Our Principal

Banner

Past Principals

  • Mr.K.Kanagasabai
  • Mr.A.Karunananthan
  • Mr.K.Sivaraja
  • Mr.M.Vaithiyanathan
  • Mr.K.Kailainathan
  • Mr.N.Veluppillai
  • Mr.K.K.Nadaraja
  • Mr.S.Pathmanathan
  • Mr.K.K.Senathiraja
  • Mr.N.Paramasivam
  • Mr.K.Somasekaram
விளையாட்டுச் செய்திகள்


கல்லூரி மரதன் ஓட்டப் போட்டிகள் - 2016
Monday, 25 January 2016 00:49

கல்லூரியின் 2016 ஆம் ஆண்டிற்கான வருடாந்த இல்ல மெய்வல்லுனர் போட்டிக்கான மரதன் ஓட்டப்போட்டிகள் 17.01.2016 ஞாயிற்றுக்கிழமை காலை 6.00மணிக்கு ஆரம்பமானது. கல்லூரி அதிபர் திரு.வே.முருகமூர்த்தி அவர்களால் ஆசிரியர்கள், மாணவர்கள், கல்லூரிச் சமூகத்தினரின் கரகோசத்துடன் போட்டிகள் ஆரம்பித்து வைக்கப்பட்டன. ஆண்களுக்கான மரதன் ஓட்டம் கல்லூரி முன்றலில் ஆரம்பித்து வேம்படி, வாரிவளவு, வியாவில், களபூமி ஊடாக மீண்டும் கல்லூரி முன்றலில் முடிவடைந்தது. பெண்களுக்கான மரதன் ஓட்டம் காரைநகர் துறைமுகத்திலிருந்து ஆரம்பமாகி களபூமி, வலந்தலைச்சந்தி ஊடாக மீண்டும் கல்லூரி முன்றலை வந்தடைந்தது. போட்டிகள் முடிவடைய நடுவர்களுக்காக நடைபெற்ற தேனீர் விருந்தில் நடுவர்களுக்காக வந்து ஒத்துழைப்பு வழங்கிய அனைத்து நடுவர்களுக்கும், அம்புலன்ஸ் சேவையை வழங்கிய காரைநகர் வைத்தியசாலை வைத்திய அதிகாரிக்கும் அதிபர் தனது நன்றிகளையும் பாராட்டுக்களையும் தெரிவித்தார்.

வீதியோட்டம் ஆண்கள்

1ம் இடம் செ.நிறோசன் நாவலர் இல்லம்
2ம் இடம் ம.சஞ்ஜீவன் நாவலர் இல்லம்
3ம் இடம் த.கீர்த்தனன் விபுலானந்தர் இல்லம்
4ம் இடம் இ.தயாரூபன் நாவலர் இல்லம்
5ம் இடம் க.தர்சன் விபுலானந்தர் இல்லம்

