Friday, 22 October 2010 20:03 |
அதிபரின் செய்தி
கல்லூரி மாணவர்களின் கற்றல் செயற்பாடுகளை மேலும் வினைத்திறனாக்கி மாணவர்களின் அடைவு மட்டத்தை உயர்த்துவதே எமது இன்றைய பாரிய கடமையாகும். பொதுப் பரீட்சைகளில் கல்லூரி மாணவர்களின் பெறுபேறுகள் மேலும் உயர்த்த புதிய திட்டங்கள் உருவாக்கப்படவுள்ளன. சர்வதேச மட்டத்தில் எமது மாணவர்களை இணைத்துக் கொள்ளும் முகமாக பாடசாலை விட்ட பின் விசேட ஆங்கில வகுப்புக்கள், விசேட கணனி வகுப்புக்கள், ஆரம்பிக்கப்பட்டுள்ளன. தரம் 6 – தரம் 10 வரையான மாணவர்களுக்கு இவ் வேலைத்திட்டம் நடைபெறுகின்றது. மாணவர்கள் ஆர்வத்துடன் மகிழ்ச்சியாகவும் கற்கிறார்கள். தற்போது பாடசாலையில் இருக்கின்ற வளங்களை உச்சமாகப் பயன்படுத்தி மாணவர்களின் அன்றாட கற்றல் செயற்பாடுகளை வினைத்திறனும், விளைதிறனும் மிக்கதாக நடைபெறுகின்றன. மாணவர்களின் பாடவிதான செயற்பாடுகள், பாடசாலையின் பௌதீக வளங்கள் என்பவற்றை நன்கு விருத்தி செய்து யாழ்ற்ரன் கல்லூரியை ஓர் உன்னதமான நிலைக்குக் கொண்டு வருவதே எனது இலட்சியம் என்பதை கல்லூரிச் சமூகத்தினருக்கு நான் மகிழ்ச்சியுடன் தெரிவிக்க விரும்புகின்றேன்.
பணிக்கூற்று
சகலருக்கும் மாறும் உலகிற்கேற்ப வாழ்வியற் கல்வி வழங்கல்
நோக்கக்கூற்று
நவீன கல்வி மாற்றத்திற்கேற்ப மாணவர் மையத் தேர்ச்சிக் கல்வி வழங்கலும் வாழ்வியலுக்கு பயன்படும் தன்மையை உறுதிப்படுத்தலும்
|