Our Principal

Banner

Past Principals

  • Mr.K.Kanagasabai
  • Mr.A.Karunananthan
  • Mr.K.Sivaraja
  • Mr.M.Vaithiyanathan
  • Mr.K.Kailainathan
  • Mr.N.Veluppillai
  • Mr.K.K.Nadaraja
  • Mr.S.Pathmanathan
  • Mr.K.K.Senathiraja
  • Mr.N.Paramasivam
  • Mr.K.Somasekaram
விளையாட்டுச் செய்திகள்


வருடாந்த இல்ல மெய்வல்லுனர் போட்டிகளை முன்னிட்டு நடைபெற்ற சைக்கிள் ஓட்ட போட்டி - 2013
Thursday, 07 February 2013 11:23

வருடாந்த இல்ல மெய்வல்லுனர் போட்டிகளை முன்னிட்டு நடைபெற்ற சைக்கிள் ஓட்ட போட்டி 02-02-2013 அன்று நடைபெற்றது

Read more...
 
மரதன் ஓட்டப்போட்டி 2013
Friday, 01 February 2013 10:22

கடந்த வெள்ளிக்கிழமை(25.01.2013) அன்று காரைநகர் சுற்று வீதியைச் சுற்றிய மரதன் ஓட்டப் போட்டி காலை 6.45 மணிக்கு கல்லூரி அதிபர் திரு.வே.முருகமூர்த்தி அவர்களால் ஆரம்பித்து வைக்கப்பட்டது. பெற்றோர், பழைய மாணவர்கள்,பார்வையாளர்களின் பலத்த கரகோஷங்களின் மத்தியில் வீரர்கள் ஓட்டங்களை ஆரம்பித்தனர்.

Read more...
 
Thursday, 29 March 2012 23:21

வலய மட்டக் கரப்பந்தாட்டப் போட்டிகள்

இன்று (11/03/2012) நடைபெற்ற தீவக வலய மட்டக் கரப்பந்தாட்டப் போட்டிகளில் யாழ்ற்ரன் கல்லூரியின் 15 வயதுக்குட்பட்ட ஆண்கள் அணி 2ம் இடத்தைப் பெற்று மாவட்ட மட்டப் போட்டிகளுக்குத் தெரிவாகியுள்ளது.

 

வலைப்பந்தாட்டப் போட்டிகள்

இன்று (10-03-2012) நடைபெற்ற வலய மட்ட வலைப் பந்தாட்டப் போட்டிகளில் யாழ்ற்ரன் கல்லூரி 19 வயதுக்குட்பட்ட பெண்கள் பிரிவு 2ம் இடத்தையும், 17 வயதுக்குட்பட்ட பெண்கள் பிரிவு 3ம் இடத்தையும் பெற்று மாவட்ட மட்டப் போட்டிகளிற்குத் தெரிவாகியுள்ளன.

 
Thursday, 21 October 2010 19:34

வருடாந்த  இல்ல விளையாட்டுப்போட்டி- 2012

கல்லூரியின் 2012 ம் ஆண்டுக்கான வருடாந்த இல்ல விளையாட்டுபோட்டி  28-01-2012 இல் கல்லூரி மைதானத்தில் அதிபர் திரு.வே. முருகமூர்த்தி அவர்கள் தலைமையில் நடைபெற்றது. பிரதம விருந்தினராக தீவக வலயத்தின் திட்டமிடலுக்கான பிரதிக்கல்விப்பணிப்பாளர் திரு.T.ஜோன் குயின்டஸ் அவர்களும் சிறப்பு விருந்தினராக கல்லூரியின் முன்னாள் அதிபர் திரு.ந.பரமசிவம் அவர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

கல்லூரியின் பேண்ட் இசைக்குழு மிகச்சிறந்த முறையில் புதுப்பிக்கப்பட்டு விளையாட்டுப்போட்டியில் விருந்தினர்கள் பேண்ட் வாத்தியக்குழுவினரின் வரவேற்புடன் கல்லூரி நுழைவாசலில் இருந்து மைதானத்துக்கு அழைத்து வரப்பட்டனர். மங்கள விளக்கு ஏற்றப்பட்டு தேசிய கொடியை பிரதம விருந்தினர் அவர்களும் கல்லூரி கொடியை கல்லூரி அதிபர் அவர்களும் ஏற்றி வைத்து மாணவிகளால் தேசிய கீதம், கல்லூரி கீதம், இசைக்கப்பட்டு ஒலிம்பிக் சுடர் பிரதம விருந்தினர் அவர்களால் ஏற்றப்பட்டு விளையாட்டு போட்டிகள் கோலாகலமாக ஆரம்பமாகின.

இடைவேளையின் போது வீராங்கனைகளின் உடற்பயிற்சி  காட்சிகள் சிறந்த முறையில் செய்யப்பட்டு அனைவரினதும் பாராட்டை பெற்றன. இறுதியாக கல்லூரி அதிபர், சிறப்பு விருந்தினர், பிரதம விருந்தினர் ஆகியோரின் உரைகளை தொடர்ந்து சிறப்பு விருந்தினர், பிரதம விருந்தினர் ஆகியோர் வீரர்களுக்கான வெற்றிக்கேடயங்களை வழங்கி கௌரவித்தனர். விளையாட்டுத்துறைச்செயலாளர் திருமதி.கா.கமலாகரன் அவர்களின் நன்றி உரையுடன் போட்டிகள் இனிதே நிறைவேறியது.

 
« StartPrev1234NextEnd »

Page 4 of 4


Powered by Joomla!.