வீதியோட்டம் பெண்கள்

1ம் இடம் சௌ.நிரோஜமலர் நாவலர் இல்லம்
2ம் இடம் ம.நவநிலா நாவலர் இல்லம்
3ம் இடம் மோ.றோசி நாவலர் இல்லம்
4ம் இடம் சி.சுகிர்தா நாவலர் இல்லம்
5ம் இடம் ப.யாழினி விபுலானந்தர் இல்லம்
கல்லூரியின் 2016 ஆம் ஆண்டிற்கான வருடாந்த இல்ல மெய்வல்லுனர் போட்டிக்கான மரதன் ஓட்டப்போட்டிகள் 17.01.2016 ஞாயிற்றுக்கிழமை காலை 6.00மணிக்கு ஆரம்பமானது. கல்லூரி அதிபர் திரு.வே.முருகமூர்த்தி அவர்களால் ஆசிரியர்கள், மாணவர்கள், கல்லூரிச் சமூகத்தினரின் கரகோசத்துடன் போட்டிகள் ஆரம்பித்து வைக்கப்பட்டன. ஆண்களுக்கான மரதன் ஓட்டம் கல்லூரி முன்றலில் ஆரம்ப்பித்து வேம்படி, வாரிவளவு, வியாவில், களபூமி ஊடாக மீண்டும் கல்லூரி முன்றலில் முடிவடைந்தது. பெண்களுக்கான மரதன் ஓட்டம் காரைநகர் துறைமுகத்திலிருந்து ஆரம்பமாகி களபூமி, வலந்தலைச்சந்தி ஊடாக மீண்டும் கல்லூரி முன்றலை வந்தடைந்தது. போட்டிகள் முடிவடைய நடுவர்களுக்காக நடைபெற்ற தேனீர் விருந்தில் நடுவர்களுக்காக வந்து ஒத்துழைப்பு வழங்கிய அனைத்து நடுவர்களுக்கும், அம்புலன்ஸ் சேவையை வழங்கிய காரைநகர் வைத்தியசாலை வைத்திய அதிகாரிக்கும் அதிபர் தனது நன்றிகளையும் பாராட்டுக்களையும் தெரிவித்தார்.
வீதியோட்டம் ஆண்கள்
1ம் இடம் செ.நிறோசன் நாவலர் இல்லம்
2ம் இடம் ம.சஞ்ஜீவன் நாவலர் இல்லம்
3ம் இடம் த.கீர்த்தனன் விபுலானந்தர் இல்லம்
4ம் இடம் இ.தயாரூபன் நாவலர் இல்லம்
5ம் இடம்   க.தர்சன் விபுலானந்தர் இல்லம்
வீதியோட்டம்பெண்கள்
1ம் இடம் சௌ.நிரோஜமலர் நாவலர் இல்லம்
2ம் இடம் ம.நவநிலா நாவலர் இல்லம்
3ம் இடம் மோ.றோசி நாவலர் இல்லம்
4ம் இடம் சி.சுகிர்தா நாவலர் இல்லம்
5ம் இடம் ப.யாழினி விபுலானந்தர் இல்லம்

 

Read more...
 
கல்லூரியின் வருடாந்த இல்ல மெய்வல்லுநர் போட்டி - 2015
Sunday, 22 February 2015 16:27

கல்லூரியின் வருடாந்த இல்ல மெய்வல்லுநர் போட்டி  15ம் திகதி ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 1.00 மணிக்கு கல்லூரி மைதானத்தில் அதிபர் வே.முருகமூர்த்தி அவர்கள் தலைமையில் நடைபெற்றது. பிரதம விருந்தினராக வடமாகாணக் காணி ஆணையாளர் பொ.தயானந்தா அவர்களும் சிறப்பு விருந்தினர்களாக தீவக வலயப் பிரதிக்கல்விப் பணிப்பானர் இ. ஜெனால்ட்அன்ரனி, காரைநகர் கோட்டக் கல்விப் பணிப்பாளர் பு. ஸ்ரீவிக்னேஸ்வரன் ஆகியோரும் கௌரவ விருந்தினர்களாக இலங்கை வங்கி காரைநகர் கிளை முகாமையாளர் வி.விஜயகுமார், வர்த்தகர் க. அருள்நேசன் ஆகியோரும் கலந்துகொண்டனர்.

Read more...
 
கல்லூரியின் ஆரம்பப்பிரிவு(கோவிந்தர் பள்ளிக்கூடம்) மாணவர்களுக்கான விளையாட்டுப்போட்டி
Saturday, 21 February 2015 01:54

கல்லூரியின் ஆரம்பப்பிரிவு(கோவிந்தர் பள்ளிக்கூடம்) மாணவர்களுக்கான விளையாட்டுப்போட்டி கல்லூரியின் விளையாட்டு மைதானத்தில் வெள்ளிக்கிழமை பி.ப.2 மணிக்கு கல்லூரி அதிபர் வே. முருகமூர்த்தி அவர்கள் தலைமையில் நடைபெற்றது. பிரதம விருந்தினராக காரைநகர் தபாலகத்தின் தபாலதிபர் திரு.தி. சக்திதாசன் அவர்கள் கலந்து சிறப்பித்தார்.

