15 ஆம் திகதி மு.ப 9.00 மணிக்கு கல்லூரி அதிபர் திரு. வே. முருகமூர்த்தி அவர்கள் தலைமையில் ஆரம்பமாகி நடைபெற்றது.பிரதம விருந்தினராக இலங்கை மத்திய கல்வி அமைச்சின் செயற்றிட்டப் பணிப்பாளர் YARLTONIAN க. பத்மநாதன் அவர்களும் சிறப்பு விருந்தினராக கொழும்பு Quency Distributers உரிமையாளர் YARLTONIAN சு.கணநாதன் அவர்களும், கௌரவ விருந்தினராக காரைநகர் செல்லப்பா ஸ்ரோஸ் நிறுவன உரிமையாளர் YARLTONIAN வே. சிற்சபேசன் அவர்களும், கௌரவ விருந்தினராக காரைநகர் இ.போ.ச வின் ஓய்வு நிலை முகாரி YARLTONIAN தி.ஏகாம்பரநாதன் அவர்களும் கலந்து சிறப்பித்தனர்.

முதலில் விருந்தினர் கல்லூரியின் மாணவத்தலைவர்கள் அணி ,பான்ட் இசைக்குழு, தமிழ்ப்பாரம்பரிய இசை, நடன குழு ஆகியவற்றுடன் விழா மண்டபத்திற்கு அழைத்து வரப்பட்ட காட்சி பார்வையாளர்களை பரவசமூட்டியது.

தேசியக்கொடி, கல்லூரிக்கொடி ஏற்றப்பட்டு தொடர்ந்து மங்கள விளக்கேற்றலுடன் விழா ஆரம்பமாகியது. அதிபர் தனது பரிசுத்தின அறிக்கையில்

  1. கல்லூரி வரலாற்றில் முதல் தடவையாக க.பொ.த உ/த வர்த்தகப் பிரிவில் 3 பாடங்களில் A சித்திகளை மாணவி சுப்பிரமணியம் மனோகரி பெற்றமை
  2. மாணவி.அ.சசிகலா க.பொ.த உ/த பிரிவில் கைத்தொழில் தொடர்பாடல் தொழில்நுட்ப பாடத்திற்கு (IIT) ஊவா வெல்லச பல்கலைக்கழக அனுமதி பெற்றமை
  3. 2017 ஆம் ஆண்டு தீவகக் கல்வி வலயத்தில் அதிகூடிய மாணவர்களாக 8 மாணவர்கள் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்தமை அவர்களைக் கற்பித்த ஆசிரியர் திரு.மு.சுகந்தன் அவர்களின் சாதனைகள் ஆகியவை மகுடம் வைத்தமை போன்று காணப்படுகின்றது எனக்குறிப்பிட்டார்.

மேலும் அதிபர் தான் 08.12.2017 அன்று ஓய்வு பெற இருப்பதைத் தெரிவித்து தனது சேவைக்காலத்தில் மாணவர்களின் வெற்றிகள், பௌதீகவள முன்னேற்றங்கள் என்பவற்றை மிகவும் தெளிவாக எடுத்துக்காட்டினார்.

அதிபர் மேலும் அறிக்கையில் பிரதம விருந்தினர் க.பத்மநாதன் (YARLTONIAN) அவர்களின் வருகை கல்லூரி அன்னைக்கு பெருமை சேர்ப்பதாகவும் எடுத்துரைத்தார்.

சிறப்பு விருந்தினர் சு. கணநாதன் (YARLTONIAN) அவர்கள் கல்லூரியின் பௌதீக வள வளர்ச்சிக்கு தனக்கு பெரிதும் பங்காற்றி செயற்பட்டமையையும் தெளிவு படுத்தினார்.

கௌரவ விருந்தினர் வே.சிற்சபேசன் (YARLTONIAN) தனது சேவைக்காலத்தில் கல்லூரி முன்னேற்றம் அபிவிருத்தி என்பவற்றில் காட்டிய அக்கறையினை கோடிட்டுக் காட்டினார்.கௌரவ விருந்தினர் தி.ஏகாம்பரநாதன் (YARLTONIAN) அவர்களின் உறவினர்கள் பரிசுத்தினத்திற்கு ஆற்றிவரும் பங்களிப்பினையும் பாராட்டிப்பேசினார்.

மேற்படி விருந்தினர்கள் கல்லூரிக்கு ஆற்றிய சேவையைப் பாராட்டி பொன்னாடை போர்த்து நினைவுப் பட்டயம் வழங்கி கௌரவப் படுத்தப்பட்டனர்.

தொடர்ந்து அதிபர் தனது உரையில் கல்லூரியின் பரிசுத்தின அனுசரணையாளர் (திருமதி) வைத்தியகலாநிதி ஸ்ரீதாரணி விமலன் குடுபம்பத்தினர் (கனடா) 13 ஆண்டு காலமாக பரிசுத்தினத்திற்கு அனுசரணையாளராக இருந்து அவரது பேரனார் திரு.வை காசிப்பிள்ளை ஞாபகார்த்தமாக செய்து வரும் இப்பரிசளிப்பு விழாக் கைங்கரியத்திற்கு அதிபர் தனது பாராட்டுக்களையும் மனம் நிறைந்த நன்றிகளையும் தெரிவித்தார்.

மாணவர்களின் கலைநிகழ்ச்சிகளுடன் பரிசளிப்பு விழா இனிதே நிறைவேறியது.

இத்துடன் கல்லூரி அதிபரின் 2016ஆம் ஆண்டிற்கான பரிசுத்தின அறிக்கையும் இணைக்கப்பட்டுள்ளது.

 

 


Powered by Joomla!.