Our Principal

Banner

Past Principals

  • Mr.K.Kanagasabai
  • Mr.A.Karunananthan
  • Mr.K.Sivaraja
  • Mr.M.Vaithiyanathan
  • Mr.K.Kailainathan
  • Mr.N.Veluppillai
  • Mr.K.K.Nadaraja
  • Mr.S.Pathmanathan
  • Mr.K.K.Senathiraja
  • Mr.N.Paramasivam
  • Mr.K.Somasekaram
விளையாட்டுச் செய்திகள்


கல்லூரி மரதன் ஓட்டப்போட்டிகள் - 2017
Sunday, 26 February 2017 21:57

2017 ஆம் ஆண்டு வருடாந்த இல்ல விளையாட்டுப்போட்டிக்கான மரதன் ஓட்டப்போட்டிகள் 2017.02.03 ஆம் திகதி காலை 6.30 மணிக்கு ஆரம்பமாகி நடைபெற்றன. கல்லூரி அதிபர் திரு.வே.முருகமூர்த்தி அவர்களால் ஆரம்பித்து வைக்கப்பட்டன. ஆண்களுக்கானது காரைநகர் சுற்று வீதியூடாக முழுமையாகவும், பெண்களுக்கானவை துறைமுகத்தில் இருந்து ஆரம்பித்து களபூமி, வலந்தலைச்சந்தியூடாக கல்லூரி முன்றலை வந்தடைந்தது. போட்டியில் பங்குபற்றிய மாணவர்கள் அனைவரும் ஓட்டத்தை முழுமையாக முடித்தமை குறிப்பிடத்தக்க அம்சமாகும்.

போட்டியில் வெற்றியீட்டிய மாணவர்கள்

ஆண்கள்

மாணவர் பெயர் இல்லம்
1 செ.நிறோசன் நாவலர் இல்லம்
2 வி.மனோகரன் இராமநாதன் இல்லம்
3 பே.கஜரூபன் இராமநாதன் இல்லம்
4 கி.கனிஸ்ரன் விபுலானந்தன் இல்லம்
5 ந.கரிகரன் விபுலானந்தன் இல்லம்

பெண்கள்

மாணவர் பெயர் இல்லம்
1 ந.ரஞ்சினி நாவலர் இல்லம்
2 பு.தர்மினி நாவலர் இல்லம்
3 ம.பவித்திரா இராமநாதன் இல்லம்
4 ந.சாந்தினி நாவலர் இல்லம்
5 ந.கயல்விழி நாவலர் இல்லம்
 
கல்லூரியின் ஆரம்பப்பிரிவு மாணவர்களின் இல்ல விளையாட்டுப்போட்டி - 2017
Sunday, 19 February 2017 01:08

மேற்படி விளையாட்டுப்போட்டி யாழ்ற்ரன் கல்லூரி விளையாட்டு மைதானத்தில் 31.01.2017 பி.ப 1.00 மணிக்கு கல்லூரி அதிபர் திரு.வே.முருகமூர்த்தி அவர்கள் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது. பிரதம விருந்தினராக பாலாவோடை இந்துத்தழிழ்க்கலவன் பாடசாலை அதிபர் திரு.ஆ.யோகலிங்கம் அவர்களும் சிறப்பு விருந்தினராக யாழ்ப்பாணம் கணேசன் புடவையக உரிமையாளர் திரு.க.சிவநேசன் அவர்களும் கௌரவ விருந்தினராக ஆலடி வர்த்தகர் திரு.த.மோகனதாஸ் அவர்களும் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

 
கல்லூரியில் உதைபந்தாட்டப் பயிற்சிகள் ஆரம்பமாகின
Sunday, 15 May 2016 23:39

கல்லூரியின் உதைபந்தாட்டக் குழுவை அமைக்கும் பொருட்டு 13 வயதிற்குட்பட்ட மற்றும் 15 வயதிற்குட்பட்ட மாணவர்களுக்கான உதைபந்தாட்டப் பயிற்சிகள் பயிற்றுனர் திரு. S. கருணாகரன் அவர்களால் 09-05-2016 அன்று மு. ப. 9.30 மணிக்கு ஆரம்பித்து வைக்கப்பட்டன. இதற்கான ஆரம்ப நிகழ்வுகள் கல்லூரியின் பிரதான மண்டபத்தில் கல்லூரி அதிபர் தலைமையில் நடைபெற்றன. கல்லூரி அதிபர் தனது உரையில் கல்லூரியில் ஒரு சிறந்த உதைபந்தாட்டக் குழுவை ஏற்படுத்தும் பொருட்டு இப்பயிற்சிகள் பயிற்றுனர் திரு. S. கருணாகரன் அவர்களால் இன்று ஆரம்பித்து வைக்கப்படுகின்றன எனக்குறிப்பிட்டார். இதை ஒழுங்குபடுத்தி உதவிய ஆசிரியர் திரு. த. சிவசோதி அவர்களுக்கு அதிபர் தனது நன்றிகளைத் தெரிவித்தார்.