Read more...
 
2015ஆம் ஆண்டிற்கான வருடாந்த இல்ல விளையாட்டுப் போட்டியின் ஆண்களுக்கும் பெண்களுக்குமான சைக்கிள் ஓட்டப்போட்டிகள்
Sunday, 01 February 2015 21:18

யாழ்ற்ரன் கல்லூரியின் 2015ஆம் ஆண்டிற்கான வருடாந்த இல்ல விளையாட்டுப் போட்டியின் ஆண்களுக்கும் பெண்களுக்குமான சைக்கிள் ஓட்டப்போட்டிகள் கல்லூரி முன்றலில் 28-01-2015 காலை 6.15 மணிக்கு கல்லூரி அதிபர் திரு.வே.முருகமூர்த்தி அவர்களால் ஆரம்பித்து வைக்கப்பட்டன.

 

 

முதல் மூன்றிடங்களையும் பெற்ற மாணவர் விபரம்.

ஆண் சைக்கிள் ஓட்டம் - 2015

பெயர் இல்லம் இடம்
செ.நிரோசன் நாவலர் 1ம் இடம்
செ.நிமலன் விபுலானந்தர் 2ம் இடம்
க.கஜந்தன் நாவலர் 3ம் இடம்

பெண்கள் சைக்கிள் ஓட்டம் - 2015

பெயர் இல்லம் இடம்
மோ.கிர்சிகா நாவலர் 1ம் இடம்
க. காயத்திரி நாவலர் 2ம் இடம்
உ.துவாரகா நாவலர் 3ம் இடம்

 

Read more...
 
கல்லூரியின் வருடாந்த இல்ல விளையாட்டுப்போட்டி - 2014
Tuesday, 11 February 2014 16:59

கல்லூரியின் வருடாந்த இல்ல விளையாட்டுப்போட்டி 08/02/2014 அன்று பி.ப. 1.00 மணிக்கு கல்லூரி அதிபர் திரு. வே. முருகமூர்த்தி அவர்கள் தலைமையில் கோலாகலமாக ஆரம்பமானது. பிரதம விருந்தினராக கலந்து கொண்ட தீவக வலய பிரதிக்கல்விப் பணிப்பாளர் திரு. இ. குணநாதன் அவர்களும், சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட கல்விக் காருண்யன் திரு.E.S.P. நாகரத்தினம் அவர்களும், கௌரவ விருந்தினரான சுன்னாகம் தேசிய சேமிப்பு வங்கி அதிகாரம் அளிக்கப்பட்ட உத்தியோகத்தர் திரு. க. சிவகுமார் அவர்களும், கல்லூரி அதிபர், ஆசிரியர்கள், பழைய மாணவர் சங்க உறுப்பினர்கள், பாடசாலை அபிவிருத்திச்சங்க உறுப்பினர்கள் ஆகியோர் சகிதம், கல்லூரிக் கொடியை ஏந்திய மாணவத் தலைவர் அணியினாலும், கல்லூரியின் Band இசைக்குழுவினராலும் கல்லூரி முன்றலிலிருந்து விளையாட்டு மைதானம் வரை அழைத்து வரப்படும் காட்சி மிகவும் சிறப்பானதாக அமைந்திருந்தது. மங்கள விளக்கேற்றல், கொடியேற்றத்துடன் ஆரம்பமாகிய இல்ல விளையாட்டுப் போட்டி பிற்பகல் 5.30 மணிக்கு இனிதே நிறைவேறியது. இடைவேளையின் போது நடைபெற்ற மாணவர்களின் உடற்பயிற்சிக் கண்காட்சி பார்வையாளர்களைப் பரவசப்படுத்தியது. இறுதியாக அதிபர், விருந்தினர்கள் உரை நடைபெற்றது. அதிபர் தனது உரையில் மாணவர்களின் கல்விமட்டம் மிகவும் சிறப்பாக முன்னேறி வரும் அதேவேளை மாணவர்கள் விளையாட்டிலும் இன்னும் முன்னேற வேண்டி இருப்பதை எடுத்துக்கூறினார்.  பிரதம விருந்தினர் தனது உரையில் விளையாட்டுப் போட்டிகள் நன்கு திட்டமிடப்பட்டு, ஒழுங்கமைக்கப்பட்டு நடைப்பெற்றதாகவும் கல்லூரியின் Band இசைக்குழு தேசிய பாடசாலையின் Band இசைக்குழுவின் செயற்பாடுகளை ஒத்திருந்ததாகவும் வெகுவாகப் பாராட்டினார். சிறப்பு விருந்தினர் தனது உரையில் மாணவர்களின் கற்றல் செயற்பாடுகளில் பெற்றோர் அதீத அக்கறை காட்ட வேண்டும் என்பதை வலியுறுத்தினார். கௌரவ விருந்தினர் தனது உரையில் கல்லூரியின் முன்னேற்றத்தினை வெகுவாகப் பாராட்டினார். கல்லூரியின் பல பழைய, மூத்த மாணவர்களும் கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ்களை வழங்கி கௌரவித்தனர். பெரும் எண்ணிக்கையான பெற்றோர்களும், பழைய மாணவர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தமை குறிப்பிடத்தக்க அம்சமாகும்.

 

அதிபர் தனது உரையில் ஞாபகார்த்தக் கேடயங்களையும், பரிசுப்பொருட்களையும் வழங்கிய பின்வருவோருக்கு தனது மனமார்ந்த நன்றிகளையும் பாராட்டுக்களையும் தெரிவித்தார்.

  1. கந்தையா கணேசன் - வாரிவளவு, காரைநகர் (கனடா)
    வாரிவளவு நல்லியக்கச் சபை ஸ்தாபகர் அமரர். பத்மநாதன் (பட்டு மாமா) ஞாபகார்த்தமாக கேடயம் வழங்கப்பட்டது

  2. வேலுப்பிள்ளை சிற்சபேசன் - சின்னாலடி காரைநகர்
    இவரது தந்தையாரும் கல்லூரி ஸ்தாபகர்களில் ஒருவருமான அமரர்.செல்லப்பா வேலுப்பிள்ளை ஞாபகார்த்தமாக வழங்கப்பட்டது

  3. ஆரம்பப்பிரிவு விளையாட்டுப் போட்டிக்கு பரிசுப்பொருள் வழங்கி உதவிய
    • திரு.க.சிவநேசன் - கணேசன் டெக்ஸ்டைல்ஸ், யாழ்ப்பாணம்
    • திரு. க. அருள்நேசன் - சிவகணேசன் டெக்ஸ்டைல்ஸ் யாழ்ப்பாணம்
  4. மயூரன் ஸ்டோர்ஸ், ஆலடி, காரைநகர்

  5. இலங்கை வங்கி, தேசிய சேமிப்பு வங்கி, காரைநகர்

  6. பெயர் குறிப்பிட விரும்பாத ஒரு பழைய மாணவர்

  7. விளையாட்டுப் பொருட்களை வழங்கிய திரு. S. ஸ்ரீவரதன்

 

வெற்றி பெற்ற இல்லங்களின் நிலைகள் வருமாறு

நாவலர் இல்லம் - 1ம் இடம்

இராமநாதன் இல்லம்  - 2ம் இடம்

விபுலானந்தர் இல்லம் - 3ம் இடம்

Read more...
 
« StartPrev1234NextEnd »

Page 2 of 4


Powered by Joomla!.