விளையாட்டு மைதானத்தில் அதிபர் மற்றும் பயிற்றுனர் உதைபந்தாட்ட வீரர்களுடன்

 
கோலாகலமாக நடைபெற்ற கல்லூரியின் 2016 ஆம் ஆண்டிற்கான இல்ல விளையாட்டுப்போட்டி
Friday, 12 February 2016 15:20

கல்லூரியின் வருடாந்த இல்ல விளையாட்டுப்போட்டி 06.02.2016 சனிக்கிழமை பி.ப 1.00 மணிக்கு கல்லூரி அதிபர் திரு.வே.முருகமூர்த்தி அவர்கள் தலைமையில் கோலாகலமாக ஆரம்பமாகி நடைபெற்றது. பிரதம விருந்தினராக வடக்கு மாகாண, மாகாணக்கல்வித் திணைக்களத்தின் நிர்வாகத்துக்கான உதவிக்கல்விப் பணிப்பாளர் திரு.தி.தர்மலிங்கம்(YARLTONIAN) அவர்களும் சிறப்பு விருந்தினராக காரைநகர் கோட்டக்கல்விப் பணிப்பாளர் திரு.ஆ.குமரேசமூர்த்தி(YARLTONIAN) அவர்களும், கௌரவ விருந்தினர்களாக சிவகணேசன் புடைவையக உரிமையாளர் திரு.க.அருள்நேசன்(YARLTONIAN) அவர்களும், காரைநகர் இலங்கை வங்கி முகாமையாளர் திரு.ப.செல்வகுமார் அவர்களும் மற்றும் சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சின் யாழ்மாவட்ட இணைப்பாளர் திரு.க.சிவபாலன்(YARLTONIAN) அவர்களும் கலந்து சிறப்பித்தனர்.

கல்லூரியின் பான்ட் இசைக்குழு மற்றும் இன்னியம் குழு, மாணவத்தலைவர் குழு ஆகியோர் சகிதம் விருந்தினர்கள் அழைத்து வந்த காட்சியும் மாணவர்களின் அணிநடை மரியாதையும், இடைவேளையின் போது நடைபெற்ற மாணவிகளின் இசையும் அசையும் உடற்பயிற்சிக் கண்காட்சியும் பார்வையாளர்களை பிரமிக்க வைத்தமை குறிப்பிடத்தக்கது.

அதிபர் தனது உரையில்

  • விளையாட்டுப்போட்டியின் அனுசரணையாளர் திரு.க.அருள்நேசன் (உரிமையாளர் சிவகணேசன் புடைவையகம்)
  • கல்லூரியின் முதல் அதிபர் அமரர் கருணானந்தம் ஞாபகார்த்தமான வெற்றிக்கேடயங்கள் அளித்த திரு.அ.யோகராசா(சின்னாலடி, காரைநகர்)
  • மேலும் வெற்றிக் கேடயங்களைத் தந்துதவிய கல்லூரின் ஆசிரியர்கள் திருமதி. மனோரஞ்சிதமலர் இராதாகிருஸ்ணன், திருமதி. கவிதா பிரதீஸ்வரன்
  • சைக்கிள் ஓட்டப்போட்டியில்(பெண்கள்) முதல் 5 இடங்களுக்கும் பரிசுப்பொருள் வழங்கிய திரு.சண்முகம் குகதாசன் (வர்த்தகர், கருங்காலி)
  • சைக்கிள் ஓட்டப்போட்டியில்(ஆண்கள்) முதல் 5 இடங்களுக்கும் பரிசுப் பொருள் வழங்கிய திரு.S.நிமலன் (கருங்காலி)
  • அமரர் செல்லப்பா வேலுப்பிள்ளை ஞாபகார்த்தமாக வெற்றிக்கேடயங்களை வழங்கிய திரு.வே.சிற்சபேசன் (சின்னாலடி)
  • பரிசுப்பொருட்களை வழங்கிய திரு.சி.தயாளன் (சின்னாலடி)

ஆகியோர்களுக்கு நன்றிகளையும் பாராட்டுக்களையும் தெரிவித்தார்.

Read more...
 
கல்லூரியின் ஆரம்பப் பிரிவு இல்ல மெய்வல்லுனர் போட்டி 2016
Thursday, 04 February 2016 23:09

மேற்படி போட்டிகள் கல்லூரி மைதானத்தில் 01.02.2016 திங்கட்கிழமை அன்று பி.ப.1.00 மணிக்கு ஆரம்பமாகி கல்லூரி அதிபர் திரு. வே.முருகமூர்த்தி தலைமையில் சிறப்பாக நடைபெற்றது. பிரதம விருந்தினராக தீவகக்கல்வி வலயத்தின் ஓய்வுநிலை கல்விப் பணிப்பாளர்(ஆரம்பக் கல்விப் பிரிவு) திரு. வி. தனிநாயகம் அவர்களும், சிறப்பு விருந்தினராக ஓய்வுநிலை கிராமசேவகர் திரு.தி.சண்முகசுந்தரம் அவர்களும் கலந்து சிறப்பித்தனர். அதிபர் தனது உரையில் இவ்வாரம்பப் பிரிவு விளையாட்டுப்போட்டிக்கு அனுசரணையாளராக செயற்பட்டுவரும் யாழ்ப்பாணம் கே.கே.எஸ் வீதி கணேசன் புடவையக உரிமையாளர் திரு.க.சிவநேசன் அவர்களுக்கு தனது நன்றிகளையும் பாராட்டுகளையும் தெரிவித்தார்.

Read more...
 
« StartPrev1234NextEnd »

Page 1 of 4


Powered by Joomla!.